Sunday, 30 October 2016

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

*27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.*

இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே - லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து - பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.
நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.
உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும்.

*ஆலயங்களும், அமைவிடங்களும்

*அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* திருவாரூரில் இருந்து 30கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டிஉள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒருகி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

*பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* மயிலாடுதுறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடுவழியாக காரைக்கால் செல்லும் வழியில்நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.

*கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

*ரோஹிணி - அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்:* காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

*மிருக சீரிஷம் - அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்  தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

*திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

*புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

*பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்*
* *

*இருப்பிடம்: *பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

*ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

*மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

*பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

*உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

*ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்*
* *

*இருப்பிடம்:* கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

*சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்:* மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

*சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்*
* *
*இருப்பிடம்:* சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

*விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்*

*இருப்பிடம்  மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

*அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

*கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்:* தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

*மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

*பூராடம் - அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

*உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

*திருவோணம் - பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்*

*இருப்பிடம்:* வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்

*அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

*சதயம் - அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

*பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

*உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

*ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது
எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் திருத்தாள் போற்றி

நவபாஷாணம்

இந்து மதம் கூறும் நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1.சாதிலிங்கம்.

2.மனோசிலை

3.காந்தம்

4.காரம்

5.கந்தகம்

6.பூரம்

7.வெள்ளை பாஷாணம்

8.கௌரி பாஷாணம்

9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுத பாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.

வாழ்க்கையின் ஆயுள்கால கணக்கு!

வாழ்க்கையின் ஆயுள்கால கணக்கு!

நான் நன்றாக வாழ்ந்தேன்னு ஒருவர் சொல்கிறார் என்றால், அவருடைய வயது என்னவென்று கேட்க வேண்டும்?’ என்று சொன்னார் புத்தர்.

இதைக் கேட்டு அவரது சீடர்கள் யோசித்தார்கள். ‘என்ன சொல்றீங்க குருவே? சரியாகப் புரியலையே!’

புத்தர் : ‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன?’

‘நூறு வயசு?’ என்றார் ஒரு சிஷ்யர்.

‘ம்ஹூம். இல்லை!’
என்று உடனே மறுத்துவிட்டார் புத்தர்.

2 வது சீடர் : ‘அப்படியென்றால்? 90 வயது ?’

புத்தர்: ‘அதுவும் இல்லை!’

‘80? 70? 60?’ இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல, புத்தர் எதையும் ஏற்கவில்லை. கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க குருவே’ என்று அவரிடம் வேண்டிக் கொண்டார்கள்.

புத்தர்: ‘ஒரு நல்ல வாழ்க்கையென்றால், ஒரு விநாடிப்பொழுதுதான்!’ என்றார் புத்தர்.

‘என்ன சொல்கிறீர்கள் குருவே? ஒரு விநாடியில் என்ன பெரியதாகச் சாதிக்கமுடியும்? குறைந்தபட்சம் முப்பது, நாற்பது வருடமாவது வாழ்ந்தால்தானே மனித வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும் ?’

புத்தர்: ‘அப்படியில்லை.

1.ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும்.

2.பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. கடந்தகாலத்தில் வாழக்கூடாது!’ அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ள வேண்டும்.

3.எதிர்காலக் கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது.’‘ சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒவ்வொரு விநாடியும் புதியதாகப் பிறக்கிறோம், அதை முழுமையாக அனுபவிக்கிறோம். அதுதான் நல்ல வாழ்க்கை.

முதுகு வலிக்கு மருந்து-

முதுகு வலிக்கு மருந்து- பெரியவா தரும் health tips

பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்!

நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி!

"நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! அத்தனை வகை...  வைத்யமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சதுதான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. ஸொஸ்தப்படுத்தணும்"

முகத்தில் வேதனை தெரிந்தது.

" முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊறி, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ அவஸர யுகம் ! எண்ணெய் தேச்சு குளிக்கவே டைம் இல்ல.! "ஸனி நீராடு"ன்னு... ஸ்கூல்ல படிக்கறதோட ஸெரி. [இப்போ அந்த படிப்பும் இல்லை]

அத... follow பண்ணணுங்கறது மறந்து போச்சு.! அரப்பு, சீயக்கா பொடிக்கு பதிலா, தலைக்கு தேச்சுக்க என்னென்னமோ வந்திருக்காம்....! எல்லாம் கெமிக்கல்ஸ் சேந்தது.! பின்னால.... கெடுதி-ன்னு தெரிஞ்சாலும், அதையேதான் வாங்கறா...! போட்டும் போ! நீ இனிமே.... ரெகுலரா.... எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளி! மொளகு ரஸம், பெரண்ட தொகையல் பண்ணி ஸாப்டு..! என்ன?"

"கட்டாயம் பெரியவா சொன்னபடியே பண்றேன்"

மூணு மாஸம் கழித்து வந்தார் முதுகுவலிக்காரர்.

வலி போய்விட்டதாம்.!

எண்ணெய் தேச்சு வெந்நீர்ல குளியல், மிளகு ரஸம், பெரண்டை துவையல் இந்த மூன்றின் சேர்க்கை பற்றி யார் ஆராய்ச்சி பண்ணினால் என்ன, பெரியவா சொன்ன ஸிம்பிள் வைத்யம் கை மேல் பலன்!

பெரியவா திருவாக்கிலிருந்து சில health tips...

வீடுகள்ள, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்......

1. நல்லெண்ணெய் - வெளக்கேத்த, ஸமையல் பண்ண, எண்ணெய் தேச்சு குளிக்க;

2. வெளக்கெண்ணெய் - வர்ஷத்ல ரெண்டு தரம், காலேல வெறும் வயத்துல குடிச்சா..... வயறு ஸெரியா இருக்கும். வயத்துவலி இருந்தா, கொஞ்சம் வெளக்கெண்ணெய் எடுத்து தொப்புளை சுத்தி நன்னாத் தடவிண்டா ஸெரியாப் போய்டும். சூடு தணியும். பாதத்ல வெடிப்பு-கிடிப்பு, புண்ணு இதெல்லாம் வராது.

3. வேப்பெண்ணெய் - வேப்பெண்ணையை தெனோமும் கை,கால், முட்டிகள்ள தடவிண்டா, முட்டி வலி வரவே வராது.

[பெரியவாளும் தினமும் கை, கால் முட்டியில், வேப்பெண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பாராம்]

தெனோமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்ரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்.

அந்த காலங்கள்ள, வெளிலேர்ந்து வந்தா... குடிசைவாஸிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிக்கிண்டுதான் வீட்டுக்குள்ளியே நொழைவா!

இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான் கெடக்கு! பின்ன...ஏன் வ்யாதி வராது?......

Saturday, 29 October 2016

கருடபுராணம்

நல்வினைக்கான நன்மைகள்-கருடபுராணம் -ஸ்வாமி சிவானந்தா

1    அன்னதானம் செய்தல்    விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2    கோ தானம் செய்தல்    கோலோகத்தில் வாழ்வர்
3    பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு    கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு
4    குடை தானம் செய்தவர்    1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்
5    தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும்    சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்
6    வஸ்திர தானம் கொடுத்தவருக்கு    10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்
7    இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு    அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்
8    ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு    இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்
9    குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு    14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்
10    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர்    ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்
11    தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு    மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்
12    பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம்    உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை
13    நற்செயலை விரும்பி செய்கிறவர்கள்    சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்
14    தீர்த்த யாத்திரை புரிகின்றனர்    சத்தியலோக வாசம் கிட்டுகிறது
15    ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு    14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்
16    பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு    குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்
17    பண உதவி செய்பவர்கள்    ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்
18    நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும்    ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்
19    பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர்    தபோ லோகத்தை அடைகிறார்
20    புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால்    64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்
21    தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர்    10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
22    பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர்    இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்
23    தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு    நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்
24    சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு    ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்
25    ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு    கைலாய வாசம் கிட்டும்
26    அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர்    60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்
27    வுpரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர்    14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்
28    சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர்    ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்
29    ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர்    குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.
30    இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்    தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவா

பாபங்களுக்கான வியாதிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா

1    ;யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார்
2    எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார்.
3    வுpஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார்
4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார்
5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்    தொழு நோயால் துன்பப்படுவார்
6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார்
7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார்
8    மற்றவர் வீட்டை தீயினால் எரித்தவர்    உடலில் கொப்பலங்களுடனும் உடல் எரிச்சலுடன் அவதியுறுவார்
9    பொருள்களில் கலப்படம் செய்தவர்கள்    வாய்வு தொல்லையால் அவதிப்படுவார்
10    மற்றவர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தப்படுபவர், கொடுரமான செயல்களை குழந்தைக்கு செய்தவர்    சொரி, சிரங்கு மற்றும் தோல் நோயால் கஷ்டப்படுவார்
11    ஆபாச நடனங்களை பார்;க்கிறவர்கள், ஆபாச பாடல்களை கேட்பவர்க்கு    காதில் சீழ் வடிதல், காது இரைச்சல், காது கேளாண்மை
நோய்க்கு ஆட்படுபவர்
12    பெற்றோர் பேச்சை கேட்காதவர், பெற்றோரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவமானப்படுத்துபவர்    பார்வை குறைவு நோய்க்கு ஆளாவர், வெண்குஷ்டத்தினால்
துன்புறுவர்.
13    வுழக்கறிஞர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி தண்டனை பெற்றுக் கொடுத்தால்    நிற குறைபாடு நோய், கண்புரை நோய், ஞாபக சக்தி குறைவு நோய்க்குள்ளாவார்கள்

14    இரக்கமற்ற முறையில் மனிதர்களை கொள்வதற்காக அணு ஆயுதங்களை கண்டுபிடிப்பவர்கள்    பலவித கொடிய நோய்க்கு ஆளாவார்கள். மரமாக பிறந்தால் கூட மரத்தில் துளையிட்டு பூச்சிகள் குடியிருந்து மனிதனுக்கு பயன்படாமல் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு சாம்பலாக மறு பிறவி எடுப்பார்.
15    வரும் நோயாளியிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தும் மருத்துவர், உபயோகமில்லாத மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்பவர், அதிக கட்டணம் வசூலிப்பவர்    பெண்ணாக பிறப்பெடுப்பார், கருவறையிலே நோயுடன் ஜனிக்கிறார், பிரசவ காலத்தில் மிகவும் துன்பப்படுபவர், பெரும்பாலும் குழந்தை அழிந்துவிடும்.
16    சந்நியாசம் அடைந்த பின் மக்களை ஏமாற்றுபவர்    மலட்டு தன்மையுடன் பிறந்து, சந்தோசமில்லா வாழ்க்கையை அடைந்து, மனக்குறையுடன் பிறப்பார்
17    சாதுவான பிராணிகளை துன்புறுத்துபவர்    அனைத்து பற்களை இழந்தவராகவும், கொண்டைப்புண்
உடையவராகவும் பிறப்பார்
18    சிறையில் உள்ளவர்களை துன்புறுத்துபவர்    வாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயால் பீடிக்கப்படுவார்
19    தெய்வ நம்பிக்கை இல்லாதவர், சாதுக்களையும் இதிகாசங்களையும் புறம் பேசுபவர்    ஊமையாக பிறக்கிறார், தொண்டையில் புற்று நோய்
உள்ளவராகிறார்
20    ஏழை எளிய மக்களின் பொருள்களை வழிப்பறி செய்பவர்    சாப்பிட்ட உணவே விஷமாக மாறும் இதன் மூலம் உயிரழப்பு கூட ஏற்படலாம்
21    புராதன சின்னங்களை அளிப்பவர், புத்தகங்களை நெருப்பிலிட்டு எரிப்பவர்    வாய்வுத் தொல்லை மற்றும் புற்று நோயால் அவதிப்படவார்.
22    உடன் பிறந்த சகோதர – சகோதரிகளை மிரட்டுபவர்    மலட்டுத் தன்தையுடன் பிறக்கிறார்
23    வேலை அதிகம் வாங்கி குறைந்த ஊதியம் கொடு;ப்பவர்    ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், தலைச்சுருட்டி வாதம்
24    காய்கறிகள் மற்றும் பழங்களை திருடுபவர்கள், கெட்டு;ப்போன தானியங்களை புதுப்பிப்பவர்கள்    பற்கள் விகாரமாகவும், கண்புரை நோயுடனும் பிறப்பார்.
25    கொள்ளை லாபம் சம்பாதிப்பவர், கள்ள சந்தைக்காரர்    உடல் பருமன், வயிறு கோளாறு மற்றும் யானைக்கால் வியாதியால் பிடிக்கப்படுவர்
26    பசியோடு வந்த விருந்தினருக்கு வசதியிருந்தும் உணவளிக்க மறுப்பவர்    வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதையால் துன்புறுவர்
27    தனக்கு கீழ்படிந்துள்ள பணியாளர்களை கேவலமான  வேலை செய்ய சொல்வது, தேவையில்லாமல் தண்டிப்பது போன்ற செயல்களை செய்பவர்    தலைவலி, உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி மயக்கமடைவது போன்ற நோய்க்கு ஆளாவார்
28    பொதுமக்கள் சொத்துக்களை சுயநலத்திற்கு பயன்படுத்துபவர், தவறான கணக்குகளை அளிப்பவர்கள்    தொற்று நோய்க்குள்ளாவார்கள்
29    காரணமில்லாமல் மனைவியை அடிக்கும் கணவர், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்    நெஞ்சுவலி, பல்வலிக்கு உள்ளாவார்கள்
30    ஆண்மீக வாழ்க்கை வாழ விரும்பும் குழந்தையை உலக வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோர்    சுவாசக் கோளாறுகளால் பீடிக்கப்படுவர்

பாபங்களுக்கான பிறவிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா!!!

தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு என்ற ஐந்து பிறவிகளில் பிறருக்கு உபகாரமாயிருந்தால் தான் மானிடப்பிறவி ஆறாவதாக வாய்கிறது.

1    உத்தமனாய் இருப்பவர்    தேவனாகிறார்.

2    உத்தமனாய் இல்லையெனில்    முட்செடி, எருக்கு, ஊமத்தை போன்ற செடிகளாகிறார்.

3    தருமவான்    தாவரமானால் கனி கொடுக்கும் மரமாவன்.  மூலிகைச் செடியாவான்  முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் அரசமரமாவான்.

4    வலையில் சிக்கிய மீன்    எவர் பசிக்காவது உணவாகி அடுத்த பிறவியை அடைகிறது ;

5    கோயில் புற்றுக்குள் இருக்கும் நாகம்    பலராலும் வணங்கும் பேறு பெறுகிறது.

6    மற்றவரைச் சொல்லால் கொட்டுபவன்    விருச்சிகப் பிறவி அடைகிறான்.

7    தன் குடும்பத்தை மட்டுமே பேணுபவன்    நண்டாக பிறக்கிறான்.

8    குடும்பம், நாடு இரண்டுக்கும் பிரயோஜனப்படாதவர்    வெளவாலாக தொங்குகின்றான்.

9    தன்னை அழகாக அலங்கரிப்பவர்கள்    மயிலாக, கிளியாக, புறாவாக ஜெனனமெடுப்பர்.

10    கூர்மையான நோக்குள்ளவர்    வல்லூராக பிறப்பார்.

11    பசியென்று வந்தவர்க்கு வசதியிருந்தும் அன்னமிடாதவர்    பருந்துப் பிறவி வாய்க்கும்.

12    மற்றவரை எதற்காவது காக்க வைத்தவர்    கொக்காக பிறக்கிறார்.


13    குருவை, சாஸ்திரம் படித்தவரை நையாண்டி செய்பவர்    புலியாக பிறக்கிறார்.

14    நண்பனுக்கு துரோகம் செய்தவர்    நரியாக, கழுதையாக பிறக்கிறார்.

15    காது கேளாதவரை இகழ்பவர்    அங்கஹீனனாக பிறக்கிறார்
16    தாகத்துக்கு தண்ணீர் தராதவர்    காக்கையாக பிறக்கிறார்.

17    பிறரால் எற்பட்ட லாபங்களை தான் மட்டுமே அனுபவிப்பவர்    புழுவாகப் பிறக்கிறார்.

18    விருந்தினருக்கு கொடாமல் ஒளித்து வைத்து அறுசுவை உண்பவர்    புpசாசாக அலைய நேரிடும்.

19    பெற்றோர், இல்லாள், சந்ததிகளைக் கைவிட்டவர்    ஆவியாக அல்லாடுவர்.

20    கொலை, கொள்ளை, செய்பவர்    100 ஆண்டுகள் ஆவியாக அல்லாடுகிறார்.

21    தானம் கொடுத்ததைப் பறித்து கொள்பவருக்கு    ஓணான் பிறவி வாய்க்கிறது, அவர் மானிடப் பிறவி எடுக்கும் போதும் அற்பாயுளே வழங்கப்படும்.

22    மற்றவர் பிழைப்பைக் கெடுத்து சுகம் அனுபவிப்பவர்    திமிங்கலமாக பிறக்கிறார், அடுத்தடுத்து முயல், மான் முதலான ஜென்மங்களில் உழல்கிறார்.

23    தன் புத்திரியை தவறான செயலில ஈடுபடுத்துபவர்    மலத்தில் ஊறும் புழுவாகவும், அடுத்தடுத்து வேட்டைக்காரராகவும், காட்டுவாசியாகவும் பிறக்கிறார்.

24    விரதம், சிரார்த்தம் முதலான புண்ணிய தினங்களில் சம்போகத்தில் ஈடுபடுபவர்    பன்றியாக, கோழியாக பிறக்கிறார்.

25    கோள் சொல்பவர்    பல்லியாக, தவளையாக பிறக்கிறார்.

26    உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காதவர்    அட்டைகளாகப் பிறந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்.

27    மாமிசம் புசிக்கின்றவருக்கு    சிங்கம், சிறுத்தை, ஓநாய் பிறவிகள் வாய்க்கின்றன.

28    அநியாயமாக லஞ்சத்துக்கு வசப்பட்டு தீர்ப்பளிப்பவர்    கொசுவாக, ஈயாக, மூட்டைப்பூச்சியாக பிறக்கிறார்.

29    தீய சொல்லும், பிறர் நிந்தனையும் பேசுகிறவர்    ஊமையாக பிறக்கிறார்.

30.    தெய்வ நம்பிக்கை இல்லாதவர்    பன்றியாக பிறக்கிறார் அடுத்தடுத்து பணியாட்களாக வாழ்க்கை நடத்தும் தலைவிதி வாய்க்கிறது.