Monday, 21 June 2021

ஒத்து போகுதல்

*'இணங்குவதால் பிழையில்லை  ''*            
      
      
         
       
       
    
         
நம்மில் பெரும்பாலானோர் சூழ்நிலைக்கு ஏற்ப இணக்கமாகச் செல்கிறோம். ஆனால் எப்போது இணக்கமாகச் செல்ல வேண்டும். எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்...

மற்றவர்களுடன் இணங்கிப் போவது என்பது ஒருவரின் பண்பினையும், பணிவையும் குறிக்கும்...

பணிவு என்பது சிலரின் கணிப்பில் இயலாமை என்று பிழையான எண்ணங்களை கருத்தில் கொள்ளாதீர்கள்...

இணங்கிப் போகிறவர்கள் கோழைகளும் அல்ல. அஞ்சி நடப்பவர்களும் அல்ல...

அவர்கள் அறிவுடன் கூடிய திறமையாளர்கள். இத்தகைய திறமையாளர்கள் எனப் பெயர் வரக் காரணம் இணங்கிப் போகும் அறிவும், புலமைக் கூர்மையும், திறமையும் தான் என்பதை யாரும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை...

இருந்தாலும் அனைவருக்கும் பிடித்தாற்போல் இணங்கி வாழ்ந்து வந்தால் சில வேளைகளில் நாம் நம் சுயம் இழப்பது உறுதி...

ஓர் உயிருள்ள கிணற்றுத் தவளை , வீட்டின் சமையலறையில், அடுப்பில் பற்ற வைத்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து விட்டது. 

தண்ணீரின் வெப்பம் கூடக் கூட தவளை தன் உடம்பின் வெப்பநிலையை சூழ்நிலை வெப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வந்தது... 

அதன் தன்மை அத்தகையது. தண்ணீர் அதன் கொதிநிலையை (100℃) அடையும் போது வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முற்பட்டது…

ஆனால் முடியவில்லை. காரணம் உடலின் வெப்ப நிலையை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வந்ததால் அது வலுவிழந்துப் போய் விட்டது…

அதுமட்டுமல்ல , பாவம் சிறிது நேரத்தில் அந்தத் தவளையும் இறந்தே போய் விட்டது…

தவளையைக் கொன்றது எது...? எளிதில் கூறி விடலாம் …கொதிநீர் தான் தவளையைக் கொன்று விட்டது என்று...

ஆனால் உண்மை அதுவல்ல. எப்போது குதித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத தவளையின் அந்த இயலாமை தான் அதைக் கொன்று விட்டது...

இணங்கிப் போகும் ஒருவருக்கு, மற்றவர்களும் இணங்கிப் போவார்கள்.

நீங்கள் பிறருக்கு ''இணங்கிப் போவது'' என்கிற பாடத்தை, கற்பிப்பதில் முன்னோடியாகத் திகழுங்கள்...

Sunday, 20 June 2021

எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி*

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*

ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*

வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*

ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி*

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்*

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி*

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி*

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி*

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி*

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி*

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாழை பொடி*

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

நன்றி வணக்கம்.

Saturday, 12 June 2021

பானை

#தமிழர்_வாழ்வியலில் பயன்பாட்டில் இருந்த 
#மண்பானை வகைகளும் அதன் #பயன்களும்.. 

1. #அஃகப்பானை – (தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை)  

2. அஃகுப்பானை – வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.

3. #அகட்டுப்பானை – நடுவிடம் பருத்த பானை

4. அடிசிற்பானை – சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.

5. #அடுக்குப்பானை – நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.

6. அரசாணிப்பானை – திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.

7. #உசும்பியபானை – உயரம் மிகுந்த பானை.

8. உறிப்பானை – உறியில் வைத்தற்கு ஏற்ற பானை

9. #எஃகுப்பானை – இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை

10. எழுத்துப்பானை – எழுத்துகள் வரையப் பெற்ற பானை

11. #எழுப்புப்பானை – உயரம் வாய்ந்த பானை

12. ஒறுவாயப்பானை – விளிம்பு சிதைந்த பானை

13. #ஓதப்பானை – ஈரப் பானை

14. ஓர்மப்பானை – திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை

15. #ஓரிப்பானை – தனிப் பானை, ஒல்லியான பானை

16. ஓவியப்பானை – ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை

17. #கஞ்சிப்பானை – கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை

18. கட்டப்பானை – அடிப்பகுதி வனையப்படாத பானை

19. #கட்டுப்பானை – மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )

20. கதிர்ப்பானை – புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை

21. #கரகப்பானை – கரவப்பானை – நீர்க்கரகம்

22. கரிப்பானை – கரி பிடித்த பானை

23. #கருப்புப்பானை – முழுவதுமாகக் 
கருநிளம் வாய்ந்த பானை

24. கருப்பு – சிவப்புபானை – உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை

25. #கலசப்பானை – கலயம், கலசம், கலம், நீர்க்கலம்

26. கழுநீர்ப்பானை – அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)

27. #காடிப்பானை – கழுநீர்ப் பானை

28. காதுப்பானை – விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை

29. #குண்டுப்பானை – உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை

30. குறைப் பானை – அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)

31. #கூடைப்பானை – கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை

32. கூர்முனை பானை – அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை

33. கூர்ப் பானை – கூர் முனைப் பானை

34. #கூழ்ப்பானை – கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை

35. கோளப் பானை – உருண்டு திரண்ட பானை

36. சருவப் பானை – மேற்புறம் அகற்சியாகவும் – கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.

37. #சவப்பானை – சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி

38. சவலைப் பானை – நன்கு வேகாத பானை, மெல்லிய பானை

39. சன்னப் பானை – மெல்லிய பானை, கனமில்லாத பானை

40. சாம்பல் பானை – கையால் செய்யப் பெற்ற பானை

41. சொண்டுப் பானை – கனத்த விளிம்புடைய பானை

42. #சோற்றுப்பானை – சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை

43. சில்லுப் பானை – மிகச் சிறிய பானை

44. சின்ன பானை – சிறிய பானை

45. #தவலைப்பானை – சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)

46. திடமப் பானை – பெரிய பானை (திடுமுப் பானை)

47. திம்மப் பானை – பெரும்பானை (திம்மம் – பருமம்)

48. துந்திப் பானை – தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை

49. தொண்ணைப் பானை – குழிவார்ந்த பானை

50. தோரணப் பானை – கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை

51. #தோள்பானை – தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை

52. நாற்கால் பானை – நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை

53. பச்சைப் பானை – சுடப்பெறாத பானை

54. படரப்பானை – அகற்ற – பெரிய பானை

55. பிணப் பானை – சவப்பானை, ஈமத்தாழி

56. பொள்ளற் பானை – துளையுள்ள பானை (பொள்ளல் பானை)

57. பொங்கல் பானை – பொங்கல் விழாவிற்குரிய பானை

58. #மங்கலக்கூலப்பானை – திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை

59. மடைக்கலப் பானை – திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை

60. மிண்டப் பானை – பெரிய பானை

61. மிறைப் பானை – வளைந்து உயர்ந்த பானை

62. முகந்தெழு பானை – ஏற்றப் பா

63. முடலைப் பானை – உருண்டையுருவப் பானை

64. #முரகுப்பானை – பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)

65. மொங்கம் பானை – பெரும் பானை (மொங்கான் பானை)

66. மொட்டைப் பானை – கழுத்தில்லாத பானை

67. #வடிநீர்ப்பானை – நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்

68. வழைப் பானை – வழவழப்பான புதுப்பானை

69. #வெள்ளாவிப்பானை – துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை.

தொப்புள்

நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு...

62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது. இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டு விட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்.

*அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான்.* 

தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

*நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான்.*

அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம். காரணம் *ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.*

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். 

*தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.*

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. 

நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.
   
தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு,  முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
*கண்கள் வறட்சி நீங்க, குறைந்த பார்வை சரியாக.. பளபளப்பான தலைமுடி பெற... மெருகூட்டப்பட்ட  சருமம் பெற.*

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

*முழங்கால் வலி குணமடைய*

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

*நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட, சருமத்திலிருந்து நிவாரணம் பெற.*

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி  கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

*தொப்புளில் ஏன் எண்ணெய் விட வேண்டும்..?*

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். 

அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.

*சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும்.*

எண்ணெய்யும் அவ்வாறே வேலை செய்கிறது.

Thursday, 29 April 2021

உங்களுக்கு நீங்களே

உங்களுக்கு நீங்களே
வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆச்சரியமாக இருக்கின்றதா..?

    இதை படித்து முடித்த பின்னால் பாருங்கள் நீங்களும் ஒரு வைத்தியராக தான் இருப்பீர்கள்

அப்படியான ஒரு பதிவுதான் இது

    முதலில் மனிதன் நோய் இல்லாமல் இருப்பதற்கும் நோயுடன் இருப்பதற்கும் என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும்
   
    கண்டறிவதற்காக சித்தர்கள் சொன்ன சில வழிமுறைகளை இப்போது பார்ப்போம்

    வாதம் பித்தம் சிலேத்துமம் எனும் முக்குணங்களும் நமது உடலில் மாறுபடாமல் இருந்தால் நமக்கு எந்த நோயும் வருவதில்லை இந்தக் குணங்களில் மாறுபாடு ஏற்பட்டு விட்டால் எல்லா நோய்களும் நமக்குள்ளே வந்துவிடுகிறது 

      முக்குணங்கள் மாறுபாட்டால் நோய்கள் வருகின்றது என்பதனை அறிந்து கொண்டோம் எனவே நமது உடலில் முக்குணங்களில் எது ஒன்று அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டால் போதும் அடுத்த நொடியே நமக்கு நாமே வைத்தியம் செய்து கொள்ள தயாராகி விடுவோம்
   
அதற்கான வழிகள்

நமது உடலில் வாதத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்

1 உடலெங்கும் வலிகள் உண்டாகும்

2 உடலில் அடிக்கடி புரட்டல் ஏற்படும்

3 நெஞ்சு கரிப்பதுடன் புளித்த ஏப்பம்          
    வரும்

4 உடலில் வாதம் ஏற்பட்டு விட்டால்              எச்சில்  சுவை  சற்று  புளிப்பாக இருக்கும்

5 சிறுநீரின் நிறம் தண்ணீரைப் போல வென்மையானதாக இருக்கும்

இதுவே வாதம் மிகுதியானால்உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
வாத குணம் உள்ளவர்கள் பகலில் தூங்கக் கூடாது

அடுத்து

நமது உடலில் பித்தத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்

1 கண்களில் பீளை வழியும்

2 அடிக்கடி தலைவலி உண்டாகும்

3உடலில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விட்டாலும் உடனே காய்ச்சல் வந்துவிடும்
.
4 நாக்கில் வறட்சி உண்டாகும்

5 எச்சிலின் சுவை சற்று கசப்பானதாக இருக்கும்

6 கை கால்களில் எரிச்சல் உண்டாகும்

7 சிறுநீரின் நிறம் சற்று மஞ்சளாக இருக்கும்

இதுவே பித்தம் மிகுதியானால்
உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
பித்த குணம் உள்ளவர்கள் கடும் வெயிலில் உலாவக் கூடாது

அடுத்து

நமது உடலில்  சிலேத்துமத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்

1 உடலில் அடிக்கடி சளி உண்டாகும்

2 இளம் வெயிலில் சென்றால் கூட அதிகமாக வியர்வை சுரக்கும்

3 சில நேரங்களில் நெஞ்சு வலி உண்டாகும்

4 எச்சிலின் சுவை சற்று இனிப்பானதாக இருக்கும்

5 அடிக்கடி தொண்டையில் கபம் கட்டிக் கொள்ளும்

இதுவே சிலேத்துமம் அதிகமானால் உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
சிலேத்தும குணமுள்ளவர்கள் குளிர்ச்சியான பொருட்களை உண்ணக் கூடாது குளிர் காற்றில் உலாவ கூடாது

   நமது உடலில் எந்த குணம் மிகுதியாக இருக்கிறது என்பதை மேலே சொன்ன அறிகுறிகள் மூலமாக நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம்

சரி

வாதத்தின் குணம் அதிகமாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டால்

அதற்கான வைத்திய முறை

தேவையான பொருட்கள்

இஞ்சி 500 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்

செய்முறை

     இஞ்சியின் மேல்தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு விட வேண்டும் இதில் சுத்தமான தேனை ஊற்றி நன்றாக கிளறி பத்துநாட்கள் இதை வெயிலில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்
    
   இதுவே வாத குணத்தை சம நிலைப்படுத்தும் மருந்து 

இதை காலை வேளையில் மட்டும் ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் இதனால் வாதம் என்கின்ற குணம் சமநிலைப்படும்

பித்தத்தின் குணம் நமது உடலில் அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொண்டால்

அதற்கான வைத்திய முறை

தேவையான பொருட்கள்

சுக்கு 500 கிராம்
தரமான பனை வெல்லம் 500 கிராம்

செய்முறை
.
    சுக்கின் மேல் தோலை சீவிவிட்டு இதை சூரணம் செய்து கொள்ளவேண்டும் இதனுடன் பனை வெல்லத்தையும் தூள் செய்து சுக்குடன் கலந்து பத்திரப்படுத்தி கொள்ளவும்

     இதுவே பித்த குணத்தை சமநிலைப்படுத்தும் மருந்து

     இதை மதிய வேளையில் ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் பித்தக் குணம் சமநிலைப்படும் 

அடுத்து

      சிலேத்துமத்தின் குணம் நமது உடலில் அதிகமாக இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டால்

அதற்கான வைத்திய முறை

தேவையான பொருள்

நல்ல உயர்தரமான கடுக்காய் ஒரு கிலோ

செய்முறை

    கடுக்காயை உடைத்து கடுக்காயின் விதையை நீக்கி விடவேண்டும் மேல் தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும் இதை தண்ணீர் சம பாதியாக கலந்த பசும் பாலில் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும் அதன் பின் இதை சூரணம் செய்துகொண்டு பத்திரப்படுத்திக் கொள்ளலாம்

இதுவே சிலேத்துமத்தை சமநிலைப்படுத்தும் மருந்து

    இதை மாலை வேளையில் ஒரு மண்டல காலம் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வருவதினால் இதன் பயனாக நமது உடலில் உள்ள சிலேத்துமத்தின் குணங்கள் சமநிலை பட்டுபடும்

       அறிகுறிகளை வைத்து நோய்களை கண்டறிய முடியாதவர்களுக்கும் ஒரு உபாயம் இருக்கின்றது மேலே சொன்ன மூன்று மருந்துகளையும் சொல்லிய வண்ணம் செய்து வைத்துக்கொண்டு காலை  மதியம் மாலை என மூன்று வேளையும் மூன்று மருந்துகளையும் முறையாக ஒரு மண்டல காலம் இந்த மருந்தை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதன் விளைவாக நமது உடலில் இருக்கும் வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற மூன்று குணங்களும் சமநிலை பட்டு இதனால் உடலில் தோன்றிய நோய்கள் அனைத்தும் நீங்குவதற்கு இந்த மூன்று மருந்துகளும் உதவியாக இருக்கும்

     பெரியதொரு பத்தியம் இல்லாமல் எல்லோரும் சாப்பிட கூடிய ஒரு மருத்துவ முறை தான் இது இதை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது  

இல்லறவாசிகளுக்கு இது ஒரு எளிதான காயகல்பமாகும்

     இந்த சிறிய வைத்தியமுறையால் அப்படி என்ன ஒரு பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கலாம் நிஜம்தானா என்ற கேள்வியும் எழலாம் இந்தக் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய பாடல் வரியை பார்ப்போம்

காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் தானுன்ன 
கோலை ஊன்றி குனிந்து நடப்பவன்
குமாரனாகி குலாவத் துடிப்பானே

பாடலுக்கு உண்டான அர்த்தம் என்னவென்றால்

காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய்

      என ஒரு மண்டல காலம் உண்ண வேண்டும் அப்படி சாப்பிட்டு வருவதினால் கோலை ஊன்றி குனிந்து நடப்பவன் கூட குமரனின் சக்தியை பெறுபவனாக மாறி விடுவான் என்பதே இதன் அர்த்தம்

      அப்படி என்ன ஒரு அற்புதம் இந்த மருந்தினால் நடந்துவிடப் போகிறது என்பதை பார்ப்போமா பார்ப்போம் வாருங்கள்

    இந்த மருந்துக்கு வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற முக்குணங்களை சமநிலை படுத்தும் ஆற்றல் இருக்கின்றது முக்குணங்களை சமநிலை படுத்துவதினால் நமது உடலில் நோய்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல்

ரத்தமும் நன்றாக ஊறும்
விந்து சுரப்பும் அதிகரிக்கும்

      நமது உடலில் உள்ள சப்த தாதுக்களான நிணநீர் இரத்தம் தசை கொழுப்பு எலும்பு மச்சை சுக்கிலம் என்கின்ற அனைத்தும் பலம் பெறுவதற்காக இந்த மருந்து பயன்படுகின்றது என்பதை சொல்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்  

     இப்படியான ஒரு மருந்தை நீங்களே செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 

அதன் விளைவாக நல்ல

         நல்லதொரு பயன்களை அடைந்து 
நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் என்பதனையும் இங்கே பதிவு செய்கின்றேன்

 இந்தப் பதிவை படித்து முடித்துவிட்டீர்கள் 

இப்போது இந்த மருந்தை செய்ய தயாராகி இருப்பீர்கள் 
இப்போது சொல்லுங்கள் நீங்களும் வைத்தியர் தானே

ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது

நன்றிகளும்
பிரியங்களும்.

Sunday, 25 April 2021

விதிப்படியல்ல

#விதிப்படியல்ல...
*****************

ருசியோடு ஒரு மருத்துவமனை 
உன் வீட்டின் சமயலறை!

மேற்கத்திய சிகிச்சை முறை
உன் மரணத்தின் தொடக்க உரை...

நம் இயற்கை மருத்துவ வழி முறை...
அந்த மரணத்திற்கே முடிவுரை!

கருஞ்சீரகமும்,பெருஞ்சீரகம்
மணக்க மணக்க 
நோய் தீர்க்கும் மா மருந்து...

அது...
புற்று நோயை பூட்டிவைக்கும் 
சுகாதார பூ விருந்து!

மஞ்சள் என்னும் 
கிருமி நாசினியின் மகத்துவம்
தெரியுமோ?

வேனல் நீக்கும் 
வெந்தயத்தைத்தான் உனக்கு 
புரியுமோ?

நடமாடும் 
மருத்துவ சாலை உன் வீடு..

உன் வாழ்வு வண்டி
அதில் பயணிக்க அனுமதி கூறு!

உன் தலையணையின்
அடியிலிருக்கும் சுகாதாரமே
உன் வீட்டு அஞ்சறைப்பெட்டி...

ஆனாலும் நீ,
நோயை இருத்திக்கொண்டு
பாய் போல் படுத்துக்கிடக்கிறாய்
சோம்பலைக் கொட்டி!

இனியேனும் அருகிலிருக்கும் 
சமையல் கூடத்தின்
நிவாரணம் உணர்...

ஆங்கில மருந்தென்பது 
உன்னை ஏமாற்றித்தொலைக்கும்
தற்காலிகத் திமிர்!

உன் நெஞ்சுச் சளியை தீர்க்கும்
இஞ்சி, மிளகு பற்றிதான் நீ
அறிந்திருக்கிறாயா?

இரத்தத்தை சுத்திகரித்து 
இதயத்தை பலப்படுத்தும் 
வெங்காய வேகத்தைத்தான்
நீ உணர்ந்திருக்கிறாயா?

பச்சை மிளகாயின் பலம் தெரியுமா?
அதன் பலன்தான் உனக்கு புரியுமா?

ஆங்கில மருத்துவர்கள் உன்னை
அடி மடையனாக்கி பிழைக்கும்
வியாபாரத் தந்திரத்தை யோசி...

பொது புத்தி கொண்ட அவன்,
தேகம் மெலிந்த உன்னவர்களிடம்
ஆப்பிள் அற்புத சத்தன்றே
சாதித்து விட்டான் பேசி...

ஒரு வாழைப் பழத்திற்கு
நான்கு ஆப்பிளே சமம் என்பதை 
மட்டும் மறுத்து விட்டான்...
கூகுலில் தேடி வாசி!

உன் சக்கரை நோய்க்கு ஒட்டுமொத்த
பழங்களிலும் மருந்துண்டு என்பதை
ஏனோ? மறைத்து விட்டான்...

உடற்கேட்டை உண்டாக்கும்
மைதாவையும், கோதுமையையும்
நல்லதெனச் சொல்லி பொய்யையும்
அவிழ்த்து விட்டான்...

நல்ல அரிசி,பலகாரங்களுக்குள்தானே
இனிப்பு நோயையும் புதைத்து விட்டான்...

அரிசி உணவென்பது நம் ஆயுளை  
கூட்டிப் பெருக்கி நோயைக் கழிக்கும்
கணக்கு வாத்தியார் என்பதையோ
ஒளித்து விட்டான்!

தானாக விளைந்ததெல்லாம் மருந்துகள்
உனக்காகவிளைத்ததெல்லாம்விசங்கள்!

பப்பாளியின் மருத்துவ குணத்துக்கு
ஒப்பாக ஒன்று சொல் பார்ப்போம்?

வெள்ளைச் சக்கரையின் 
வெளிச்ச வேதனையை புரியாது இருட்டுக்குள் வைத்தே 
புசித்துக்  கொண்டிருக்கிறாய்...

நாட்டுச்சக்கரையின் நலன் 
தெரியாது!

ஆங்கில வலி மருந்து உன்
சிறு நீரகத்தை கொத்தியொழிக்கும்
கரு நாகப் பருந்து என்பதை உணர்!

அயோடின் உப்பு மருத்துவர்களின்
வாயை பூட்டிப்போட்ட அயோக்கியத்
தப்பு தெரியுமோ?

மேற்கத்தி அரக்கன் தன் மருந்தை விற்க
மடையனாக்கிவிட்டான் உன்னை...

விழித்துக்கொள் நண்பா...
எல்லாம் விதிப்படியல்ல, அனைத்தும்
ஆங்கில  நயவஞ்சகத்தின் சதிப்படி!

Thursday, 11 March 2021

1008_லிங்கங்கள்


1008_லிங்கங்கள்

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த ஆயிரத்து எட்டு லிங்கங்கள் என்னென்ன என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அதை இங்கு தருகிறேன். இனிமேல் அது என்ன என்று தெரியாமல் இருக்காதீங்க ஃபிரண்ட்ஸ் !!

#1008_லிங்கம் 

1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி லிங்கம் 10 அங்கி லிங்கம் 11 அங்கு லிங்கம் 12 அசரிய லிங்கம் 13 அசுர லிங்கம் 14 அசை லிங்கம் 15 அசோக லிங்கம் 16 அச்சு லிங்கம் 17 அஞ்சா லிங்கம் 18 அட்ட லிங்கம் 19 அட்ச லிங்கம் 20 அட்சதை லிங்கம் 21 அட்டோ லிங்கம் 22 அடிமுடி லிங்கம் 23 அடி லிங்கம் 24 அணணா லிங்கம் 25 அண்ட லிங்கம் 26 அணி லிங்கம் 27 அணு லிங்கம் 28 அத்தி லிங்கம் 29 அதழ் லிங்கம் 30 அதிபதி லிங்கம் 31 அதிர்ஷ்ட லிங்கம் 32 அதிய லிங்கம் 33 அதிசய லிங்கம் 34 அதீத லிங்கம் 35 அந்தார லிங்கம் 36 அந்தி லிங்கம் 37 அநந்தசாயி லிங்கம் 38 அநலி லிங்கம் 39 அநேக லிங்கம் 40 அப்ப லிங்கம் 41 அப்பு லிங்கம் 42 அபய லிங்கம் 43 அபி லிங்கம் 44 அபிநய லிங்கம் 45 அபிஷேக லிங்கம் 46 அம்பல லிங்கம் 47 அம்பி லிங்கம் 48 அம்புசி லிங்கம் 49 அம்ம லிங்கம் 50 அமல லிங்கம் 51 அமர லிங்கம் 52 அமராவதி லிங்கம் 53 அமிர்த லிங்கம் 54 அர்ச்சனை லிங்கம் 55 அர்ச்சுண லிங்கம் 56 அர்த்த லிங்கம் 57அரச லிங்கம் 58 அரவ லிங்கம் 59 அரங்க லிங்கம் 60 அரம்பை லிங்கம் 61 அரளி லிங்கம் 62 அரி லிங்கம் 63 அரிணி லிங்கம் 64 அரிமா லிங்கம் 65 அருக லிங்கம் 66 அருணை லிங்கம் 67 அருமணி லிங்கம் 68 அரும்பு லிங்கம் 69 அருளி லிங்கம் 70 அரூப லிங்கம் 71 அல்லி லிங்கம் 72 அலை லிங்கம் 73 அவைய லிங்கம் 74 அழகு லிங்கம் 75 அளத்தி லிங்கம் 76 அற லிங்கம் 77 அறிவு லிங்கம் 78 அன்பு லிங்கம் 79 அன்புரு லிங்கம் 80 அன்ன லிங்கம் 81 அனுதாபி லிங்கம் 82 அனுபூதி லிங்கம் 83 அஷ்ட லிங்கம் 84 ஆக்கை லிங்கம் 85 ஆகம லிங்கம் 86ஆகாய லிங்கம் 87 ஆசான லிங்கம் 88 ஆசிரிய லிங்கம் 89 ஆசி லிங்கம் 90 ஆட லிங்கம் 91 ஆடரி லிங்கம் 92 ஆண் லிங்கம் 93 ஆண்டி லிங்கம் 94 ஆணுரு லிங்கம் 95 ஆத்ம லிங்கம் 96 ஆதார லிங்கம் 97 ஆதி லிங்கம் 98 ஆதிரி லிங்கம் 99 ஆதிசேவி லிங்கம் 100 ஆதிரை லிங்கம் 101 ஆதினா லிங்கம் 102 ஆபேரி லிங்கம் 103 ஆமிர லிங்கம் 104 ஆமை லிங்கம் 105 ஆய லிங்கம் 106 ஆயதி லிங்கம் 107 ஆர்த்தி லிங்கம் 108 ஆரண்ய லிங்கம் 109 ஆரண லிங்கம் 110 ஆராதனை லிங்கம் 111 ஆராபி லிங்கம் 112 ஆரூர லிங்கம் 113 ஆரோக்ய லிங்கம் 114 ஆலகால லிங்கம் 115 ஆலவாய் லிங்கம் 116 ஆலால லிங்கம் 117 ஆலி லிங்கம் 118 ஆவார லிங்கம் 119 ஆவி லிங்கம் 120 ஆவே லிங்கம் 121 ஆவுடை லிங்கம் 122 ஆழி லிங்கம் 123 ஆனந்த லிங்கம் 124 இக்கு லிங்கம் 125 இசை லிங்கம் 126 இடப லிங்கம் 127 இணை லிங்கம் 128 இதய லிங்கம் 129 இந்திர லிங்கம் 130 இமய லிங்கம் 131 இமை லிங்கம் 132 இரட்டை லிங்கம் 133 இராம லிங்கம் 134 இலக்கிய லிங்கம் 135 இலாப லிங்கம் 136 இளைய லிங்கம் 137 இறவா லிங்கம் 138 இறை லிங்கம் 139 இனிமை லிங்கம் 140 ஈகை லிங்கம் 141 ஈசான்ய லிங்கம் 142 ஈட லிங்கம் 143 ஈடண லிங்கம் 144 ஈடித லிங்கம் 145 ஈடிலி லிங்கம் 146 ஈர்ப்பு லிங்கம் 147 ஈழ லிங்கம் 148 ஈஸ்வர லிங்கம் 149 ஈஸ்வரி லிங்கம் 150 உக்ர லிங்கம் 151 உச்சி லிங்கம் 152 உசித லிங்கம் 153 உடம்பி லிங்கம் 154 உடுக்கை லிங்கம் 155 உணர் லிங்கம் 156 உத்தம லிங்கம் 157 உத்ராட்ச லிங்கம் 158 உதய லிங்கம் 159 உதிர லிங்கம் 160 உப்பிலி லிங்கம் 161 உப்பு லிங்கம் 162 உப லிங்கம் 163 உபதேச லிங்கம் 164 உபய லிங்கம் 165 உமா லிங்கம் 166 உமை லிங்கம் 167 உயிர் லிங்கம் 168 உரி லிங்கம் 169 உரு லிங்கம் 170 உருணி லிங்கம் 171 உருமணி லிங்கம் 172 உவப்பு லிங்கம் 173 உழவு லிங்கம் 174 உழுவை லிங்கம் 175 உற்சவ லிங்கம் 176 உன்னி லிங்கம் 177 ஊக்க லிங்கம் 178 ஊசி லிங்கம் 179 ஊதா லிங்கம் 180 ஊருணி லிங்கம் 181 ஊழி லிங்கம் 182 ஊற்று லிங்கம் 183 எட்டி லிங்கம் 184 எட்டு லிங்கம் 185 எதனா லிங்கம் 186 எந்தை லிங்கம் 187 எம லிங்கம் 188 எருது லிங்கம் 189 எல்லை லிங்கம் 190 எளிய லிங்கம் 191 எழிலி லிங்கம் 192 எழுத்தறி லிங்கம் 193 என்குரு லிங்கம் 194 ஏக லிங்கம் 195 ஏகம லிங்கம் 196 ஏகா லிங்கம் 197 ஏகாம்பர லிங்கம் 198 ஏகாந்த லிங்கம் 199 ஏடக லிங்கம் 200 ஏந்திழை லிங்கம் 201 ஏம லிங்கம் 202 ஏர் லிங்கம் 203 ஏரி லிங்கம் 204 ஏவச லிங்கம் 205 ஏழிசை லிங்கம் 206 ஏறு லிங்கம் 207 ஏனாதி லிங்கம் 208 ஐங்கர லிங்கம் 209 ஐய லிங்கம் 210 ஐராவத லிங்கம் 211 ஒப்பிலா லிங்கம் 212 ஒப்பிலி லிங்கம் 213 ஒருமை லிங்கம் 214 ஒளி லிங்கம் 215 ஓசை லிங்கம் 216 ஓடேந்தி லிங்கம் 217 ஓம் லிங்கம் 218 ஓம்கார லிங்கம் 219 ஓவிய லிங்கம் 220 ஔடத லிங்கம் 221 ஔவை லிங்கம் 222 கங்கா லிங்கம் 223 கச்ச லிங்கம் 224 கண்ட லிங்கம் 225 கடம்ப லிங்கம் 226 கடார லிங்கம் 227 கடிகை லிங்கம் 228 கடை லிங்கம் 229 கதிர் லிங்கம் 230 கதலி லிங்கம் 231 கந்த லிங்கம் 232 கபால லிங்கம் 233 கபில லிங்கம் 234 கமல லிங்கம் 235 கயா லிங்கம் 236 கயிலை லிங்கம் 237 கர்ண லிங்கம் 238 கர்ப்ப லிங்கம் 239 கரண லிங்கம் 240 கரு லிங்கம் 241 கருட லிங்கம் 242 கருமை லிங்கம் 243 கருணை லிங்கம் 244 கல்ப லிங்கம் 245 கல்வி லிங்கம் 246 கலி லிங்கம் 247கலை லிங்கம் 248 கவி லிங்கம் 249 கற்பக லிங்கம் 250 கற்பூர லிங்கம் 251 கன்னி லிங்கம் 252 கன லிங்கம் 253 கனக லிங்கம் 254 கனி லிங்கம் 255 கஸ்தூரி லிங்கம் 256 கஜ லிங்கம் 257 கருணாகர லிங்கம் 258 காசி லிங்கம் 259 காஞ்சி லிங்கம் 260 காடக லிங்கம் 261 காத்த லிங்கம் 262 காதம்பரி லிங்கம் 263 காந்த லிங்கம் 264 காப்பு லிங்கம் 265 காம லிங்கம் 266 கார் லிங்கம் 267கார்த்திகைலிங்கம் 268 காரண லிங்கம் 269 கால லிங்கம் 270 காவி லிங்கம் 271காவிய லிங்கம் 272 காவேரி லிங்கம் 273 காளி லிங்கம் 274 காளத்தி லிங்கம் 275 காளை லிங்கம் 276 கான லிங்கம் 277கிண்கிணி லிங்கம் 278 கிரி லிங்கம் 279 கிரியை லிங்கம் 280 கிரீட லிங்கம் 281 கிருப லிங்கம் 282 கிள்ளை லிங்கம் 283 கீத லிங்கம் 284 கீர்த்தி லிங்கம் 285 கீர்த்தன லிங்கம் 286 குக லிங்கம் 287 குங்கும லிங்கம் 288 குஞ்சு லிங்கம் 289 குட லிங்கம் 290 குடுமி லிங்கம் 291 குண லிங்கம் 292 குணக்ரி லிங்கம் 293 குபேர லிங்கம் 294 குருதி லிங்கம் 295 குமர லிங்கம் 296 குமரி லிங்கம் 297 குமுத லிங்கம் 298 குல லிங்கம் 299 குழலி லிங்கம் 300 குழவி லிங்கம் 301 குழை லிங்கம் 302 குற்றால லிங்கம் 303 குன்று லிங்கம் 304 குண்டலி லிங்கம் 305 குந்த லிங்கம் 306 கும்ப லிங்கம் 307 குரவ லிங்கம் 308 குறிஞ்சி லிங்கம் 309 கூததாடி லிங்கம் 310 கூத்து லிங்கம் 311 கூர்ம லிங்கம் 312 கெஜ லிங்கம் 313 கேச லிங்கம் 314 கேசரி லிங்கம் 315 கேசவ லிங்கம் 316 கேடிலி லிங்கம் 317 கேதார் லிங்கம் 318 கேள்வி லிங்கம் 319 கைலாய லிங்கம் 320 கொங்கு லிங்கம் 321 கொடி லிங்கம் 322 கொடு லிங்கம் 323 கொளஞ்சி லிங்கம் 324 கொற்றை லிங்கம் 325 கொன்றை லிங்கம் 326 கோ லிங்கம் 327 கோகழி லிங்கம் 328 கோகுல லிங்கம் 329 கோட்டை லிங்கம் 330 கோடி லிங்கம் 331 கோண் லிங்கம் 332 கோண லிங்கம் 333 கோதண்ட லிங்கம் 334 கோதை லிங்கம் 335 கோப லிங்கம் 336 கோபி லிங்கம் 337 கோமதி லிங்கம் 338 கோல லிங்கம் 339 கௌசிக லிங்கம் 340 கௌதம லிங்கம் 341 கௌரி லிங்கம் 342 சக்தி லிங்கம் 343 சக்கர லிங்கம் 344 சகஸ்ர லிங்கம் 345 சகல லிங்கம் 346 சங்க லிங்கம் 347 சங்கம லிங்கம் 348 சங்கர லிங்கம் 349 சங்கு லிங்கம் 350 சஞ்சீவி லிங்கம் 351 சடாட்சர லிங்கம் 352 சடைமுடி லிங்கம் 353 சண்முக லிங்கம் 354 சத்திய லிங்கம் 355 சதங்கை லிங்கம் 356சதய லிங்கம் 357 சதா லிங்கம் 358 சதாசிவ லிங்கம் 359 சதுர் லிங்கம் 360 சதுர்த்தி லிங்கம் 361 சதுரங்க லிங்கம் 362 சதுரகிரி லிங்கம் 363 சந்த லிங்கம் 364 சந்திர லிங்கம் 365 சந்தன லிங்கம் 366 சந்தான லிங்கம் 367 சப்த லிங்கம் 368 சபா லிங்கம் 369 சம்பந்த லிங்கம் 370 சம்பு லிங்கம் 371 சமுத்திர லிங்கம் 372 சயன லிங்கம் 373 சர்வேஸ லிங்கம் 374 சரச லிங்கம் 375 சரீர லிங்கம் 376 சவரி லிங்கம் 377 சற்குண லிங்கம் 378 சஹான லிங்கம் 379 சற்குரு லிங்கம் 380 சாட்சி லிங்கம் 381 சாணக்ய லிங்கம் 382 சாதக லிங்கம் 383 சாதனை லிங்கம் 384 சாதி லிங்கம் 385 சாது லிங்கம் 386 சாந்த லிங்கம் 387 சாந்து லிங்கம் 388 சாம்ப லிங்கம் 389 சாமுண்டி லிங்கம் 390 சிகர லிங்கம் 391 சிகா லிங்கம் 392 சிகரி லிங்கம் 393 சிகை லிங்கம் 394 சிங்கார லிங்கம் 395 சிசு லிங்கம் 396 சித்தி லிங்கம் 397 சித்திரை லிங்கம் 398 சிந்தாமணிலிங்கம் 399 சிந்து லிங்கம் 400 சிநேக லிங்கம் 401 சிப்பி லிங்கம் 402 சிபி லிங்கம் 403 சிம்ம லிங்கம் 404 சிர லிங்கம் 405 சிரஞ்சீவி லிங்கம் 406 சிரபதி லிங்கம் 407 சிருஷ்டி லிங்கம் 408 சிலம்பு லிங்கம் 409 சிவ லிங்கம் 410 சிவகதி லிங்கம் 411 சிவாய லிங்கம் 412 சிற்பவ லிங்கம் 413 சினை லிங்கம் 414 சிஷ்ட லிங்கம் 415 சீதன லிங்கம் 416 சீதாரி லிங்கம் 417 சீமை லிங்கம் 418 சீர்மை லிங்கம் 419 சீற்ற லிங்கம் 420 சீனி லிங்கம் 421 சுக்கிர லிங்கம் 422 சுக லிங்கம் 423 சுகந்த லிங்கம் 424 சுகநிதி லிங்கம் 425 சுகுண லிங்கம் 426 சுடர் லிங்கம் 427 சுத்த லிங்கம் 428 சுதர்சண லிங்கம் 429 சுந்தர லிங்கம் 430 சுந்தரி லிங்கம் 431 சுப்பு லிங்கம் 432 சுமித்ர லிங்கம் 433 சுய லிங்கம் 434 சுயம்பு லிங்கம் 435 சுரபி லிங்கம் 436 சுருதி லிங்கம் 437 சுருளி லிங்கம் 438 சுரை லிங்கம் 439 சுவடி லிங்கம் 440 சுவடு லிங்கம் 441 சுவர்ண லிங்கம் 442 சுவாச லிங்கம் 443 சுவாதி லிங்கம் 444 சுனை லிங்கம் 445 சூட்சம லிங்கம் 446 சூர லிங்கம் 447 சூரி லிங்கம் 448 சூரிய லிங்கம் 449 சூல லிங்கம் 450 சூள்முடி லிங்கம் 451 சூளாமணி லிங்கம் 452 செக்கர் லிங்கம் 453 செங்கு லிங்கம் 454 செண்பக லிங்கம் 455 செந்தூர லிங்கம் 456 செம்ம லிங்கம் 457 செம்பாத லிங்கம் 458 செரு லிங்கம் 459 செருக்கு லிங்கம் 460 செல்வ லிங்கம் 461 செழுமை லிங்கம் 462 சேகர லிங்கம் 463 சேலிங்கம் 464 சேது லிங்கம் 465 சேர்ப்பு லிங்கம் 466 சேற்று லிங்கம் 467 சைல லிங்கம் 468 சைவ லிங்கம் 469 சொக்க லிங்கம் 470 சொப்பன லிங்கம் 471 சொர்க்க லிங்கம் 472 சொரூப லிங்கம் 473 சோம லிங்கம் 474 சோண லிங்கம் 475 சோபன லிங்கம் 476 சோலை லிங்கம் 477 சோழ லிங்கம் 478 சோழி லிங்கம் 479 சோற்று லிங்கம் 480 சௌந்தர்ய லிங்கம் 481 சௌந்தர லிங்கம் 482 ஞான லிங்கம் 483 தகழி லிங்கம் 484 தகு லிங்கம் 485 தங்க லிங்கம் 486 தச லிங்கம் 487 தட்சண லிங்கம் 488 தடாக லிங்கம் 489 தத்துவ லிங்கம் 490 தந்த லிங்கம் 491 தந்திர லிங்கம் 492 தமிழ் லிங்கம் 493 தர்பை லிங்கம் 494 தர்ம லிங்கம் 495 தருண லிங்கம் 496 தவ லிங்கம் 497 தளிர் லிங்கம் 498 தன லிங்கம் 499 தனி லிங்கம் 500 தவசி லிங்கம் 501 தாண்டக லிங்கம் 502 தாண்டவ லிங்கம் 503 தாமு லிங்கம் 504 தாய் லிங்கம் 505 தார லிங்கம் 506 தாழி லிங்கம் 507 தாழை லிங்கம் 508 தாள லிங்கம் 509 தான்ய லிங்கம் 510 தாரகை லிங்கம் 511 திக்கு லிங்கம் 512 திகம்பர லிங்கம் 513 திகழ் லிங்கம் 514 தியாக லிங்கம் 515 தியான லிங்கம் 516 திரி லிங்கம் 517 திரிபுர லிங்கம் 518 திரு லிங்கம் 519 திருமேனி லிங்கம் 520 திருவடி லிங்கம் 521 திருவாசக லிங்கம் 522 திருவாத லிங்கம் 523 திலக லிங்கம் 524 திவ்ய லிங்கம் 525 தீ லிங்கம் 526 தீட்சை லிங்கம் 527 தீர்க்க லிங்கம் 528 தீர்த்த லிங்கம் 529 தீப லிங்கம் 530 தீர லிங்கம் 531 தீர்ப்பு லிங்கம் 532 துதி லிங்கம் 533 துர்கை லிங்கம் 534 துருவ லிங்கம் 535 துலா லிங்கம் 536 துளசி லிங்கம் 537 துறவு லிங்கம் 538 தூங்கா லிங்கம் 539 தூண்டா லிங்கம் 540 தூமணி லிங்கம் 541 தூய லிங்கம் 542 தூளி லிங்கம் 543 தெங்கு லிங்கம் 544 தெய்வ லிங்கம் 545 தெரிவை லிங்கம் 546 தெளி லிங்கம் 547 தென்னவ லிங்கம் 548 தேக லிங்கம் 549 தேகனி லிங்கம் 550 தேகி லிங்கம் 551 தேச லிங்கம் 552 தேசு லிங்கம் 553 தேயு லிங்கம் 554 தேர லிங்கம் 555 தேவ லிங்கம் 556 தேவபத லிங்கம் 557 தேவாதி லிங்கம் 558 தேவு லிங்கம் 559 தேன் லிங்கம் 560 தேன்மணி லிங்கம் 561 தேன லிங்கம் 562 தேனுக லிங்கம் 563 தைரிய லிங்கம் 564 தொகை லிங்கம் 565 தொட்டி லிங்கம் 566 தொடி லிங்கம் 567 தொடைய லிங்கம் 568 தொண்டக லிங்கம் 569 தொண்டை லிங்கம் 570 தொல் லிங்கம் 571 தோகச லிங்கம் 572 தோண்டி லிங்கம் 573 தோணி லிங்கம் 574 தோத்திர லிங்கம் 575 தோரண லிங்கம் 576 தோரி லிங்கம் 577 தோழ லிங்கம் 578 தோன்ற லிங்கம் 579 தௌத லிங்கம் 580 தௌல லிங்கம் 581 நகமுக லிங்கம் 582 நகு லிங்கம் 583 நகை லிங்கம் 584 நங்கை லிங்கம் 585 நசை லிங்கம் 586 நஞ்சு லிங்கம் 587 நடன லிங்கம் 588 நடம்புரி லிங்கம் 589 நடு லிங்கம் 590 நதி லிங்கம் 591 நந்தி லிங்கம் 592 நம்பி லிங்கம் 593 நம லிங்கம் 594 நயன லிங்கம் 595 நர்மதை லிங்கம் 596 நலமிகு லிங்கம் 597 நவ லிங்கம் 598 நவமணி லிங்கம் 599 நவிர லிங்கம் 600 நற்குண லிங்கம் 601 நற்றுணை லிங்கம் 602 நறுமண லிங்கம் 603 நன்மணி லிங்கம் 604 நன்மை லிங்கம் 605 நனி லிங்கம் 606 நா லிங்கம் 607 நாக லிங்கம் 608 நாச்சி லிங்கம் 609 நாசி லிங்கம் 610 நாட லிங்கம் 611 நாடி லிங்கம் 612 நாத்திர லிங்கம் 613 நாத லிங்கம் 614 நாரண லிங்கம் 615 நாரணி லிங்கம் 616 நாரி லிங்கம் 617 நாபிச லிங்கம் 618 நாயன லிங்கம் 619 நாயாடி லிங்கம் 620 நாவ லிங்கம் 621 நாற்கர லிங்கம் 622 நான்மறை லிங்கம் 623 நான்முக லிங்கம் 624 நிகர் லிங்கம் 625 நித்தில லிங்கம் 626 நித்ய லிங்கம் 627 நிதர்சண லிங்கம் 628 நிதி லிங்கம் 629 நிபவ லிங்கம் 630 நிர்மல லிங்கம் 631 நிரஞ்சன லிங்கம் 632 நிரம்ப லிங்கம் 633 நிருதி லிங்கம் 634 நிமல லிங்கம் 635 நில லிங்கம் 636 நிலை லிங்கம் 637 நிவேத லிங்கம் 638 நிறை லிங்கம் 639 நிஜ லிங்கம் 640 நிசாக லிங்கம் 641 நீடு லிங்கம் 642 நீடுநீர் லிங்கம் 643 நீத்தவ லிங்கம் 644 நீதி லிங்கம் 645 நீர்ம லிங்கம் 646 நீரச லிங்கம் 647 நீரேறு லிங்கம் 648 நீல லிங்கம் 649 நீள்முடி லிங்கம் 650 நீறாடி லிங்கம் 651 நீறு லிங்கம் 652 நுதற் லிங்கம் 653 நுதி லிங்கம் 654 நூதன லிங்கம் 655 நெகிழ் லிங்கம் 656 நெஞ்சு லிங்கம் 657 நெட்ட லிங்கம் 658 நெடு லிங்கம் 659 நெய் லிங்கம் 660 நெற்றி லிங்கம் 661 நெறி லிங்கம் 662 நேச லிங்கம் 663 நேர் லிங்கம் 664 நைச்சி லிங்கம் 665 நைவேத்ய லிங்கம் 666 நொச்சி லிங்கம் 667 நோக்கு லிங்கம் 668 நோன்பு லிங்கம் 669 பசு லிங்கம் 670 பசுவ லிங்கம் 671 பசுபதி லிங்கம் 672 பஞ்ச லிங்கம் 673 பஞ்சாட்சர லிங்கம் 674 பட்டக லிங்கம் 675 படரி லிங்கம் 676 படிக லிங்கம் 677 பண்டார லிங்கம் 678 பண்டித லிங்கம் 679 பத்ம லிங்கம் 680 பத்ர லிங்கம் 681 பத்திர லிங்கம் 682 பதி லிங்கம் 683 பதிக லிங்கம் 684 பர்வத லிங்கம் 685 பரசு லிங்கம் 686 பரத லிங்கம் 687 பரம லிங்கம் 688 பரமாத்ம லிங்கம் 689 பரமேஸ்வர லிங்கம் 690 பரணி லிங்கம் 691 பரிதி லிங்கம் 692 பவண லிங்கம் 693 பவணி லிங்கம் 694 பவநந்தி லிங்கம் 695 பவழ லிங்கம் 696 பவாணி லிங்கம் 697 பவித்ர லிங்கம் 698 பளிங்கு லிங்கம் 699 பன்னக லிங்கம் 700 பனி லிங்கம் 701 பரகதி லிங்கம் 702 பராங்க லிங்கம் 703 பராபர லிங்கம் 704 பவநாச லிங்கம் 705 பா லிங்கம் 706 பாக்ய லிங்கம் 707 பாக லிங்கம் 708 பாச லிங்கம் 709 பாசறை லிங்கம் 710 பாசுர லிங்கம் 711 பாத லிங்கம் 712 பாதாள லிங்கம் 713 பாதி லிங்கம் 714 பாதிரி லிங்கம் 715 பார்வதி லிங்கம் 716 பாரதி லிங்கம் 717 பாராயண லிங்கம் 718 பாரி லிங்கம் 719 பாரிஜாத லிங்கம் 720 பாயிர லிங்கம் 721 பாலக லிங்கம் 723 பாலா லிங்கம் 723 பாவை லிங்கம் 724 பானு லிங்கம் 725 பாஷான லிங்கம் 726 பாகோட லிங்கம் 727 பாசுபத லிங்கம் 728 பாணிக லிங்கம் 729 பார்த்திப லிங்கம் 730 பாநேமி லிங்கம் 731 பாம்பு லிங்கம் 732 பாழி லிங்கம் 733 பிச்சி லிங்கம் 734 பிச்சை லிங்கம் 735 பிட்டு லிங்கம் 736 பிடரி லிங்கம் 737 பிடாரி லிங்கம் 738 பிடி லிங்கம் 739 பிண்ட லிங்கம் 740 பித்த லிங்கம் 741 பிதா லிங்கம் 742 பிம்ப லிங்கம் 743 பிரகதி லிங்கம் 744 பிரகாச லிங்கம் 745 பிரசன்ன லிங்கம் 746 பிரணவ லிங்கம் 747 பிரதர்சன லிங்கம் 748 பிரபாகர லிங்கம் 749 பிரபு லிங்கம் 750 பிரம்ம லிங்கம் 751 பிரம்பு லிங்கம் 752 பிரமிள லிங்கம் 753 பிராண லிங்கம் 754 பிராசித லிங்கம் 755 பிரிய லிங்கம் 756 பிரேம லிங்கம் 757 பிள்ளை லிங்கம் 758 பிழம்பு லிங்கம் 759 பிறவி லிங்கம் 760 பிறை லிங்கம் 761 பீச லிங்கம் 762 பீட லிங்கம் 763 பீடு லிங்கம் 764 பீத லிங்கம் 765 பீதகார லிங்கம் 766 பீதசார லிங்கம் 767 பீதமணி லிங்கம் 768 பீதாம்பர லிங்கம் 769 பீர லிங்கம் 770 பீம லிங்கம் 771 புகழ் லிங்கம் 772 புங்கவ லிங்கம் 773 புங்கவி லிங்கம் 774 புடக லிங்கம் 775 புண்ணிய லிங்கம் 776 புத்தி லிங்கம் 777 புத்ர லிங்கம் 778 புதிர் லிங்கம் 779 புது லிங்கம் 780 புரட்சி லிங்கம் 781 புரவு லிங்கம் 782 பராண லிங்கம் 783 புரி லிங்கம் 784 புருஷ லிங்கம் 785 புருவ லிங்கம் 786 புலரி லிங்கம் 787 புலி லிங்கம் 788 புவன லிங்கம் 789 புற்று லிங்கம் 790 புற லிங்கம் 791 புன்னை லிங்கம் 792 புனித லிங்கம் 793 புனை லிங்கம் 794 புஜங்க லிங்கம் 795 புஷ்கர லிங்கம் 796 புஷ்ப லிங்கம் 797 பூசனை லிங்கம் 798 பூத லிங்கம் 799 பூதர லிங்கம் 800 பூதி லிங்கம் 801 பூபதி லிங்கம் 802 பூபால லிங்கம் 803 பூதவணி லிங்கம் 804 பூர்ண லிங்கம் 805 பூர்த்தி லிங்கம் 806 பூர்வ லிங்கம் 807 பூரணி லிங்கம் 808 பூமித லிங்கம் 809 பூமுக லிங்கம் 810 பூவிழி லிங்கம் 811 பூலோக லிங்கம் 812 பூஜித லிங்கம் 813 பெண் லிங்கம் 814 பெண்பாக லிங்கம் 815 பெரு லிங்கம் 816 பேரின்ப லிங்கம் 817 பேழை லிங்கம் 818 பைரவி லிங்கம் 819பொன்னம்பலலிங்கம் 820 பொன்னி லிங்கம் 821 பொருந லிங்கம் 822 பொருப்பு லிங்கம் 823 பொழி லிங்கம் 824 பொய்கை லிங்கம் 825 போக லிங்கம் 826 போதக லிங்கம் 827 போதன லிங்கம் 828 போதி லிங்கம் 829 போற்றி லிங்கம் 830 போனக லிங்கம் 831 பௌதிக லிங்கம் 832பௌர்ணமி லிங்கம் 833 மகர லிங்கம் 834 மகவு லிங்கம் 835 மகா லிங்கம் 836 மகிழ லிங்கம் 837 மகுட லிங்கம் 838 மகுடி லிங்கம் 839 மகேச லிங்கம் 840 மகேஸ்வர லிங்கம் 841 மங்கள லிங்கம் 842 மஞ்சரி லிங்கம் 843 மஞ்சு லிங்கம் 844 மண லிங்கம் 845 மணி லிங்கம் 846 மதன லிங்கம் 847 மதி லிங்கம் 848 மந்தாரை லிங்கம் 849 மந்திர லிங்கம் 850 மயான லிங்கம் 851 மயூர லிங்கம் 852 மரகத லிங்கம் 853 மருக லிங்கம் 854 மருத லிங்கம் 855 மருது லிங்கம் 856 மலர் லிங்கம் 857 மழலை லிங்கம் 858 மவுலி லிங்கம் 859 மன்னாதி லிங்கம் 860 மனித லிங்கம் 861 மனோ லிங்கம் 862 மலை லிங்கம் 863 மாங்கல்ய லிங்கம் 864 மாசறு லிங்கம் 865 மாசி லிங்கம் 866 மாசிவ லிங்கம் 867 மாட்சி லிங்கம் 868 மாணிக்க லிங்கம் 869 மாதங்கி லிங்கம் 870 மாதவ லிங்கம் 871 மாதவி லிங்கம் 872 மாது லிங்கம் 873 மாதேவி லிங்கம் 874 மாமிச லிங்கம் 875 மாயை லிங்கம் 876 மாலை லிங்கம் 877 மார்க்க லிங்கம் 878 மிசை லிங்கம் 879 மிண்டை லிங்கம் 880 மீளி லிங்கம் 881 மீன லிங்கம் 882 முக்கனீ லிங்கம் 883 முக்தி லிங்கம் 884 முகுந்த லிங்கம் 885 முடி லிங்கம் 886 முத்து லிங்கம் 887 மும்மல லிங்கம் 888 முரசு லிங்கம் 889 முருக லிங்கம் 890 முல்லை லிங்கம் 891 முனி லிங்கம் 892 மூர்த்தி லிங்கம் 893 மூல லிங்கம் 894 மெய் லிங்கம் 895 மேக லிங்கம் 896 மேதினி லிங்கம் 897 மேவி லிங்கம் 898 மேனி லிங்கம் 899 மொழி லிங்கம் 900 மொட்டு லிங்கம் 901 மோட்ச லிங்கம் 902 மோன லிங்கம் 903 மோலி லிங்கம் 904 மௌன லிங்கம் 905 யதி லிங்கம் 906 யாக லிங்கம் 907 யாசக லிங்கம் 908 யாத்திரை லிங்கம் 909 யுக்தி லிங்கம் 910 யுவ லிங்கம் 911 யோக லிங்கம் 912 யோகி லிங்கம் 913 ரகசிய லிங்கம் 914 ரம்ய லிங்கம் 915 ரமண லிங்கம் 916 ரத்தின லிங்கம் 917 ரத லிங்கம் 918 ராக லிங்கம் 919 ராட்சச லிங்கம் 920 ராவண லிங்கம் 921 ராஜ லிங்கம் 922 ரிஷப லிங்கம் 923 ரிஷி லிங்கம் 924 ருத்ர லிங்கம் 925 ரூப லிங்கம் 926 ரௌத்திர லிங்கம் 927 லகரி லிங்கம் 928 லாவண்ய லிங்கம் 929 லீலா லிங்கம் 930 லோக லிங்கம் 931 வசந்த லிங்கம் 932 வஞ்சி லிங்கம் 933 வடுக லிங்கம் 934 வர்ம லிங்கம் 935 வர லிங்கம் 936 வருண லிங்கம் 937 வல்லப லிங்கம் 938 வழக்கு லிங்கம் 939 வள்ளுவ லிங்கம் 940 வளர் லிங்கம் 941 வன லிங்கம் 942 வனப்பு லிங்கம் 943 வஜ்ர லிங்கம் 944 வாகை லிங்கம் 945 வாசி லிங்கம் 946 வாணி லிங்கம் 947 வாயு லிங்கம் 948 வார்ப்பு லிங்கம் 949 வாழ்க லிங்கம் 950 வான லிங்கம் 951 வானாதி லிங்கம் 952 வார்சடை லிங்கம் 953 விக்ர லிங்கம் 954 விக்ரம லிங்கம் 955 விகட லிங்கம் 956 விகார லிங்கம் 957 விகிர்த லிங்கம் 958 வசித்ர லிங்கம் 959 விடங்க லிங்கம் 960 வித்தக லிங்கம் 961 விதி லிங்கம் 962 விது லிங்கம் 963 விந்தை லிங்கம் 964 விநாசக லிங்கம் 965 விபீஷ்ண லிங்கம் 966 விபூதி லிங்கம் 967 விமல லிங்கம் 968 வியூக லிங்கம் 969 விருட்சக லிங்கம் 970 வில்வ லிங்கம் 971 விளம்பி லிங்கம் 972 விழி லிங்கம் 973 வினைதீர் லிங்கம் 974 வினோத லிங்கம் 975 விஜய லிங்கம் 976 விஷ்ணு லிங்கம் 977 விஸ்வ லிங்கம் 978 விஸ்வேஸ்வரலிங்கம் 979 வீர லிங்கம் 980 வீணை லிங்கம் 981 வெற்றி லிங்கம் 982 வெற்பு லிங்கம் 983 வெள்ளி லிங்கம் 984 வேங்கட லிங்கம் 985 வேங்கை லிங்கம் 986 வேட்டுவ லிங்கம் 987 வேத லிங்கம் 988 வேதாந்த லிங்கம் 989 வேம்பு லிங்கம் 990 வேழ லிங்கம் 991 வேள்வி லிங்கம் 992 வைகை லிங்கம் 993 வைர லிங்கம் 994 வைத்திய லிங்கம் 995 வைய லிங்கம் 996 ஜடா லிங்கம் 997 ஜதி லிங்கம் 998 ஜல லிங்கம் 999 ஜீவ லிங்கம் 1000 ஜெக லிங்கம் 1001 ஜெய லிங்கம் 1002 ஜென்ம லிங்கம் 1003 ஜோதி லிங்கம் 1004 ஸ்ரீ லிங்கம் 1005 ஸோபித லிங்க
ம் 1006 ஹேம லிங்கம் 1007 ஐஸ்வர்ய லிங்கம் 1008 சுப லிங்கம்.

Monday, 25 January 2021

குலதெய்வம்

#குலதெய்வங்கள்_என்பவர்கள்_யார்

#அவர்களின்_பெருமை_என்ன.

#குலதெய்வம்_விஞ்ஞானத்தோடு_எப்படி_ஒத்துபோகின்றது.

#என்பவைகளை_பற்றி_சற்று_விரிவாக_ஆராயலாம்_வாருங்கள்

* நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன்
பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல
தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். 

அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை....

* பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த
வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.

எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண்
சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலியை  போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

* இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை.

ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற
ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால்
அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

* இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?????

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம்வாழ்க்கை போக்கு உள்ளது?

* இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக
புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர்
பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

* நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

#குலதெய்வம்::

*  குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்
குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

* குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

* எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்!!!!!!!

* குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்
காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

* குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

* நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க
சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக
எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்
செய்வினை செய்வார்.

* மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம்மற்றவர்களின்குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.

* மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும்
உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

* குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

* அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

* குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.

யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல்
போவதும் உண்டு.

* பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

* பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம்
முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குல தெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

* பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது.பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.

* இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

* ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல
வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம்
இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த
ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.

* பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…

* அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக
வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க
முடியாது என்பது தெய்வக்கணக்கு.

ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின்
வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ,அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.

* ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13
வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு
இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக்
காண்போமா.....?

* விஞ்ஞான முறையில் யோசித்தால்
ஒரு குழந்தை ஆணா,பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள்
உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்!!!!!!

* இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதைத் தந்தையின் குரொமொசோமே முடிவு செய்கிறது. தாயிடம் xx குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன.

* ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

* ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்
கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.
ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சமூகம் திட்டவட்டமாய்க் கூறும்.

ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x குரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண்
குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும்
ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y குரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில்
அவன் மூலம் தான் வம்சம் மீண்டும்வளரப் போகின்றது வழி வழியாக.

* வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
அளித்திருக்கின்றனர்.

* இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x குரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது.

ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y
க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம்
இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y
க்ரோமோசொம்கள் மட்டுமே.

* ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத்
தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.பெண்ணிற்கோ எனில் ஆணின் yக்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை.

ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

* 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரகூடாது என்பதாலுமே சொந்த ரத்தஉறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.