Thursday, 31 December 2015

அத்தி பழம்

மலட்டுத்தன்மைக்கு ஒரு எளிய வீட்டு மருந்து
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.
தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்ட
ு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
அத்திப் பழத்தை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சாப்பிடுவதால் ஏராளமான நோய்களுக்கு மருந்தாகின்றது.
குணமாகும் நோய்கள்:
🌰மலட்டுத்தன்மை
🌰மூலம்
🌰வயிற்றில் தோன்றும் நோய்கள்
🌰இரத்தசோகை
🌰மலச்சிக்கல்
🌰இரத்தத்தில் மிகுந்த கொழுப்பு
🌰மூச்சுக்குழாய்/நுரையீரல் அழற்சி
🌰ஆஸ்த்துமா
இத்துடன் வயிற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை
யும் அழிக்கவும், வயிற்றில் தோன்றும் அல்சருக்கும் நல்ல மருந்தாக திகழ்கிறது.
இப்பொழுது ஆலிவ் எண்ணையுடன் அத்திப்பழ மருந்தை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை:
40 உலர்ந்த அத்திப்பழங்கள்
1 லிட்டர் ஆலிவ் எண்ணெய்
செய்முறை:
ஒரு கண்ணாடி ஜாடியில் அத்திப்பழங்களை இடவும். மேலாக ஆலிவ் எண்ணையை ஊற்றவும். இந்தக் கலவை 40 நாட்கள் ஊறவிட வேண்டும். 40 நாட்கள் ஊறியவுடன் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கு முன் ஒன்று வீதமாக குறைந்தது மூன்று அத்திப்பழங்களை சாப்பிட வேண்டும். இது தீருவதற்க்கு முன்பாக அடுத்த செட்டை தயாராக்கிக் கொள்ளவும். மறக்காமல் கண்ணாடி ஜாடியை வெளிச்சம் இல்லாத குளிர்ந்த இடத்தில் வைக்கவும்
உலர்ந்த அத்திப்பழங்களில் கால்சியம், செம்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற மினரல்கள் நிறைந்து உள்ளன். பழுத்த அத்திப்பழங்களைக் காட்டிலும் உலர்நத பழங்களில் புரதம், சரக்கரை, மினரல்கள் அதிகமாக உள்ளது.
புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.
உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.
அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும்.
வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிற
து. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும்.
சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.