#விதிப்படியல்ல...
*****************
ருசியோடு ஒரு மருத்துவமனை
உன் வீட்டின் சமயலறை!
மேற்கத்திய சிகிச்சை முறை
உன் மரணத்தின் தொடக்க உரை...
நம் இயற்கை மருத்துவ வழி முறை...
அந்த மரணத்திற்கே முடிவுரை!
கருஞ்சீரகமும்,பெருஞ்சீரகம்
மணக்க மணக்க
நோய் தீர்க்கும் மா மருந்து...
அது...
புற்று நோயை பூட்டிவைக்கும்
சுகாதார பூ விருந்து!
மஞ்சள் என்னும்
கிருமி நாசினியின் மகத்துவம்
தெரியுமோ?
வேனல் நீக்கும்
வெந்தயத்தைத்தான் உனக்கு
புரியுமோ?
நடமாடும்
மருத்துவ சாலை உன் வீடு..
உன் வாழ்வு வண்டி
அதில் பயணிக்க அனுமதி கூறு!
உன் தலையணையின்
அடியிலிருக்கும் சுகாதாரமே
உன் வீட்டு அஞ்சறைப்பெட்டி...
ஆனாலும் நீ,
நோயை இருத்திக்கொண்டு
பாய் போல் படுத்துக்கிடக்கிறாய்
சோம்பலைக் கொட்டி!
இனியேனும் அருகிலிருக்கும்
சமையல் கூடத்தின்
நிவாரணம் உணர்...
ஆங்கில மருந்தென்பது
உன்னை ஏமாற்றித்தொலைக்கும்
தற்காலிகத் திமிர்!
உன் நெஞ்சுச் சளியை தீர்க்கும்
இஞ்சி, மிளகு பற்றிதான் நீ
அறிந்திருக்கிறாயா?
இரத்தத்தை சுத்திகரித்து
இதயத்தை பலப்படுத்தும்
வெங்காய வேகத்தைத்தான்
நீ உணர்ந்திருக்கிறாயா?
பச்சை மிளகாயின் பலம் தெரியுமா?
அதன் பலன்தான் உனக்கு புரியுமா?
ஆங்கில மருத்துவர்கள் உன்னை
அடி மடையனாக்கி பிழைக்கும்
வியாபாரத் தந்திரத்தை யோசி...
பொது புத்தி கொண்ட அவன்,
தேகம் மெலிந்த உன்னவர்களிடம்
ஆப்பிள் அற்புத சத்தன்றே
சாதித்து விட்டான் பேசி...
ஒரு வாழைப் பழத்திற்கு
நான்கு ஆப்பிளே சமம் என்பதை
மட்டும் மறுத்து விட்டான்...
கூகுலில் தேடி வாசி!
உன் சக்கரை நோய்க்கு ஒட்டுமொத்த
பழங்களிலும் மருந்துண்டு என்பதை
ஏனோ? மறைத்து விட்டான்...
உடற்கேட்டை உண்டாக்கும்
மைதாவையும், கோதுமையையும்
நல்லதெனச் சொல்லி பொய்யையும்
அவிழ்த்து விட்டான்...
நல்ல அரிசி,பலகாரங்களுக்குள்தானே
இனிப்பு நோயையும் புதைத்து விட்டான்...
அரிசி உணவென்பது நம் ஆயுளை
கூட்டிப் பெருக்கி நோயைக் கழிக்கும்
கணக்கு வாத்தியார் என்பதையோ
ஒளித்து விட்டான்!
தானாக விளைந்ததெல்லாம் மருந்துகள்
உனக்காகவிளைத்ததெல்லாம்விசங்கள்!
பப்பாளியின் மருத்துவ குணத்துக்கு
ஒப்பாக ஒன்று சொல் பார்ப்போம்?
வெள்ளைச் சக்கரையின்
வெளிச்ச வேதனையை புரியாது இருட்டுக்குள் வைத்தே
புசித்துக் கொண்டிருக்கிறாய்...
நாட்டுச்சக்கரையின் நலன்
தெரியாது!
ஆங்கில வலி மருந்து உன்
சிறு நீரகத்தை கொத்தியொழிக்கும்
கரு நாகப் பருந்து என்பதை உணர்!
அயோடின் உப்பு மருத்துவர்களின்
வாயை பூட்டிப்போட்ட அயோக்கியத்
தப்பு தெரியுமோ?
மேற்கத்தி அரக்கன் தன் மருந்தை விற்க
மடையனாக்கிவிட்டான் உன்னை...
விழித்துக்கொள் நண்பா...
எல்லாம் விதிப்படியல்ல, அனைத்தும்
ஆங்கில நயவஞ்சகத்தின் சதிப்படி!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.