Monday 23 April 2018

பயன்

பயன் என்பது வியாபார வார்த்தை.

எல்லாமும் முடிவை நோக்கியே செய்யப்படுவது,

எல்லா செயல்களும் பயனும் முடிவும் என இரண்டாக பிரிக்கப்படுகின்றன.

முடிவு என்பது
எப்போதும் எதிர்காலத்தில் இருப்பது.

ஆகவே பயன் கருதிய செயலில் நீ
எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தை தியாகம் செய்கிறாய்.

நிகழ்காலத்தை வேறு
எதற்காகவும் தியாகம் செய்யாதே என்பதே எனது முழுமையான செய்தியாகும்.

வேடிக்கை என்ற சொல் மதிக்கப்படுவதில்லை.

ஆனால் நாம் அதை மிகவும் மரியாதையான
சொல்லாக மாற்ற வேண்டும்.

பயன் என்பது மிகவும் அசிங்கமானது.

பயன் என்றால் நீ
எப்போதும் பேராசையோடு செயல்படுவாய்.

வேடிக்கை எனும்போது அதில் பேராசை இல்லை.

வேடிக்கை என்றால் நீ வெற்றி பெற்றவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

நீ சீட்டு
விளையாடுகிறாய் – வெறும் வேடிக்கைக்காக. யாரும் அதில் தோற்பதைப்பற்றியோ
ஜெயிப்பதைப்பற்றியோ பெரிதாக அக்கறை கொள்வதில்லை. விளையாட்டு முடிந்தபின் வெற்றி தோல்விகளும் முடிந்துபோய்விடும்.

வாழ்க்கையையும் இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வினாடியையும்
முழுமையாக வாழ்.

ஆனால் பயன் என்ற கருத்தை சுமக்காதே.

உனது மனம் பயனை நோக்கி பயன் கருதி எங்கோ எதிர்காலத்தில் இருக்கும்.

உன்னால் செயலில் முழுமையாக இருக்கமுடியாது.

உனது செயல் அரைகுறையாக இருக்கும்.

நீ அதை இயந்திரத்தனமாக செய்வாய்.

ஆனால் பயன் எதுவும் இல்லை எனும்போது நீ இந்த கணத்தில் முழுமையாக இருக்க முடியும்.

ஆகவே ஒன்றை நினைவில் கொள்.

ஏதோ ஒரு பயனை அடைவதற்காக வேலை செய்யும் மனிதன் அதை அடையாமல் போகக்கூடும்.

ஏனெனில் அவன் அந்த வேலையில் முழுமையாக இல்லை.

ஆனால் விளையாட்டுதனமாக ஒரு வேலையை செய்யும் மனிதன் அதில் முழுமையாக இருப்பான்.

அப்போது அவன் பயன் கருதி செய்யும் மனிதன் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை பெறுவான்.

ஆகவே விளையாட்டுத்தனமாக செய்வதால் நீ இழப்பவனாக இருப்பாய்  என்பது அர்த்தமல்ல.

நீ உன்னுடைய
முழுமையோடு செய்வதால் பலவகைகளில் நீ அடைபவனாக இருப்பாய்.

உனது செயல் மலர்களையும் கனிகளையும் கொண்டுவரும், நீ அந்த மலர்களுக்காக
கனிகளுக்காக அதை செய்யவில்லை என்றாலும்கூட.

நீ அந்த கணத்தை, அந்த செயலை
அனுபவித்தாய்.

அந்த அனுபவத்திலிருந்து, அந்த முழுமையிலிருந்து பல விஷயங்கள்
நிகழும்.

ஆனால் உன்னுடைய குறிக்கோள் அதுவல்ல.

ஆகவே அது நிகழும்போது நீ
வியப்படைவாய்.

#ஓஷோ
Source : The   Last  Testment.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.