உங்களுக்கு நீங்களே
வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள்
ஆச்சரியமாக இருக்கின்றதா..?
இதை படித்து முடித்த பின்னால் பாருங்கள் நீங்களும் ஒரு வைத்தியராக தான் இருப்பீர்கள்
அப்படியான ஒரு பதிவுதான் இது
முதலில் மனிதன் நோய் இல்லாமல் இருப்பதற்கும் நோயுடன் இருப்பதற்கும் என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும்
கண்டறிவதற்காக சித்தர்கள் சொன்ன சில வழிமுறைகளை இப்போது பார்ப்போம்
வாதம் பித்தம் சிலேத்துமம் எனும் முக்குணங்களும் நமது உடலில் மாறுபடாமல் இருந்தால் நமக்கு எந்த நோயும் வருவதில்லை இந்தக் குணங்களில் மாறுபாடு ஏற்பட்டு விட்டால் எல்லா நோய்களும் நமக்குள்ளே வந்துவிடுகிறது
முக்குணங்கள் மாறுபாட்டால் நோய்கள் வருகின்றது என்பதனை அறிந்து கொண்டோம் எனவே நமது உடலில் முக்குணங்களில் எது ஒன்று அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டால் போதும் அடுத்த நொடியே நமக்கு நாமே வைத்தியம் செய்து கொள்ள தயாராகி விடுவோம்
அதற்கான வழிகள்
நமது உடலில் வாதத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்
1 உடலெங்கும் வலிகள் உண்டாகும்
2 உடலில் அடிக்கடி புரட்டல் ஏற்படும்
3 நெஞ்சு கரிப்பதுடன் புளித்த ஏப்பம்
வரும்
4 உடலில் வாதம் ஏற்பட்டு விட்டால் எச்சில் சுவை சற்று புளிப்பாக இருக்கும்
5 சிறுநீரின் நிறம் தண்ணீரைப் போல வென்மையானதாக இருக்கும்
இதுவே வாதம் மிகுதியானால்உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
வாத குணம் உள்ளவர்கள் பகலில் தூங்கக் கூடாது
அடுத்து
நமது உடலில் பித்தத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்
1 கண்களில் பீளை வழியும்
2 அடிக்கடி தலைவலி உண்டாகும்
3உடலில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விட்டாலும் உடனே காய்ச்சல் வந்துவிடும்
.
4 நாக்கில் வறட்சி உண்டாகும்
5 எச்சிலின் சுவை சற்று கசப்பானதாக இருக்கும்
6 கை கால்களில் எரிச்சல் உண்டாகும்
7 சிறுநீரின் நிறம் சற்று மஞ்சளாக இருக்கும்
இதுவே பித்தம் மிகுதியானால்
உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
பித்த குணம் உள்ளவர்கள் கடும் வெயிலில் உலாவக் கூடாது
அடுத்து
நமது உடலில் சிலேத்துமத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்
1 உடலில் அடிக்கடி சளி உண்டாகும்
2 இளம் வெயிலில் சென்றால் கூட அதிகமாக வியர்வை சுரக்கும்
3 சில நேரங்களில் நெஞ்சு வலி உண்டாகும்
4 எச்சிலின் சுவை சற்று இனிப்பானதாக இருக்கும்
5 அடிக்கடி தொண்டையில் கபம் கட்டிக் கொள்ளும்
இதுவே சிலேத்துமம் அதிகமானால் உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
சிலேத்தும குணமுள்ளவர்கள் குளிர்ச்சியான பொருட்களை உண்ணக் கூடாது குளிர் காற்றில் உலாவ கூடாது
நமது உடலில் எந்த குணம் மிகுதியாக இருக்கிறது என்பதை மேலே சொன்ன அறிகுறிகள் மூலமாக நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம்
சரி
வாதத்தின் குணம் அதிகமாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டால்
அதற்கான வைத்திய முறை
தேவையான பொருட்கள்
இஞ்சி 500 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
செய்முறை
இஞ்சியின் மேல்தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு விட வேண்டும் இதில் சுத்தமான தேனை ஊற்றி நன்றாக கிளறி பத்துநாட்கள் இதை வெயிலில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்
இதுவே வாத குணத்தை சம நிலைப்படுத்தும் மருந்து
இதை காலை வேளையில் மட்டும் ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் இதனால் வாதம் என்கின்ற குணம் சமநிலைப்படும்
பித்தத்தின் குணம் நமது உடலில் அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொண்டால்
அதற்கான வைத்திய முறை
தேவையான பொருட்கள்
சுக்கு 500 கிராம்
தரமான பனை வெல்லம் 500 கிராம்
செய்முறை
.
சுக்கின் மேல் தோலை சீவிவிட்டு இதை சூரணம் செய்து கொள்ளவேண்டும் இதனுடன் பனை வெல்லத்தையும் தூள் செய்து சுக்குடன் கலந்து பத்திரப்படுத்தி கொள்ளவும்
இதுவே பித்த குணத்தை சமநிலைப்படுத்தும் மருந்து
இதை மதிய வேளையில் ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் பித்தக் குணம் சமநிலைப்படும்
அடுத்து
சிலேத்துமத்தின் குணம் நமது உடலில் அதிகமாக இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டால்
அதற்கான வைத்திய முறை
தேவையான பொருள்
நல்ல உயர்தரமான கடுக்காய் ஒரு கிலோ
செய்முறை
கடுக்காயை உடைத்து கடுக்காயின் விதையை நீக்கி விடவேண்டும் மேல் தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும் இதை தண்ணீர் சம பாதியாக கலந்த பசும் பாலில் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும் அதன் பின் இதை சூரணம் செய்துகொண்டு பத்திரப்படுத்திக் கொள்ளலாம்
இதுவே சிலேத்துமத்தை சமநிலைப்படுத்தும் மருந்து
இதை மாலை வேளையில் ஒரு மண்டல காலம் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வருவதினால் இதன் பயனாக நமது உடலில் உள்ள சிலேத்துமத்தின் குணங்கள் சமநிலை பட்டுபடும்
அறிகுறிகளை வைத்து நோய்களை கண்டறிய முடியாதவர்களுக்கும் ஒரு உபாயம் இருக்கின்றது மேலே சொன்ன மூன்று மருந்துகளையும் சொல்லிய வண்ணம் செய்து வைத்துக்கொண்டு காலை மதியம் மாலை என மூன்று வேளையும் மூன்று மருந்துகளையும் முறையாக ஒரு மண்டல காலம் இந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதன் விளைவாக நமது உடலில் இருக்கும் வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற மூன்று குணங்களும் சமநிலை பட்டு இதனால் உடலில் தோன்றிய நோய்கள் அனைத்தும் நீங்குவதற்கு இந்த மூன்று மருந்துகளும் உதவியாக இருக்கும்
பெரியதொரு பத்தியம் இல்லாமல் எல்லோரும் சாப்பிட கூடிய ஒரு மருத்துவ முறை தான் இது இதை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது
இல்லறவாசிகளுக்கு இது ஒரு எளிதான காயகல்பமாகும்
இந்த சிறிய வைத்தியமுறையால் அப்படி என்ன ஒரு பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கலாம் நிஜம்தானா என்ற கேள்வியும் எழலாம் இந்தக் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய பாடல் வரியை பார்ப்போம்
காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் தானுன்ன
கோலை ஊன்றி குனிந்து நடப்பவன்
குமாரனாகி குலாவத் துடிப்பானே
பாடலுக்கு உண்டான அர்த்தம் என்னவென்றால்
காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய்
என ஒரு மண்டல காலம் உண்ண வேண்டும் அப்படி சாப்பிட்டு வருவதினால் கோலை ஊன்றி குனிந்து நடப்பவன் கூட குமரனின் சக்தியை பெறுபவனாக மாறி விடுவான் என்பதே இதன் அர்த்தம்
அப்படி என்ன ஒரு அற்புதம் இந்த மருந்தினால் நடந்துவிடப் போகிறது என்பதை பார்ப்போமா பார்ப்போம் வாருங்கள்
இந்த மருந்துக்கு வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற முக்குணங்களை சமநிலை படுத்தும் ஆற்றல் இருக்கின்றது முக்குணங்களை சமநிலை படுத்துவதினால் நமது உடலில் நோய்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல்
ரத்தமும் நன்றாக ஊறும்
விந்து சுரப்பும் அதிகரிக்கும்
நமது உடலில் உள்ள சப்த தாதுக்களான நிணநீர் இரத்தம் தசை கொழுப்பு எலும்பு மச்சை சுக்கிலம் என்கின்ற அனைத்தும் பலம் பெறுவதற்காக இந்த மருந்து பயன்படுகின்றது என்பதை சொல்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்
இப்படியான ஒரு மருந்தை நீங்களே செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
அதன் விளைவாக நல்ல
நல்லதொரு பயன்களை அடைந்து
நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் என்பதனையும் இங்கே பதிவு செய்கின்றேன்
இந்தப் பதிவை படித்து முடித்துவிட்டீர்கள்
இப்போது இந்த மருந்தை செய்ய தயாராகி இருப்பீர்கள்
இப்போது சொல்லுங்கள் நீங்களும் வைத்தியர் தானே
ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது
நன்றிகளும்
பிரியங்களும்.