Wednesday, 22 February 2017

நேர்மறை பிராண சக்திகொண்டது


உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திகொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்திகொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்கவிடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடுகின்றன. நாம் அதைச் சாப்பிடும்போது, அது நமக்கு மிகவும் நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாசாரத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்துவிடும் பழக்கம் இருந்தது. நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். வாங்குபவருக்கோ இங்கேயே நல்ல உணவு கிடைத்துவிடுகிறது! குறிப்பாக, வட இந்தியாவில் கீழ் ஜாதியினர் பூசணிக்காய் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஏனெனில், பூசணிக்காய் சாப்பிடுபவருக்கு உடலும் மனமும் கூர்மையாவதால் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான், அவர்கள் பூசணிக்காய் சாப்பிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டனர். ஆனால், இப்போது அது போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம் மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்தி கூர்மையும், புத்துணர்வும், சமநிலையும் அதிகரிக்கிறது. இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால்தான் வீடு கட்டி புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச் சக்திகளையும் களைவதற்கான ஒரு வாய்ப்பாக பூசணிக்காயைப் பயன்படுத்துகிறார்கள்!
நன்றி!

Tuesday, 21 February 2017

ஒரு சின்ன கதை:

ஒரு சின்ன கதை:

வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.

அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.

அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.

கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.

பறவை இனம் பெருகியது.

பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது.

அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை.

எதிரிகளுக்கு உணவானது.

மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.

பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).

எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழிய காரணம் ஆனது.

அதே போல் தான் நம் பிள்ளைகளும், நமக்கு கிடைக்கவில்லை
என்று எண்ணி நம் பிள்ளைகளுக்கு கொடுத்து அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.

பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.

அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.

பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.

நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.

நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.

நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும் எப்படி எனக்கும், என்னை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்து போல.

இதை தான் ஆங்கிலேயத்தில்
*survivaloffittest* என்று சொல்லுகிறோம்.

அதை நோக்கித்தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

Monday, 20 February 2017

நோய்கள் என்றால் என்ன?*


*நோய்கள் என்றால் என்ன?*

நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.

இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்....

மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.

இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள் ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா?

நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல்முறையின் போது (Process)நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

*எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?*

நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல் முறை நிகழும்போது
நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது
சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.இவ்வாறு உடல் தனக்கு தானே செய்துகொள்கின்ற இயற்கை பராமரிப்பை நாம் வியாதி அல்லது நோய்கள் என புரிந்துக் கொள்ளும்போது,
ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப் பாதையில் தங்கிவிடுகிறது.இந்த சூழ்நிலையில் நமது உடலில் சளி (Sinus) என்னும் சுரப்பி,நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில்ஈடுபடும்.

இந்த செயல் முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose) ஏற்படும். இதையும் வியாதி எனபுரிந்து கொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை
உட்கொள்கிறோம்.

இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும்.

இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.இதையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம்.

பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது.இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.

இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்ற முடியாத போது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும்.

இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம்.

அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்.அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும்.

இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும்.இந்த நிலையை தான்
மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம்.

இதுவே பெருவாரியான
சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும்.

அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் நாம் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு.

நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள் மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம்.

இதை தான்
"கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்"
என்று கூறுகிறோம்.

மரணபயம்

எந்தவொரு விலங்கும் மரணபயம் கொண்டிருக்காது காரணம் எந்த விலங்கும் எதிர்காலம் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்க வில்லை.

இதுவன்றி வேறு காரணம் இருப்பதற்கில்லை;எதிர்காலம் பற்றிய திட்டங்கள் இல்லாதிருத்தல். எதிர்காலம் இல்லை எனவே மரணமும் இல்லை.

எதிர்காலம் குறித்து திட்டம் எதுவும் இல்லையென்கிற போது மரணத்தைப் பற்றி எதற்காக அஞ்சுவது? மரணத்தால் எதுவும் பாதிக்கப் படுவதில்லை.

நீங்கள் திட்டமிடுகிற அளவுக்கு, திட்டங்களின் அளவைப் பொறுத்து அச்சமும் பெரிதாயிருக்கிறது.

உண்மையில் சாவது அச்சமளிக்காது, நிறைவு இல்லாமல் சாவது அச்சமளிக்கும். மரணம் எந்த நேரத்திலும் வரலாம், அதற்குள் அத்தனை ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்வது நடவாத காரியம்.

மனம் மாசற்றதாயின், பாம்புடன் விளையாடும் ஒரு குழந்தையைப் போல் நீங்கள் இருப்பீர்கள்.

தற்போது அவன் இரண்டுக்கும் தயாராயிருக்கிறான். மரணம் வரக்கூடும் என்றாலும் அவன் மறைவற்று இருக்கிறான். அவனால் மரணத்துடன் விளையாட முடியும்.

கடவுள் வரக்கூடும் அவன் ஒளிவுமறைவின்றி இருக்கிறான்.அவனால் கடவுளுடன் விளையாட முடியும்.

மரணமும், கடவுளும் ஒரு நுட்பமான   முறையில் ஒன்றேயாகும். நீங்கள் மரணத்தை ஏற்காதவராயின் கடவுளையும் ஏற்காதவராகவே இருப்பீர்கள்.

--ஓஷோ--

Sunday, 19 February 2017

இராசி மண்டலமும் தனித்துவம்

🌻   27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.  ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.  அவை 12  வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :

👆   மேஷம்
✋   ரிஷபம்
✌   மிதுனம்
✊   கடகம்
💪   சிம்மம்
👋   கன்னி
👍   துலாம்
👇   விருச்சிகம்
☝   தனுசு
👌   மகரம்
👏   கும்பம்
👊   மீனம்

🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

👆  மேஷம் :

1.  வைராக்கியம்  (Assertiveness)
2.  தேசநலன் (Citizenship)
3.  நிறைவேற்றுதல் (Chivalry)
4.  துணிச்சல்  (Courage)
5.  கீழ்படிதல்  (Obedience)
6.  வெளிப்படையாக  (Openness)
7.  ஒழுங்குமுறை  (Order)
8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9.  ஆன்மிகம்  (Spirituality)

🎯  மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்

✋  ரிஷபம் :

1.  கருணை  (Mercy)
2.  இரக்கம் (Compassion)
3.  காரணம் அறிதல் (Consideration)
4.  அக்கறையுடன்  (Mindfulness)
5.  பெருந்தன்மை (Endurance)
6.  பண்புடைமை (Piety)
7.  அஹிம்சை  (Non violence)
8.  துணையாக  (Subsidiarity)
9.  சகிப்புத்தன்மை (Tolerance)

🎯  ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

✌  மிதுனம் :

1.  ஆர்வம் (Curiosity)
2.  வளைந்து கொடுத்தல்  (Flexibility)
3.  நகைச்சுவை (Humor)
4.  படைப்பிக்கும் கலை  (Inventiveness)
5.  வழிமுறை  (Logic)
6.  எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7.  காரணம்  (Reason)
8.  தந்திரமாக  (Tactfulness)
9.  புரிந்து கொள்ளுதல்  (Understanding)

🎯  மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

✊  கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3.  அறம் (Charity)
4.  உதவுகின்ற  (Helpfulness)
5.  தயாராக  இருப்பது  (Readiness)
6.  ஞாபகம் வைத்தல்  (Remembrance)
7.  தொண்டு செய்தல்  (Service)
8.  ஞாபகசக்தி  (Tenacity)
9.  மன்னித்தல்  (Forgiveness)

🎯  கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

💪 சிம்மம் :

1.  வாக்குறுதி  (Commitment)
2.  ஒத்துழைப்பு  (Cooperativeness)
3.  சுதந்திரம்  (Freedom)
4.  ஒருங்கிணைத்தல்  (Integrity)
5.  பொறுப்பு (Responsibility)
6.  ஒற்றுமை  (Unity)
7.  தயாள குணம் (Generosity)
8.  இனிமை  (Kindness)
9.  பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)

🎯  சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

👋 கன்னி :

1.  சுத்தமாயிருத்தல்  (Cleanliness)
2.  அருள் (Charisma)
3.  தனித்திருத்தல்  (Detachment)
4.  சுதந்திரமான நிலை (Independent)
5.  தனிநபர் உரிமை (Individualism)
6.  தூய்மை  (Purity)
7.  உண்மையாக  (Sincerity)
8.  ஸ்திரத்தன்மை  (Stability)
9.  நல்ஒழுக்கம்  (Virtue ethics)

🎯  கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

👍 துலாம் :

1.  சமநிலை காத்தல் (Balance)
2.  பாரபட்சமின்மை (Candor)
3.  மனஉணர்வு (Conscientiousness)
4.  உள்ளத்தின் சமநிலை  (Equanimity)
5.  நியாயம் (Fairness)
6.  நடுநிலையாக  (Impartiality)
7.  நீதி (Justice)
8.  நன்னெறி  (Morality)
9.  நேர்மை  (Honesty)

🎯  துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

👇  விருச்சிகம் :

1.  கவனமாக இருத்தல்(Attention)
2.  விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3.  எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4.  சீரிய யோசனை (Consideration)
5.  பகுத்தரிதல்  (Discernment)
6.  உள் உணர்வு  (Intuition)
7.  சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)
8.  கண்காணிப்பு  (Vigilence)
9.  அறிவுநுட்பம் (Wisdom)

🎯  விருச்சகராசி மண்டலமானது நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.

☝  தனுசு :

1.  லட்சியம்  (Ambition)
2.  திடமான நோக்கம்  (Determination)
3.  உழைப்பை நேசிப்பது  (Diligence)
4.  நம்பிக்கையுடன்  (Faithfulness)
5.  விடாமுயற்சி  (Persistence)
6.  சாத்தியமாகின்ற  (Potential)
7.  நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)
8.  உறுதி (Confidence)
9.  ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

🎯  தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

👌 மகரம்:

1.  கண்ணியம்  (Diginity)
2.  சாந்த குணம் (Gentleness)
3.  அடக்கம்  (Moderation)
4.  அமைதி (Peacefulness)
5.  சாதுவான  (Meekness)
6.  மீளும் தன்மை  (Resilience)
7.  மௌனம் (Silence)
8.  பொறுமை (Patience)
9.  செழுமை  (Wealth)

🎯  மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👏  கும்பம் :

1.  சுய அதிகாரம் (Autonomy)
2.  திருப்தி (Contentment)
3.  மரியாதை (Honor)
4.  மதிப்புமிக்க  (Respectfulness)
5.  கட்டுப்படுத்துதல்  (Restraint)
6.  பொது கட்டுப்பாடு  (Solidarity)
7.  புலனடக்கம்  (Chasity)
8.  தற்சார்பு  (Self Reliance)
9.  சுயமரியாதை  (Self-Respect)

🎯  கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👊 மீனம் :

1.  உருவாக்கும் கலை (Creativity)
2.  சார்ந்திருத்தல்  (Dependability)
3.  முன்னறிவு  (Foresight)
4.  நற்குணம் (Goodness)
5.  சந்தோஷம்  (Happiness)
6.  ஞானம் (Knowledge)
7.  நேர்மறை சிந்தனை  (Optimism)
8.  முன்யோசனை  (Prudence)
9.  விருந்தோம்பல் (Hospitality)

🎯  மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

Thursday, 16 February 2017

நீ

நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .

ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது . . .

அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .

எனவே நீ . . .நீயாக இரு !

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .

தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?

நீ . . .நீயாக இரு !

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .

ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !

நீ . . .நீயாக இரு !

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .

ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !

நீ . . .நீயாக இரு !

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .

ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !

நீ . . .நீயாக இரு !

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .

ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !

நீ . . .நீயாக இரு !

நேற்று போல் இன்றில்லை . . .

இன்று போல் நாளையில்லை . . .

அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

எனவே நீ . . .நீயாக இரு !

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !

அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !

அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !

அதில் பாபம் ஏதுமில்லை !

அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !

 உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாகவே இரு !

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் !!!

"உப்பு கொஞ்சம் குறைச்சலா இருக்கு. இன்னும் கொஞ்சம் போடுங்க!" என்று அனைவருமே கூறுவார்கள். உப்பு சேர்த்ததும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்!

காலங்காலமாய் மனிதர்களின் நாக்கில் கம்பீரமாய் அமர்ந்துவிட்ட உப்புதான்... இப்போது, அதே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தற்போது மக்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உலக மருத்துவ பத்திரிகைகள் பலவும் உப்புக்கு எதிரான எச்சரிக்கைக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளன.

‘உலகம் முழுவதும் மாரடைப்பால் நிகழும் மரண எண்ணிக்கைக்கும், சிறுநீரகப்பழுது, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதற்கும் முக்கியக் காரணம், உப்புத்தான்’ என்று மருத்துவர்கள் அடித்துச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

‘‘இந்தியர்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவேயில்லை’’ என்று வருத்தத்தோடு கூறும் பிரபல நெப்ரோலஜிஸ்ட் மருத்துவர் பி.ரவிச்சந்திரன், உப்பு பற்றிய விழிப்புணர்வு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம். ‘மனித ஆரோக்கியத்திற்கு எதிராக உப்பு எவ்வாறு செயல்படுகிறது’ என்பதை விரிவாகவே விளக்கினார்.

‘‘ஆதிகால மனிதர்கள் கடல் உப்பைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள். ஏன், இன்னமும் விலங்குகளுக்குத் தெரியாதது, இந்த உப்பு. உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள்தான் கடல் நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்தெடுத்தார்கள். அவர்கள் மொழியில் (Natron) நேட்ரான் என்று பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு, அதாவது ‘மம்மி’க்களைப் பாடம் செய்ய உப்பைப் பயன்படுத்தினார்கள். ஆதிகாலத்தில் வேட்டையாடுதல், போர்செய்தல் என்று வாழ்ந்த மனிதர்களுக்கு சோடியம் உப்பின் அறிமுகம், ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. அப்புறம், அது தேவையாகவும் மாறிவிட்டது.

உடல் உழைப்பைப் பிரதானமாகக் கொண்ட அன்றைய வாழ்க்கை முறையால், உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறியது. இதனால் ரத்தத்தில் இருந்த சோடியம் உப்பின் சமநிலை அடிக்கடிக் குறைந்தது. போர்க்களத்தில் உடல் சோர்ந்து விழுவார்கள், வீரர்கள். அந்தச் சமயங்களில் அவர்கள் கையில் உப்புக்கட்டிகள்தான் கொடுக்கப்பட்டன. உப்பை நாக்கில் வைத்த உடனேயே, அவர்கள் பழையபடி உற்சாகம் பெற்று எழுவார்கள். இதனால் அந்தக் காலங்களில் உப்பு, தங்கத்தைவிட உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்படி, பழங்காலத்தில் பிரமாண்டமான வரவேற்போடு மனித வாழ்க்கையில் நுழைந்த சோடியம் உப்புதான், இப்போது அதே மனித இனத்திற்கு விஷமாகவும் மாறியிருக்கிறது!’’ என்று நிறுத்தியவர், ‘எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்? என்பதை சற்று விரிவாகவே கூற ஆரம்பித்தார்...

‘‘மனித உடலுக்கு மிக அடிப்படையாக, நான்கு வித உப்புகள் தேவை. அவை பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம் ஆகும். இதில் பொட்டாசியத்தையோ, மெக்னீசியத்தையோ, கால்சியத்தையோ உப்பு வடிவில் பிரித்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளாத நாம், சோடியம் உப்பை மட்டும் கடல் நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம். சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் படுவதற்காகவும் அன்றாடச் சாப்பாட்டில் அதிகமாக சேர்க்கப் பழகினோம்.

விஞ்ஞான வளர்ச்சியால் நாளுக்குநாள் மனித வாழ்க்கையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. எப்போதும் உட்கார்ந்த நிலையிலும், ஏ.சி. அறையிலும் வேலை என்பது ஒரு பிரிவினரின் வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும். அதற்குமேல் ரத்தத்தில் சேரும் உப்பு... வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதின் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.

உதாரணமாக, பத்து கிராம் உப்பை வெளியேற்ற ஐந்து லிட்டர் சிறுநீர் கழிக்க வேண்டும். (இது தான் ‘உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்’ என்ற பழமொழியின் அர்த்தம்) உடலில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் சிறுநீரகம், சோடியம் உப்பை வெளியேற்றுவதற்குப் பதிலாக, உடல் பலத்தைத் தரும் மெக்னீசியத்தையும், எலும்பு உறுதியைத்தரும் கால்சியத்தையும் வெளியேற்றப் பழகிவிடும். உடலில் தேவைக்கு அதிகமாக சோடியம் உப்பு தங்க ஆரம்பித்தால்... உடல் பருமனாகும். கால்சியம் வெளியேறுவதால் மூட்டுவலி, முதுகுவலி வரும். மெக்னீசியம் வெளியேறுவதால் அசதி வரும். முக்கியமாக, சிற்றின்ப உறவு தோல்வியடையும். சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் முக்கிய நரம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவும் உருவாகலாம். மாரடைப்பு, சிறுநீரகப் பழுது போன்ற உயிர் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும். அதேபோல், சர்க்கரை வியாதிக்கும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கும் அதிக உப்புதான் காரணமாக இருக்கிறது!’’ என்கிறார், அவர்.

கடல் உப்புக்கு மாற்றாக இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் மலை உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இது மலைப்பிரதேசங்களில் பாறைவடிவில் கிடைக்கக் கூடியது. இதில் சோடியம் மிக மிகக் குறைவாகவும், சல்ஃபர், மெக்னீசியம், கால்சியம் தாதுக்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த உப்பை வட இந்தியாவில் பணக்காரர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம், அத்தனை விலை.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருள்கள் மற்றும் பால் இவற்றில் சேர்க்கப்படும் சோடியத்தின் அளவை, அதன் அட்டையில் அச்சிட வேண்டும் என்கிற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சோடியம் இல்லாத பொட்டாசியம் உப்புத்தூவிய உருளைக்கிழங்கு Chipsம், அங்கே விற்பனையில் இருக்கிறது. அதேபோல் கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகளில் இருந்து கிடைக்கும் மெக்னீசியம், புரோட்டீன்ஸ் அடங்கிய கோரல் உப்பு (coralsalt) ஜப்பான், அமெரிக்காவில் பிரபலம்.

ஆனால், நம் நாட்டிலோ சில பாக்கெட் பால்களில் கூட 0.3 கிராம் வரை சோடியம் உப்பு சேர்க்கப்படுகிறது. பல வீடுகளில் பாக்கெட் பாலில் போடப்படும் டீ, காபி கூட மெல்லிய கரிப்புச்சுவையோடு இருப்பதற்கு இதுதான் காரணம். கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட்ஸ், மற்றும் சாக்லேட்டுகளிலும் சோடியம் சேர்க்கப்படுகிறது. ஆனால், அதன் அளவை வெளிநாடுகளில் உள்ளதுபோல இங்கே நுகர்வோருக்குத் தெரிவிப்பதில்லை.

பிரபலமான குளிர்பானங்கள் அனைத்திலும் சோடியம் சல்பேட் சேருகிறது. கருவாடு, ஊறுகாய், அப்பளம் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகைகளில் கொஞ்சம் அதிகமாக சோடியம் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் மனிதனின் உடலுக்குள் ஒவ்வொரு நாளும் பத்திலிருந்து முப்பது கிராம் வரை சோடியம் உப்பு தானாகவே நுழைந்து விடுகிறது, என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

ஆனால், ‘பெரும் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதனுக்கு அன்றாடத் தேவைக்காக வெறும் இரண்டு கிராம் உப்பே போதும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அவன் சுவையாகச் சாப்பிடும் பொருள்களின் மூலம் இரண்டு கிராமைவிட அதிகமாகச் சேருகிறது. இப்படி உப்பின் அளவு கூடுவதினால், ஆண்மை பலம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகள்கூட குறைந்துவிடுகின்றனவாம்.

இதுதொடர்பாக, பதிலளிக்கும் டாக்டர் ரவிச்சந்திரன் ‘‘சோடியம் உயிர்த்தன்மையை அழிக்கக் கூடியது, மனித விந்தில் மெக்னீசியம், கால்சியம்தான் மிகுதியாக இருக்கிறது. உடலில் சோடியம் கூடும்போது... உயிர் அணுக்களை அது பாதிக்கும் என்பது உண்மையே. அனைத்துத் தாவர விதைகளிலும் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது. முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற தாவர விதைகளை அரைத்துத்தான் ஆண்மை லேகியம் செய்து விற்கிறார்கள். அதன் ரகசியம் மெக்னீசியம்தான். விதைகளில் அதிக சக்தி கொண்டது முருங்கையும், பூசணியும்! வெற்றிலை என்பது மெக்னீசியம். அதில் தடவப்படும் சுண்ணாம்பில் கால்சியம். அதனால்தான் தாம்பூலம் என்பது இல்லற வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்பட்டது!’’ என்றார்.

அயோடின் கலந்த உப்பு பற்றிக் கருத்து தெரிவிக்கும் அவர், ‘‘அதிக உப்பு சேர்த்துக்கொண்டால், அதிக அயோடின் சத்துக் கிடைக்கும் என சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அயோடின் என்பது இரண்டு பக்கக் கத்தி போன்றது. அது குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. சில விதமான கேன்சர், தைராய்டு பிரச்னைகளுக்குக் கூடுதல் அயோடினே காரணமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அத்துடன், நமது உடலுக்குள் நுழையும் சோடியத்தின் அளவைக் கண்காணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நாக்கில் சுவை மொட்டுக்கள் நன்கு செயல்படும் என்பதால்.... சிறுவயது முதலேயே குறைந்த உப்புச் சுவையே அவர்களுக்குப் பழக்க வேண்டும். கூடியவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் சோடியத்தின் அளவைக் கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். கசப்புச் சுவை உள்ள காய்கறிகளான பாகற்காய், கோவைக்காய், வாழைத்தண்டு, பச்சை நிறக் கீரைகள், மற்றும் மோர், இளநீர் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மெக்னீசியம், பொட்டாசியம் கால்சியம் போன்ற உப்புக்கள் நம் உடலில் இயற்கையாகவே சேர்ந்து விடும்.

அதோடு, அன்றாடம் சில உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நமது வியர்வைச் சுரப்பிகளுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கவும் வேண்டும்!’’ என்கிறார்.

இது மட்டுமல்ல, பெரிய பெரிய கம்பெனிகளின் விளம்பரங்களைப் பார்த்து, அந்த உப்புகளை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, கடைகளில் கிடைக்கும் சாதாரண கல் உப்பை வாங்கிப் பயன்படுத்துவதும் நல்லது. காரணம், பாக்கெட் உப்புகளில் 99 சதவிகிதம் வரை சோடியம் இருக்கிறது. கல் உப்பில் 40 சதவிகிதம் வரைதான் சோடியம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

ஆகமொத்தத்தில் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்’ என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது.