Tuesday 15 September 2020

நீர்

தெய்வத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை ..

தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே என்று கூறுவார்கள். தண்ணீரை வீணாக்குபவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. தண்ணீர் தெய்வத்திற்கு சமமானது என்பதை இப்படி விளக்குகிறார்கள்.

 தண்ணீர் உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தை நோக்கியே வரும். அதே போல் கடவுளும் உயரமான இடத்திலிருந்து அவதாரம் என்று சொல்லி கீழ் நோக்கி வருகிறார். தண்ணீர் எந்த நிறத்தில் கலக்கிறதோ அதே நிறத்தைப் பெறுகிறது. அதே போல் கடவுளும் எந்த அவதாரத்தை எடுக்கிறாரோ அந்த நிறத்தைக் காட்டுவார்.

தண்ணீருக்கு நிறம், மணம், குணம் கிடையாது. அதேபோல கடவுளுக்கும் நிறம்,மணம், குணம் கிடையாது. உணவுப் பொருளை உற்பத்தி செய்ய உதவுவது தண்ணீர்தான். அது தானும் உணவாவது போல இறைவன் பக்தியின் விளை நிலமாகவும், பக்திப் பொருளாகவும் ஆகிறான். தண்ணீர் நாம் எடுக்கும் பாத்திரத்தின் அளவுக்கே நிறைவது போல இறைவனும் பக்தியின் அளவுக்கே பலன் தருகிறான். 

தண்ணீருக்கு ஏழை,பணக்காரன், ஆண், பெண், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் கிடையாது. கடவுளுக்கும் இந்த விதமான பேதங்கள் கிடையாது என்பதை நாம் அறிவோம். தண்ணீரை சர்வதேவ தாஸ்வரூபம் என்கிறது வேதம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.