Tuesday, 24 April 2018

Money

பணம் சேர என்ன செய்ய வேண்டும்?

யாருக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஆசை? எல்லோரும் தான் பணம் பண்ண நினைக்கிறார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே செல்வம் கொழிக்கிறது. பலருக்கு நிராசையாகத் தானே இருக்கிறது? நினைப்பது தான் நடக்கும் என்றால் எல்லாரும் பணக்காரர்கள் ஆகியிருக்க வேண்டுமே! ஏன் நம்மில் பலருக்கு பணப்பற்றாக்குறை உள்ளது? ஆழ்மனச் சக்தி, அஃபர்மேஷன், நேர்மறை சிந்தனை எல்லாம் வேலை செய்யவில்லையா பண விஷயத்தில்?

இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பணம் இல்லை என்று குறை சொல்பவர்களைக் கொஞ்சம் அலசலாமா?

பண பயம்

“பணம் என்ன மரத்திலயா காய்க்குது!, “ பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படணும்.” “பணம் வந்தா நிம்மதி போயிடும்”, “ நம்ம ராசி சாண் ஏறுனா முழம் சறுக்கும்”, “பண விஷயத்தில யாரையும் நம்ப முடியாது” “அளவுக்கு அதிகமா ஆசைப்படக்கூடாது”, “ஒரு செலவு போனா அடுத்த செலவு கரெக்ட்டா வந்திரும்” “நம்மளுக்கு கை கொடுக்க ஆளில்லை”, “நமக்கு இதுவே ஜாஸ்தி”, “ஒரு ஜாக்பாட் அடிச்சா எல்லாம் சரியாயிடும்” “கடனைக் கடன் வாங்கித்தான் அடைக்க வேண்டியிருக்கு” - இப்படி அதிகமாக அவர்கள் பேசும் எண்ணங்கள் என்ன என்று கூர்ந்து நோக்குங்கள். காரணம் புரியும்.

பணம் சம்பாதிக்கும் லட்சியத்தை விடப் பணம் பற்றிய பயமும் பேராசையும்தான் தவறான முடிவுகளை எடுக்கவைக்கும்.

தடால் தீர்வு

பணச்சிக்கலில் இருப்பவர்கள் பெரும்பாலும் எந்தப் பணத்தேவையையும் ஏதாவது ஒன்றைத் தடாலெனச் செய்து தீர்க்க நினைப்பார்கள். பணம் தேவையா? எங்காவது கடன் வாங்கு அல்லது அடகு வை அல்லது எதையாவது விற்று ஏற்பாடு பண்ணு. எதையாவது செய்து பணம் புரட்டு. இந்த அவசரமும், எதையும் அலசி ஆராயாமல் எடுக்கும் முடிவுக்குக் காரணமான எண்ணம்: “இதை இப்போது சமாளிக்கலாம். பிறகு வருவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!” என்பதுதான்.

இந்த எண்ணமும் செயலும் காலம் காலமாய்த் தொடரும். பிறகு இது வாழ்க்கை முறை ஆகும்.

ஒரு நண்பர் சொன்னார்: “எனக்கு வர வேண்டிய கடன் தொகை 16 லட்சம். கொடுக்க வேண்டிய கடன் 12 லட்சம் தான். ஆனால் வர வேண்டியது நேரத்துல வராததால் சொத்தை வச்சு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டிய கடனை அடைக்கிறேன்..” ரொட்டேஷன் என்பது தமிழ்ச்சொல் போலவே ஆகிவிட்டது. இது நாயர் பிடித்த புலி வால் கதைதான். முதலில் வாங்கிய கடனை அடைக்க இன்னொரு புது ஆளிடம் கடன் வாங்குவது. எந்தக் காலத்திலும் செலவும் குறையாது. கடனும் முடியாது. கடனால் மூழ்கிய குடும்பங்கள் பல எனக்குத் தெரியும்.

பணக் கண்ணோட்டம்

வரவுக்கும் மேலே செலவு செய்வது, தெரியாத தொழிலில் முதலீடு செய்வது, பணம் இல்லை என்பதற்காக எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ளாதது, எப்படியாவது கடன் வாங்கலாம் என்ற துணிச்சல், தவறான பொருளாதார முடிவுகள் எடுப்பது, பிறர் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது என்று ஏராளமான தவறான முடிவுகளுக்குக் காரணம் பணம் பற்றிய பிசகான எண்ணங்களே. பண ஆசை இருந்தும் பணம் பற்றிய பிழையான எண்ணங்கள் தவறான முடிவுகளையே எடுக்க வைக்கும்.

உலகின் பணம் கொழிக்கும் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள். அவர்கள் யூதர்களாக இருந்தாலும் சரி, மார்வாடிகளாக இருந்தாலும் சரி, செட்டியார்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்குப் பணம் பற்றிய சில அடிப்படையான கண்ணோட்டங்கள் உண்டு.

வேலை,தொழில் தரும் பணம்

சிக்கனம் முக்கியம். சின்ன வரவு செலவுக்கும் கணக்கு வேண்டும். உறவு என்றாலும் பண விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும். வீணான பகட்டுச் செலவை விடக் கையிருப்பு சொத்தே சமூக மதிப்பு. எல்லா வயதிலும் உழைக்க வேண்டும். எளிய வாழ்க்கை வாழ வேண்டும். உத்தரவாதம் தராத தொழில்களில் முதலீடுகள் கூடாது. எல்லாவற்றையும் விட “பணம் சம்பாதிப்பது மிக முக்கியம். அதைத் திறன்படச் செய்வது தான் உயர்வுக்கு வழி” என்பதை உணர்ந்தவர்கள்.

மீட்டர் வட்டி, சீட்டுக்கம்பெனி மோசடி என அனைத்துப் பொருளாதார மோசடிகளிலும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். “எதையாவது செய்து சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும்” எனும் எண்ணம் தான் அவர்களைப் புதைகுழியில் தள்ளுகிறது.

நல்ல வேலையில், நல்ல தொழிலில்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று எண்ணுபவர்கள் பணத்தை எண்ணுவதை விட அதன் காரணமான வேலையையும் தொழிலையும் பற்றி அதிகம் எண்ணுவர். தொழில் மேம்படும்போது செல்வம் கொழிக்கும்.

பற்றாக்குறை மனநிலை

பிடித்ததை நம்பிக்கையுடன் செய்யும்போதும் பணம் வரும். இதுதான் உண்மை. பணம் பற்றிய பயம் இல்லாதபோது பணம் வரும். பணம் பற்றிய எண்ணத்துடன் கோபம், வெறுப்பு, பொறாமை போன்றவை உள்ளபோது செல்வம் சேராது.

பற்றாக்குறை மன நிலையில் பணத்துக்காகப் போராடுகையில் பணம் என்றும் பற்றாக்குறையாகவே இருக்கும்.

பணம் கொடுக்கும்போதும், வாங்கும்போதும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இருங்கள். லக்ஷ்மி வரும் போது வரவேற்பது போல, போகும்போதும் வாழ்த்தி, நன்றி சொல்லி, மீண்டும் வர வேண்டும் என பிரார்த்தியுங்கள்.

பணம் தரும் பாடங்கள்

“எனக்குப் பணம் பெரிசில்லை...!” என்று பேசிவிட்டுப் பணம் இல்லை என்று புலம்பாதீர்கள். பணம் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை, லட்சியங்களை அடையவும் உதவுகிறது. அதை முறையாகப் பெறவும், சிறப்பாகச் சேமிக்கவும், முதலீடு செய்யவும், சரியான பொருளாதார முடிவுகள் எடுக்கவும் பணம் பற்றிய சுகாதாரமான எண்ணங்கள் வேண்டும்.

பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.

பணக்கஷ்டம் பற்றி அன்னியருடன் புலம்புவதை நிறுத்தி, அதன் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு சில பாடங்களை உங்களுக்கு வழங்க முயல்கிறது. அந்த பாடங்களை நீங்கள் கற்கும் வரை அவை உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்!  

Monday, 23 April 2018

கர்ம வினை

கர்ம வினை- Effects of KARMA.
-----------------------------------------
உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.
நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள்
ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட
நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக
அமைவது ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று
நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம்,
அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு
உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில்
ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில்
ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.

பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்"
எனப்படுகிறது.

சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது.
சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.  சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன்    போக்கில்    நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கனவில் கூட காண முடியாத   பல ஆச்சர்யங்கள் நமக்கு  சிலசமயங்களில் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை,  நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை,  தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்  என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே
நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது.
முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .
ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று
காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல ,  பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும்  நம் வாழ்வில் வேறு கோணத்தில்
வேறு பார்வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது,
அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல்
வெறுக்க வைக்கிறது. அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின்
எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை  ஏற்படுத்துகிறதா ?
இதற்கெல்லாம்    தெரிந்த ஒரே காரணம் நம்முடைய  "கர்ம வினை" தான் .

இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம்
கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும்
பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.  அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது.  அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா'  எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்
நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம்
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம்  அல்லது கற்றுக் கொள்கிறோம்.
இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது
கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது.
அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம்
செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ  உருவாக்கவோ முடியாது.அவரவர்கள் செய்வினையின்
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும்
வாழ்க்கை அமையும் .

துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்,  ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும்,  அவரவர்கள் கர்ம கதியே.
இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு
நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால்
ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது.  இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும்,  நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்  கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும்,  வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ  ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய்  என்பதை உணர்ந்தால்,
நீ என்ன செய்யப் போகிறாய் ?
எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ?
எது போன்ற வாழ்க்கைத் தடத்தை
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது
உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் " ஹிந்து மதம் ".

There is NO cancellation of GOOD and BAD deeds .

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும்
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.
ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன்
கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில்
சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும்  'துக்கங்கள்' விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic
ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை
உண்ண முடியாது. பல கார்களுக்குச்
சொந்தக்காரராக இருந்தாலும் தனது
கால்களையே நடை பயிற்சிக்கு
நம்ப வேண்டியதாக உள்ளது.

'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச்
செய்வது மட்டுமே.  பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.  நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே
பலனாகப் பெறுகிறோம்.

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை.
நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது.
அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.

பயன்

பயன் என்பது வியாபார வார்த்தை.

எல்லாமும் முடிவை நோக்கியே செய்யப்படுவது,

எல்லா செயல்களும் பயனும் முடிவும் என இரண்டாக பிரிக்கப்படுகின்றன.

முடிவு என்பது
எப்போதும் எதிர்காலத்தில் இருப்பது.

ஆகவே பயன் கருதிய செயலில் நீ
எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தை தியாகம் செய்கிறாய்.

நிகழ்காலத்தை வேறு
எதற்காகவும் தியாகம் செய்யாதே என்பதே எனது முழுமையான செய்தியாகும்.

வேடிக்கை என்ற சொல் மதிக்கப்படுவதில்லை.

ஆனால் நாம் அதை மிகவும் மரியாதையான
சொல்லாக மாற்ற வேண்டும்.

பயன் என்பது மிகவும் அசிங்கமானது.

பயன் என்றால் நீ
எப்போதும் பேராசையோடு செயல்படுவாய்.

வேடிக்கை எனும்போது அதில் பேராசை இல்லை.

வேடிக்கை என்றால் நீ வெற்றி பெற்றவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

நீ சீட்டு
விளையாடுகிறாய் – வெறும் வேடிக்கைக்காக. யாரும் அதில் தோற்பதைப்பற்றியோ
ஜெயிப்பதைப்பற்றியோ பெரிதாக அக்கறை கொள்வதில்லை. விளையாட்டு முடிந்தபின் வெற்றி தோல்விகளும் முடிந்துபோய்விடும்.

வாழ்க்கையையும் இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வினாடியையும்
முழுமையாக வாழ்.

ஆனால் பயன் என்ற கருத்தை சுமக்காதே.

உனது மனம் பயனை நோக்கி பயன் கருதி எங்கோ எதிர்காலத்தில் இருக்கும்.

உன்னால் செயலில் முழுமையாக இருக்கமுடியாது.

உனது செயல் அரைகுறையாக இருக்கும்.

நீ அதை இயந்திரத்தனமாக செய்வாய்.

ஆனால் பயன் எதுவும் இல்லை எனும்போது நீ இந்த கணத்தில் முழுமையாக இருக்க முடியும்.

ஆகவே ஒன்றை நினைவில் கொள்.

ஏதோ ஒரு பயனை அடைவதற்காக வேலை செய்யும் மனிதன் அதை அடையாமல் போகக்கூடும்.

ஏனெனில் அவன் அந்த வேலையில் முழுமையாக இல்லை.

ஆனால் விளையாட்டுதனமாக ஒரு வேலையை செய்யும் மனிதன் அதில் முழுமையாக இருப்பான்.

அப்போது அவன் பயன் கருதி செய்யும் மனிதன் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை பெறுவான்.

ஆகவே விளையாட்டுத்தனமாக செய்வதால் நீ இழப்பவனாக இருப்பாய்  என்பது அர்த்தமல்ல.

நீ உன்னுடைய
முழுமையோடு செய்வதால் பலவகைகளில் நீ அடைபவனாக இருப்பாய்.

உனது செயல் மலர்களையும் கனிகளையும் கொண்டுவரும், நீ அந்த மலர்களுக்காக
கனிகளுக்காக அதை செய்யவில்லை என்றாலும்கூட.

நீ அந்த கணத்தை, அந்த செயலை
அனுபவித்தாய்.

அந்த அனுபவத்திலிருந்து, அந்த முழுமையிலிருந்து பல விஷயங்கள்
நிகழும்.

ஆனால் உன்னுடைய குறிக்கோள் அதுவல்ல.

ஆகவே அது நிகழும்போது நீ
வியப்படைவாய்.

#ஓஷோ
Source : The   Last  Testment.

Tuesday, 17 April 2018

துணை

எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும்

1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு #சனீஸ்வரன் அருகில் வரமாட்டார் 

2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு
#பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்..

3. ஆந்தையை போல தீமையிடம் பாதுகாப்பாக விழித்திரு #லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்...

4. சிங்கத்தை போல வீரமாக தைரியத்துடன் இரு
#பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள்...

5. அன்னப்பறவை நீரையும் பாலையும் பிரிப்பதை போல அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள் #சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள் ...

6. எலி போல தொழிலில் ஊழல் செய்யாமலிரு வினைகளை அழிக்கும் #விநாயகர் உன் வீடு
தேடி வருவார்...

7. மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை விரித்தாடு  அழகன் #முருகன் உன் வீட்டினில் அவதாரிப்பான்...

8. உன் மனம் உலக பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனை போல பறக்கட்டும் அப்பொழுது #கண்ணன் வருவான் அகத்திற்கு...

9. தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து நில், உலகை படைத்த ஜோதியான தந்தை #ஈசனே வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு...