Thursday, 6 October 2016

நான் யார்

சிவபெருமானை அடைவதற்கான முதல்படி

நான் யார் என்பதை உணர்வதே…!!!

இமயமலையின்..ரிஷிகளும், முனிகளும் இந்த கேள்விக்கு விடை தெரியவே தவம் மேற் கொண்டனர்.தெரியாதவர்கள் உன்னுள் சென்று உன்னை ஆராய்ந்து பார் என்பதோடு நிறுத்திவிட்டனர்..

இந்த ஆராய்ச்சிக்கு பதில் என்ன? உன்னை ஆன்மா என்று உணர்ந்து கொள் என்று சொன்னவர்களும் உண்டு..சிலர் ஆன்மா இதயத்தில் உண்டு என்று சொல்பவர்கள் உண்டு..சிலர் முதுகு தண்டு வடத்தில் உண்டு என்று சொல்கின்றனர்.. சிலர் மூக்கின் நுனியை உற்று நோக்கி சிந்தியுங்கள்..இப்படி பலவிதமான கருத்துக்கள் உலகில்   நிலவுகின்றன..
ஆனால், படைத்தவர்தானே உண்மையை சொல்ல முடியும்..

படைத்தவர் என்றால் ஆன்மாவை படைத்தவர் என்று நினைத்து விடாதீர்கள். ஆன்மாவை யாரும்படைக்கமுடியாது.
அதை அழிக்கவும் முடியாது
அனாதியானது.

ஒரு வெள்ளை காகிதத்தில் ஒரு ஊசியின் நுனியில் மெல்ல குத்திவிட்டு வரும் நுண்ணிய புள்ளியைப்போல ஆயிரம் மடங்கு சிறிய புள்ளியே ஆன்மா. இதை உணரத்தான் முடியும். அந்த நுண்ணிய புள்ளி பிரகாசமான நட்சத்திரம் போன்றது. இந்த புள்ளிதான் நீங்களும்..நானும்..

பஞ்ச தத்துவங்கள் எனும் இந்த உடலில் 6 மாத பிண்டத்தில் ஆத்மா பிரவேசிக்கின்றது தாயின் கர்ப்பத்தில்.
ஐந்து தத்துவங்களில் ஆகாய தத்துவதில் ஆத்மா அமர்கின்றது. உடம்பில் ஆகாய தத்துவம் எதுவென்று கேட்க்கின்றிர்களா சரிதான்? நீரிற்கு ரத்தமும், மண்ணிற்கு தோலும்,உள்ளே காற்று சென்று வரும் வழிகளும்,உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைக்கும் வெப்பமாகிய நெருப்பும் இருக்கின்றது. ஆனால், இந்த ஆகாய தத்துவம் எங்கே இருக்கின்றது தெரியுமா, நெற்றியின் இரு புருவ மத்தியும், மூளை பகுதியின் இடைப்பட்ட பகுதியே ஆகாய தத்துவம்..இங்கேதான் ஆன்மா பிரவேசிக்கின்றது..இங்கிருந்தே ஆன்மா முழு உடலையும் இயக்குகின்றது.. இதுவே ஆன்மாவின் தலைமை செயலகம்..

இந்த நுண்ணிய பிரகாசமான ஆன்மாவில் நம்முடைய கர்மத்தின் பதிவுகள் பதிவாகின்றன அதற்காக இந்த ஆன்மாவிற்க்குள் மூன்று கருவிகள் இயற்கையாகவே பொருந்தி இருக்கின்றன.. ஆன்மா எவ்வளவு நுண்ணியது என்பதை பார்த்தோம்.
அதைவிட லட்சம் மடங்கு இந்த கருவிகள் நுண்ணியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.மூன்று கருவியில் முதல் கருவி மனம்..இரண்டாம் கருவி புத்தி, மூன்றாம் கருவி சுபாவம் எனப்படும் சமஸ்கார பதிவு. இந்த கருவிகள் எப்படி செயல்படுகின்றது என்று பார்ப்போம்.

முதல் கருவி எண்ணங்களை உற்பத்தி செய்யும் எண்ணக் கிடங்கு. எண்ணங்களை காட்சிகளாக உருவாக்கி கண் முன்னே கொண்டு வரும் கலை படைப்பாளி.. அதனால் தான் மனக்கண் என்று சொல்லப்படுகின்றது..இந்த மனதின் காமெரா எது தெரியுமா.
முகத்தில் தெரியும் கண்கள்.. மனதை செல்பி காமெரா என்று வைத்துக் கொண்டால்.. வெளிப்புற காமெரா கண்கள்.. உதாரணமாக ஒருவர் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு வந்து இன்னொருவருக்கு வர்ணிக்கின்றார். கேட்பவர் அதை அப்படியே மனக்கண்களால் காட்சிகளாக அந்த இடத்திற்கு செல்லாமலே உருவகப் படுத்துகின்றார்.இப்படி காட்சிகளை உருவகப்படுத்துவது மனதின் வேலை. உதாரணமாக, ஒருவர் லீவு நாளில் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவெடுக்கின்றார். அவர் கோவிலுக்கு செல்லும்பொழுது இன்னொரு பக்கம் ஒரு பாதை பிரிந்து செல்கின்றது.

அங்கே பட்டிமன்ற  விளம்பரம்
வைக்கப்பட்டுள்ளது.இப்பொழுது அவரது மனம்பட்டிமன்றத்திற்கு போகலாமா என ஆலோசிக்கின்றது. இப்பொழுது அவரது மனதில் கோவிலினுடைய காட்சியும்.. பட்டி மன்றத்தினுடைய காட்சியும் வந்து போகின்றது பார்த்தீர்களா இப்படித்தான் ஒரு தீய விஷயத்தை பார்க்கும் மனிதனும் தவறான வழிக்கு செல்வதில் முடிவெடுக்கின்றான், முதலில் பார்த்தது வெளிப்புற கண்கள். அடுத்து எண்ணங்களாக மாற்றியது மனம். இப்படி வரும் எண்ணங்களை தேர்ந்தெடுக்கும் அடுத்த கருவி புத்தி..இந்த புத்தியின் வேலை தீர்மானிப்பது..அதாவது கிளி ஜோசியத்தில் கிளி ஜோஸியக்காரனின் சமிக்கையை புரிந்து சீட்டு எடுக்குமே அந்த மாதிரி..மனதில் வரும் எண்ணங்களில் நல்லதோ அல்லது தீயதோ அதை தீர்மானிப்பது புத்தியின் வேலை.. அதனால்தான் உலகத்தில் கூட சிந்தித்தையெல்லாம் பேசிவிடாதே என்று சொல்கின்றனர்.

கோவிலுக்கு செல்லலாமா.. பட்டிமன்றத்திற்கு செல்லலாமா..
என்று முடிவெடுக்க முடியாமல் திணறியவருக்கு கோவிலுக்கே செல்லலாம் என்று ஆறுதல் படுத்தி ஒரு எண்ணத்தை தேர்ந்தெடுப்பது.. புத்தி என்னும் இரண்டாவது கருவி..புத்திசாலி,
புத்தியற்றவர் என்ற இரண்டு பெயர்களும் நாம் மனதில் வரும் தேர்ந்தெடுக்கும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. எனவே, பெரியவர்கள் நல்லதையே சிந்திக்கவேண்டும். மனதில் நல்லதையே எண்ணவேண்டும் என்று சொன்னார்கள். ஏனென்றால்.மனம் நல்லதை சிந்தித்தால் புத்தி நல்லதைத்தானே எடுத்தாக வேண்டும். இப்படித்தான் புத்தி செயல் படுகின்றது.

இனி மூன்றாவது கருவி.சுபாவம். ஒருவரை பார்த்தால் ரொம்ப நல்ல சுபாவம்.தீய சுபாவம் என்று சொல்கின்றோமே அந்த சுபாவம்தான் மூன்றாம் கருவி.புத்தி சொன்னபடி கோவிலுக்கு சென்ற அந்த மனிதர். அங்குள்ள சூழ்நிலைகள் மிகவும் அவருக்கு பிடித்து போனதால் அவர் அடிக்கடி கோவிலுக்கு செல்ல ஆரம்பிக்கின்றார் இதுவே அவருக்கு சுபாவம் என்னும் பழக்கம் ஆகின்றது.
என்ன வேலை இருந்தாலும் சாயங்காலம் 6 மணிக்கு கோவிலுக்கு போகாமல் இருக்கமாட்டேன் என்று ஒருவர் சொன்னால் அதை அவர் திரும்பதிரும்ப
பழக்கப்படுத்திக்கொண்டார்.

இந்த நேரத்தில் எனக்கு டீ சாப்பிடேலான தலை வலிக்கும்.மேலும் புகைக்கு,
மதுவிற்கு மற்ற தீய பழக்கங்களுக்கும் அடிமை ஆவது இப்படித்தான் மனதில் பிறர் மீது குரோதமான எண்ணங்களை வளர்ப்பவன்,பிறர் பொருளுக்கு ஆசைபடுபவன், காமத்தின் இச்சைகளை கொண்டவன், அகங்காரத்தின் வசப்பட்டவன் இப்படி இன்று இருக்கும் குற்றவாளிகள் அனைவரும் ஆன்மாவில் ஆரம்பத்திலேயே வரும் எண்ணங்களை கட்டுப்படுத்தாதவர்களே ஆவார்கள்.

எனவே, இந்த உடல் என்ற காருக்கு ஆன்மா டிரைவர்..பிரேக் என்பது மனம், புத்தி என்பது கியர், சுபாவம் என்பது ஸ்டீரியங். எனவே, மனதில் வேண்டாத எண்ணங்களை கொண்டுவந்தால் புத்தி என்ற கியர் அடிக்கடி மாறும்.அந்த பழக்கம் விபத்துக்கு கொண்டு செல்லும் ஸ்டீரியங்காக மாறிவிடும்.எனவே காரை ஓட்டிச்செல்லும் ட்ரைவர் கண்களின் மூலம் தீய காட்சிகளை பார்க்கும் பொழுதே பிரேக் போட்டு விடுதல் நலம்.இல்லாவிட்டால் வாழ்க்கை பாதையில் விபத்தை சந்திக்க வேண்டும், உடல் என்ற காரை மாற்ற வேண்டியது வரும்.

இதனாலேயே கோவிலுக்கு செல்லும் ஒருவர் முதல் படியில் சூடம் ஏற்றி தான் ஒரு ஆத்மா என்று உணர்ந்து கோவிலுக்குள் செல்கின்றார் எனவே இறைவன் சிவபெருமான் தரும் முதல் படிப்பும் நீங்கள் ஒரு அழிவற்ற நெற்றியின் இரு புருவ மத்தியில் வசிக்கும் ஜோதியான கண்ணுக்கு புலனாகாத ஆன்மா என்பதே ஆகும்.
எனவே, தன்னையும் ஆன்மா என உணர்வோம். பிறரையும் ஆன்மா என பார்ப்போம். அப்பொழுதுதான் மனதில் தெய்வீககுணமான கருணை தோன்றும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.