Monday 20 February 2017

மரணபயம்

எந்தவொரு விலங்கும் மரணபயம் கொண்டிருக்காது காரணம் எந்த விலங்கும் எதிர்காலம் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்க வில்லை.

இதுவன்றி வேறு காரணம் இருப்பதற்கில்லை;எதிர்காலம் பற்றிய திட்டங்கள் இல்லாதிருத்தல். எதிர்காலம் இல்லை எனவே மரணமும் இல்லை.

எதிர்காலம் குறித்து திட்டம் எதுவும் இல்லையென்கிற போது மரணத்தைப் பற்றி எதற்காக அஞ்சுவது? மரணத்தால் எதுவும் பாதிக்கப் படுவதில்லை.

நீங்கள் திட்டமிடுகிற அளவுக்கு, திட்டங்களின் அளவைப் பொறுத்து அச்சமும் பெரிதாயிருக்கிறது.

உண்மையில் சாவது அச்சமளிக்காது, நிறைவு இல்லாமல் சாவது அச்சமளிக்கும். மரணம் எந்த நேரத்திலும் வரலாம், அதற்குள் அத்தனை ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்வது நடவாத காரியம்.

மனம் மாசற்றதாயின், பாம்புடன் விளையாடும் ஒரு குழந்தையைப் போல் நீங்கள் இருப்பீர்கள்.

தற்போது அவன் இரண்டுக்கும் தயாராயிருக்கிறான். மரணம் வரக்கூடும் என்றாலும் அவன் மறைவற்று இருக்கிறான். அவனால் மரணத்துடன் விளையாட முடியும்.

கடவுள் வரக்கூடும் அவன் ஒளிவுமறைவின்றி இருக்கிறான்.அவனால் கடவுளுடன் விளையாட முடியும்.

மரணமும், கடவுளும் ஒரு நுட்பமான   முறையில் ஒன்றேயாகும். நீங்கள் மரணத்தை ஏற்காதவராயின் கடவுளையும் ஏற்காதவராகவே இருப்பீர்கள்.

--ஓஷோ--

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.