Saturday 5 March 2022

வாஸ்து

யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் 

யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல்
அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்
இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும் 

வாஸ்து மனையடி யோகபலன்  விதிமுறை 1 

முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும்
வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள்
அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும் 

வாஸ்து மனையடி விதிமுறை 2 

மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதியுள்ளேன் 

விதிமுறை அளவுகளாக அமைக்க 

6-8-10-11-16-17-20-21-22-26-27-28-29-30-32-33-35-36-37-39-41-42-45-50-52-54-56-59-60-64-66-68-71-72-73-74-75-77-79-80-84-85-88-89-90-91-92-94-95-97-99-100 இவை அனைத்தும் அறைகளின் உள் அளவுகளாக அமைக்க வேண்டும்.இருந்தாலும் நம்மிடம் உள்ள இடத்திற்கு சரியாக இந்த அளவு வராத நிலையில் மூன்று அங்குலம் கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம் 

வாஸ்து மனையடி விதி முறை 3 

அறைகளின் நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் அமைக்க வேண்டும் அதில் யோகம் தரும் சில நீள அகல முறைகள்
, 6 அடி அகலம் 8 அடி நீளமும் , 8அடி அகலம் 10 அடி நீளமும்,

10 அடி அகலம் 16 அடி நீளமும் , 16 அடி அகலம் 21 அடி நீளமும் ,
21 அடி அகலம் 30 அடி நீளமும் , 30 அடி அகலம் 37 அடி நீளமும் ,
37 அடி அகலம் 50 அடி நீளமும் , 39 அடி அகலம் 59அடி நீளமும்
42 அடி அகலம் 59 அடி நீளமும் , 50 அடி அகலம் 73 அடி நீளமும்
60 அடி அகலம் 80 அடி நீளமும்
இதில் காட்டியது போல் சரியான அளவில் அறைகள் அமைத்தால் மிகவும் யோகம் தரும். இந்த அளவுகள் தவீர விதிமுறை 1 ல் கூறிய மற்ற மனையடி அளவுகள் கொண்டும் அறைகள் அமைக்கலாம். அது சுமாரான பலங்களைத் தரும் 

வாஸ்து மனையடி சாஸ்திரம் விதிமுறை 4 

6 அடிக்கு குறைவாக கழிவறை குளியலறை மட்டும் அமைத்துக் கொள்ளலாம் மற்ற அறைகள் அமைக்கக் கூடாது
கட்டிடத்திற்கும் காம்பவுண்ட் சுவருக்கும் இடைவெளி விடும் போது குறைந்த பட்சம் 3 அடியும் அதற்குமேல் போகும்போது விதிமுறை 1 ல் கூறியுள்ள படி யோகம் தரும் அடிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்
  

வாஸ்து மனையடி விதிமுறை 5 

போர் அல்லது கிணறு வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் தான் அமைக்க வேண்டும் மற்ற திசைகள் ஆகாது
நாம் கட்டிடம் கட்டும் இடத்தில் எட்டு திசையில் எந்த பாகத்தில் நீரோட்டம் இருந்தாலும் வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது நீரோட்டம் பள்ளத்தை நோக்கி பாய ஆரம்பித்துவிடும்

அதனால் கண்டிப்பாக வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் போர் அல்லது கிணறு அமைக்கவும்.எல்லாவிதமான கட்டிடத்திற்கும் இது பொதுவானது
ஆனால் விவசாய நிலத்திற்கு இது பொருந்தாது.விவசாய நிலத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது அருகில் உள்ள மனையடி சாஸ்திரம் வாஸ்து அறிந்தவரின் ஆலோசனைப்படி அமைத்துக் கொள்ளுங்கள் 

வாஸ்து மனையடி விதிமுறை 6  

கழிவு அறை படுக்கை அறையில் வாயு பாகத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் கழிவுத் தொட்டி மொத்த கட்டிடத்தின் வாயு பகுதியில் மட்டுமே அமைக்க வேண்டும்
மற்ற திசைகள் ஆகாது. கழிவுத் தொட்டிக்கு மேலையும் கழிவறை அமைத்துக் கொள்ளலாம் 

வாஸ்துவிதிமுறை 7 

எந்த திசை தலவாசல் வீடாக இருந்தாலும் சமையலறை மொத்த வீட்டின் அக்னிப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும் மற்ற திசைகள் ஆகாது
சமையல் செய்பவர் கிழக்கு பார்த்து நின்று சமையல் செய்யுமாறு சமையல் மேடை அமைத்துக் கொள்ளவும்.மற்ற திசைகள் பார்த்து நின்று சமையல் செய்யக் கூடாது 

வாஸ்து விதிமுறை 8  

மாடிப்படிகள் மேற்குப் பாகம் அல்லது தெற்குப்பாகம் அல்லது கன்னி பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் மற்ற திசைகளில் அமைக்கக் கூடாது
படியில் ஏறும் பொழுது மேற்கு பார்த்து அல்லது தெற்கு பார்த்து ஏறும் வண்ணம் முதல் படியை அமைத்துக் கொள்ள வேண்டும் 

வாஸ்து விதிமுறை 9 

எந்த திசை தலவாசல் கொண்ட வீடாக இருந்தாலும் ஈசான்ய அறை பெரிய சன்னல்கள் பயன்படுத்தி கட்ட வேண்டும்
அந்த அறையில் கனம் கொண்ட பொருட்கள் வைத்து அடைத்து வைக்கக் கூடாது. படுக்கை அறையாகவும் பயன்படுத்தக் கூடாது

குழந்தைகள் பெரியவர்கள் படிக்கும் அறையாக பயன்படுத்தலாம் நல்ல கல்வி வளம் பெருகும்.அந்த அறை கோவிலைப்போல் எப்பவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
அந்த அறையில் கிழக்குப் பார்த்து சாமிப் படங்கள் வைத்து பூஜை அறையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் 

வாஸ்து விதிமுறை 10 

படுக்கை அறை மேற்குப் பாகம் அல்லது தெற்குப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும் . சிறிய வீடு என்றால் கன்னி பாகம் அல்லது வாயுப்பாகத்தில் அமைத்துக்கொள்ளலாம்.தெற்கு அல்லது மேற்கு மட்டுமே தலை வைத்து படுக்கும் வண்ணம் படுக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் 

வாஸ்து விதிமுறை 11 

பலமாடிகள் கட்ட வேண்டும் என்றால் கீழ் தளத்தின் உயரத்தைவிட மேல் தள உயரம் குறைந்தப்பட்சம் ஒரு அடியாவது குறைவாக உள்ளவாறு அமைக்க வேண்டும்
விதிமுறை 12
தண்ணீர்த் தொட்டி தரையில் அல்லது தரைக்குக் கீழ் அமைக்க வேண்டும் என்றால் வடக்கு பாகம் ஈசான்ய பாகம் கிழக்கு பாகம் ஆகியவற்றில் மட்டுமே அமைக்க வேண்டும்
மற்ற பாகங்களில் அமைக்கக் கூடாது. வீட்டின் மேல் அமைக்க வேண்டும் என்றால் மேற்குப்பாகம் அல்லது தெற்குப்பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும்  மற்ற பாகங்களில் அமைக்க கூடாது  கண்டிப்பாக கன்னி பாகத்தில் அமைக்கக் கூடாது 

விமுறை 13  தல வாசல் அமைக்கும் அறை 

எந்த திசையில் தல வாசல் அமைந்தாலும் தல வாசல் அமைக்கும் அறையில் சரியாக நடுப்பாகத்தில் வாசல் நிலை அமையுமாறு அமைக்க வேண்டும்
நிலைக்கு இரு புறமும் சன்னல்கள் கண்டிப்பாக அமைக்க வேண்டும் வீட்டின் உள்ளே உள்ள அறைகளில் வசதிக்கு தகுந்தவாறு வாசல் அமைத்துக் கொள்ளலாம் கதவு நிலை இல்லாமல் எந்த அறையும் அமைக்கக் கூடாது 

வாஸ்து விதிமுறை 14 

வீட்டின் நிலை ,சன்னல், கதவுகள் ஒரே ஜாதி மரத்தில் அமைத்துக் கொள்வது மிகவும் யோகம் தரும்
இரு ஜாதி மரங்களில் அமைத்துக் கொள்வதும் மிகவும் யோகம் தரும்.கண்டிப்பாக இரு ஜாதி மரங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அது மிகப்பெரிய கெடுதல் செய்யும் . கவனம் தேவை 

வாஸ்து விதிமுறை 15 

வீட்டிற்கு எந்த பாகத்திலும் பொதுச்சுவர் வரக்கூடாது  காம்பவுண்ட் சுவராக இருந்தால் தெற்கு அல்லது மேற்குப் பாகத்தில் மட்டும் பொதுச் சுவர் வரலாம்
கண்டிப்பாக வடக்கு அல்லது கிழக்கு பாகத்தில் பொதுச்சுவர் அமையக்கூடாது. தொழிற்கூடம் , வியாபார இடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது 

யோகபலன்
விதிமுறை 16
வியாபார ஸ்தலம் தொழிற்கூடத்திற்கு தலவாசல் மேற்கு அல்லது தெற்கு பார்த்து அமைத்தல் மிகவும் யோகம் தரும்
மற்ற திசைகள் சுமாரான யோகம் தரும்.வீடு என்றால் வடக்கு அல்லது தெற்கு பார்த்து தலவாசல் அமைத்தால் மிகவும் யோகம் தரும்

கிழக்குப் பார்த்து தலவாசல் அமைத்தால் சுமாரான யோகம் தரும் . மேற்குப் பார்த்து வீடுகளுக்கு தலவாசல் அமைக்கக் கூடாது.
விதிமுறை 17
கிழக்கு பார்த்த கோவிலும் , மேற்கு பார்த்த அன்னதானக் கூடமும் , வடக்கு பார்த்த பொது சத்திரங்களும் , மேற்கு தெற்கு பார்த்த வியாபார தொழிற்கூடங்களும் , வடக்கு தெற்கு பார்த்த வீடுகளும் அமைத்துக்கொள்வது மிகவும் யோகம் தரும்
விதிமுறை 18 

(VASTU IDEAS FOR HOME WITH A ZERO-DOLLAR BUDGET | LEARN BEST VASTU IDEAS) 

வீடு வியாபார ஸ்தலம் தொழிற்கூடம் இவை அனைத்திலும் எல்லா பாகத்து அறையிலும் பூஜை அறைகள் அமைத்துக் கொள்ளலாம்
சுவாமிகள் படம் கிழக்குப் பார்த்து அமைக்க வேண்டும். சுவாமியின் படத்திற்கு இடது பாகத்தில் விளக்கு வைக்க வேண்டும் வீடாக இருந்தாலும் வியாபார ஸ்தலமாக இருந்தாலும் தொழிற்கூடமாக இருந்தாலும் மாலை 5.45 க்கு மேல் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி 45 நிமிடங்கள் பாதுகாப்பாக தீபம் எரியும் வண்ணம் தினசரி வழிபட மஹாலட்சுமி யோகம் அமையும்
எந்த் கட்டிடமாக இருந்தாலும் புதுமனை புகும் போது கண்டிப்பாக கணபதி ஹோமம் செய்ய வேண்டும். பின்பு அதே மாதத்தில் ஆண்டுக்கொருமுறை கணபதி ஹோமம் செய்து வர பலவித யோகங்களை பெறலாம்
புதிய வீடு கட்டுபவர்கள் மேலே உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்தி 100% வாஸ்து பலமுள்ள வீட்டை அமைத்துக்கொள்ளவும்.பழைய வீட்டில் உள்ளவர்கள் இதில்
உள்ள படி மாற்றம் செய்து கொள்ளவும்

அறை, கூடம், ரேழி ஆகியவற்றிற்கு ஏற்ற அளவுகள்: 

6, 8, 10, 11, 16, 17, 20, 21, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 45, 52, 56, 60, 63, 64, 66, 68, 70, 71, 72, 73, 74, 77, 79, 80, 84, 85, 87, 88, 89, 91, 92, 95, 97, 99, 100, 101, 102, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 115, 116, 117, 119. 

இந்த அளவுகள் நன்மையையும், சுபிட்சத்தையும் தருவன ஆகும். 

மற்ற அளவுகள் தீய பலன்களை தரும். வீடுகளுக்கு தாழ்வாரம் 5 அடி 6 அங்குலத்திற்கு மேல் தான் அமைய வேண்டும். வீடுகளில் அமைக்கும் கூடம், அறைக்களுக்கு 10, 16, 22, 29 அடி அகலமும் அதற்கு சமமான நீளமும் வைக்க வேண்டும். 

இப்போது அறை, ரேழி, கூடம் ஆகியவற்றிற்கான அளவு முறைகளின் பற்பலன்களை விரிவாகக் காண்போம். 

6 அடி: 

இறைவனின் அருள் சேரும். குல தெய்வ வழிபாடு சிற்ப்பாகும். பொன், பொருள், யோகம் உண்டாகும். 

7 அடி: 

வறுமை தாண்டவமாடும். நோய் வரும். வரவுக்கு மேல் செலவு வரும். கடன் மிகும். 

8 அடி: 

செல்வம் கொழிக்கும். தெய்வ பார்வைகிட்டும். இன்பம் வந்து சேரும். பதவி கிடைக்கும். பிறறை அதிகாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். 

9 அடி: 

தோல்விகள் தொடர்கதை ஆகும். துன்பம் வரும். துணைவரோடு பிணக்கு ஏற்படும். 

10 அடி: 

அறுசுவை உணவு உண்ணலாம். ஆடம்பரமான ஆடை அணியலாம். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். 

11 அடி: 

எந்த காரியமும் துணிந்து செய்யலாம். வெற்றி பெறலாம் செழிப்பான வாழ்வு பெறலாம். 

12 அடி: 

எதிர்பாராத துர்மரணங்கள் உண்டாகும். எந்த காரியமுமே வெற்றி பெறாது. தகுதி இருந்தாலும் வேலை கிடைக்காது. ஏழ்மையின் எல்லையைக் காண நேரும். புத்திரர் இழப்பு உண்டாகும். 

13 அடி: 

தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்க முடியாது. விதம் விதமாக துயரங்கள் வந்து தாக்கும். நோய் நட்பு கொள்ளும். வருவாய் காணாமல் போகும். 

14 அடி: 

கவலை தொடர்ந்து முகாம் இடும். அன்னியரால் இடைஞ்சல் ஏற்படும். எந்த நேரமும் ஆபத்து வரும். ஏக்கம் வரும். தூக்கம் வராது. 

15 அடி: 

வறுமை சூழ்ந்து கொள்ளும். இல்லாமை இருக்கும். எதிரிகளினால் துன்பம், துயரம் ஏற்படும்.மனைவருத்தம் மிகும். 

16 அடி: 

மகிழ்ச்சி கூத்தாடும். பொருள் மலை போல் பெருகும். புகழ் தேடி ஓடி வரும். செல்வம் சேரும். 

17 அடி: 

வெற்றி  மீது வெற்றி வந்து சேரும். போட்டியாளர் வந்து பணிவர், எடுக்கும் காரியம் தானாக ஜெயம் ஆகும். தொழில் சிறப்பாக நடக்கும். 

18 அடி: 

திருடர்களாலும், மற்றவர்களாலும் பொன், பொருளுக்கு ஆபத்து நேரிடும். செலவு கட்டுப்படுத்த முடியாமல் போகும். வீடு இடிய நேரிடும். மன வேதனை தரும். 

19 அடி: 

இல்லாமை இருந்து கொண்டே இருக்கும். புத்திரர்களால் கவலை உண்டாகும். நம்முடன் துணையாக கவலையும், சோகமும் குடியேறும். 

20 அடி: 

தொழில் தடையின்றி நடக்கும் இலாபம் குறைவின்றி கிடைக்கும். வருமானம் பெருகி சொகுசான வாழ்வு கிடைக்கும். 

21 அடி: 

எங்கெங்கு காணிணும் வெற்றியாகவே இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பார்த்ததெல்லாம் பொருளாகும். மகிழ்ச்சி கூத்தாடும். 

22 அடி: 

எவரும் குறை சொல்ல முடியாத வாழ்வு அமையும். பழிகள் விலகும். எதிரிகள் தான் இழிவு பெறுவர். சுய கெளரவம் பெருகும். எவருக்கும் பணிய வேண்டி இருக்காது. 

23 அடி: 

உயர முயற்சித்தால் முடியாது. உறவினர் பகை கொள்வர். நிம்மதியை தேடினாலும் கிடைக்காது. துன்பமும், துயரமும் சொத்தாக விளங்கும். 

24 அடி: 

சேமிப்பு காலியாகும். கவலை தரும். நோய் தரும். முயற்சிக்கேற்ற வெற்றியும், உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்காது. எந்த காரியமும் பாதியிலேயே நிற்கும். 

25 அடி: 

இல்லறம் நல்லறம் ஆகாது. துணைவரால் துன்பம் நேரிடும். அவமானமும் நேரிடும். பிரிவு தரும். 

26 அடி: 

பொன்மகள் தேடி வருவாள். பொருள் செழிக்கும். யோகம் பெருகும். வாழ்வில் இன்பமே காண நேரிடும். 

27 அடி: 

தகுதிக்கேற்ற பதவி கிடைக்கும். பதவி உயர்வும் உண்டாகும். நல்ல மனிதர்களின் தொடர்பும், உதவியும் கிடைக்கும். பெயரும். புகழும் சிறப்பாக இருக்கும். 

28 அடி: 

இதுவரை இருந்த வேதனைகள் கதிரவனைக் கண்ட பனி போல் விலகும். வெற்றி கிட்ட ஆரம்பிக்கும். தோல்விக்கு மூடு விழா நடக்கும். எவரும் நட்பு கொண்டாடுவர். தெய்வ கடாட்சம் பரிபூர்ணமாக கிடைக்கும். 

29 அடி: 

கால்நடை, விவசாயம் விருத்தியாகும். உயர்வான அந்தஸ்து கிடைக்கும். வாழ்க்கை வளம் பெரும். 

30 அடி: 

அஷ்டலட்சுமிகளின் கடாட்சம் கிடைக்கும். சந்தானம் பெருகும். பூர்விகச் சொத்து கிடைக்கும். யோகம் நிரந்தரம் ஆகும். 

31 அடி: 

யோகம் கிடைக்கும். நல்லவர்களே நண்பர்கள் ஆவர். உயர்வான நிலை அடையலாம். மிகுந்த புகழ் கிடைக்கும். 

32 அடி: 

எவரையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். பொது நலச்சேவையில் புகழ் கிடைக்கும். இதுவரை இழந்தவைகளை இனிமேல் பெறலாம். 

33 அடி: 

எல்லோரிடமும் அன்பு பிறக்கும். வருவாய் அதிகரிக்கும். செல்வம், செல்வாக்கு பெருகும். 

34 அடி: 

தீய பலனே நடக்கும். மேலான காரியங்களில் ஈடுபட நேரிடும். அதனால் பிரச்சனையாகி அவமானம் அடைய நேரிடும். ஊரை விட்டு ஓட நேரிடும். முன்னோர் சேர்த்து வைத்த பெயரும், செல்வமும் இலக்க நேரிடும். 

35 அடி: 

செல்வ செழிப்பு உண்டாகும். தொழில் மேன்மை உண்டாகும். எல்லோரிடமும் பாராட்டு கிடைக்கும் வகையில் செயல்திறன் உண்டாகும். 

36 அடி: 

உயர்வான பதவி கிடைக்கும். வீரத்தீரச் செயல்கள் செய்ய நேரிடும். அதில் புகழ் கிடைக்கும். 

37 அடி: 

எந்த காரியமானாலும் வெற்றி கிடைக்கும். கால்நடை விருத்தி ஆகும். பண்ணைத் தொழில் மேன்மை பெறும். 

38 அடி: 

இடையறாத இன்னல்கள் ஏற்படும். ஏழ்மை நிலை கொள்ளும். எந்த காரியமும் செய்ய இயலாது. எதிலும் தடங்கல், இழுபறி நிலைதான் ஏற்படும். 

39 அடி: 

அமைதியான வாழ்வு அமையும். பொருள் நிலைக்கும். பொது இடத்தில் மரியாதை கிடைக்கும். நல்ல புத்திரர்கள் கிடைப்பர். 

40 அடி: 

எதிர்ப்பு மிகும். இடைஞ்சல்கள் இருக்கும். எடுத்து காரியங்கள் நிறைவேறாமல் போகும். எல்லா வேலையும் பாதியிலேயே நிற்கும். 

41 அடி: 

தொழில் சிறப்பாக நடந்து பொன், பொருள் மிகும். கொடுக்கல், வாங்கல் நன்றாக நடக்கும். 

42 அடி: 

சகல சுகபோகமும் அனுபவிக்கலாம். இல்லாமையே இருக்காது. அன்பு நடமாடும் கலைக்கூடமாக குடும்பம் இருக்கும். வாழ்வில் சகலமும் கிடைக்கும். 

43 அடி: 

தடை தடையின்றி கிடைக்கும். எதிலும் ஏமாற்றம் கிடைக்கும். ஒரு அடி உயர்ந்தால் பல அடி சறுக்கும். 

44 அடி: 

நோய்களுக்கு கொண்டாட்டம் தான். கண்பாதிப்பு நேரிடும். ஏக்கம் தான் மிஞ்சும். துன்பமும், துயரமும் போட்டி போடும். 

45 அடி: 

மிகுந்த பொருள் கிடைக்கும். புகழ் பெருகும். நன்மைகள் கிடைக்கும். 

46 அடி: 

முடியப் போகிற காரியங்கள் முடியாமல் பெருகும். வறுமை குடிபுகும். எந்த பெரிய காரியமும் செய்ய முடியாது. வேதனை மிகும். 

47 அடி: 

சேமித்த பொருள் செலவழிந்து போகும். வரவு நின்று போகும். கடன் சுமை ஏறும். கவலை தரும். 

48 அடி: 

பகைவர்கள் துன்பத்தை உண்டாக்குவார்கள். தீ விபத்து நடக்கும். விபத்து தரும். வறுமை மிகும். 

49 அடி: 

திருட்டு நடக்கும். அவமானங்களை எதிர்கொள்ள நேரிடும். அரசாங்க பகை, தண்டனை உண்டாகும். 

50 அடி: 

உற்றார், உறவினர்களின் தொல்லை தாங்க முடியாது. காரியங்கள் அப்படியே நிற்கும். 

51 அடி: 

வழக்கு, அடிதடி நிலைகள் ஏற்படும். துன்பம் தொல்லை நேரிடும். 

52 அடி: 

விவசாயம் இலாபம் தரும். மகசூல் சிறப்பாக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகள்  வெற்றி பெறும். 

53 அடி: 

தீய நடத்தையுடைய பெண்களின் தொடர்புகள் உண்டாகும் பெண்களால் அவமானமும், பிரச்சனையும் நேரிடும். 

54 அடி: 

அரசாங்க தண்டனை கிடைக்கும். 

55 அடி: 

சுற்றத்தாரிடம் பகைமை, சண்டை உண்டாகும். கொடுமையான சம்பவங்கள் நடக்கும். 

56 அடி: 

ஏழு தலைமுறைக்கு நலம் விளையும். பெருமையும், புகழும் நிரந்தரமாகும். நன்மைகள் நடக்கும். 

57 அடி: 

புத்திர தோஷம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் மோதல் பிரிவு ஏற்படும். 

58 அடி: 

எதிர்பாராத செலவு, இழப்பு ஏற்படும். துயரமும், துன்பமும் நிரந்தரமாகும். 

59 அடி: 

கஷ்டப்பட்டு சேர்த்து பொருள் தீய வழியில் காணாமல் போகும் முகம் வாட்டத்துடன் இருக்கும். எதுவும் நடக்காமல் ஏக்கம் தான் மிஞ்சும். 

60 அடி: 

தொழில் சிறப்பாக நடக்கும் திரவியங்கள் சேரும். பெருகும் தொட்டதெல்லாம் துலங்கி நன்மைகள் சேரும். 

61 அடி: 

கலவரம் உண்டாகும். மனதில் அமைதி இருக்காது. பிறரிடம் அடிமையாக நேரிடும். 

62 அடி: 

வறுமை, வாட்டம், வறுத்தம் இதுவே சொத்தாகும். 

63 அடி: 

பொன், பொருள் விருத்தியடையும். போற்றத்தக்க வாழ்வு அமையும். துறவிகள் அருளாசி, நல்லோர்கள் ஆதரவு கிடைக்கும். 

64 அடி: 

அரசு உதவி, அரசாங்க ஆதரவு உண்டாகும். பரிசு கிடைக்கும். பட்டங்கள், பதவிகள் தேடி வரும். புகழ் மிகும். பூரண மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடக்கும். 

65 அடி: 

இல்லற வாழ்வு கசக்கும். வாழ்க்கைத் துணையிடம் பரிவு, பாசம் இருக்காது. பிரச்சனைகளை உண்டாக்கி மனைவி பிரிந்து செல்வாள். 

66 அடி: 

எல்லா நன்மையும் ஒருங்கே சேர்ந்து விளங்கும். மன அமைதி, மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பொன், பொருள் விருத்தி ஆகும்.புகழ் பெருகும். 

67 அடி: 

திருடர்களால் தொந்தரவு ஏற்படும். தீய சக்திகள் குடியேறும். பேய், பிசாசு தாண்டவமாடும். வஞ்சகர் துன்பம் தருவர். 

68 அடி: 

நினைத்த காரியங்கள் நடக்கும். எதிர்பாராமல் பொருள் வரவு நடக்கும். துறவிகள் தொடர்பு, ஆன்மிகவாதிகள் ஆதரவு கிடைக்கும். 

69 அடி: 

செல்வம் நலமடயும், புகழ் சேதமாகும், தீயால் சேதம் உண்டாகும். தீயோரால் துன்பம் உண்டாகும். 

70 அடி: 

சென்ற இடமெல்லாம் சிறப்பும், மரியாதையும் உண்டாகும். செல்வம் தாராளாமாக வந்து சேரும். தொண்டு செய்து புகழ் பெறலாம். 

71 அடி: 

செல்வம் கொழிக்கும். நல்லவர்கள் ஆதரவு கிடைக்கும். அனைவரின் பாராட்டையும் பெறலாம். 

72 அடி: 

அனைத்து செல்வங்களும் வந்து சேரும். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். 

73 அடி: 

வம்ச விருத்தி தடைபடும். சுற்றத்தார்க்கு செலவழித்தே ஏழையாக நேரிடும். புகழ், பொருள் விரயம் ஆகும். 

74 அடி: 

பரிசு கிடைக்கும், பட்டம் கிடைக்கும். பதவி கிடைக்கும். பலரும் பாராட்டுவார்கள். பொன், பொருள் சேர்க்கை நடக்கும். 

75 அடி: 

கெட்ட பெயரே கிடைக்கும். சேமிப்பு காலியாகும். அருங்குணம் மாறும். அன்பு மனதிலிருந்து வெளியேறும். அல்லல் சேரும். 

76 அடி; 

எதிரிகளாலும், நண்பர்களாலும் தீமை விளையும். எவர் உதவியும் கிடைக்காது. கொடியவர்கள் பயமுறுத்தல் இருக்கும். பயமே வாழ்க்கை ஆகும். 

77 அடி: 

எவ்வளவு பெரிய பிரச்சனை, துன்பம் ஆனாலும் சமாளிக்க முடியும். தேவையான பொருள்கள் கிடைக்கும். செல்வச் செழிப்பு உண்டாகும். 

78 அடி: 

வாரிசுக்கு தீங்கு உண்டாகும். எதிர்காலம் சூன்யம் ஆகும். அவமானங்கள் நேரும். இன்னல்கள் தரும். 

79 அடி: 

கால்நடை விருத்தியாகும். பால் தொழில் நன்மை தரும். பண்ணைத் தொழில் சிறப்பாக இருக்கும். எல்லோரும் பாராட்டும் தன்மை ஏற்படும். 

80 அடி: 

யோகம் நிறைந்த மகிழ்வான வாழ்வு உண்டாகும். சுகபோக வாழ்வு கிடைக்கும். மங்கையர் உறவு, நன்மை உண்டாக்கும். சொகுசு வாழ்வு அமையும். 

81 அடி: 

விபத்து, ஆபத்து உண்டாகும். செல்வம் நஷ்டமாகும். 

82 அடி: 

மழை, வெயில், காற்று, தீயால் தீமை உண்டாகும். 

83 அடி: 

சுகமில்லாத வாழ்வு அமையும். வீடு பாழடையும். ஏழ்மை மட்டும் தான் குடியேறும். இன்னல்கள் சூழ்ந்து இருக்கும். 

84 அடி: 

ஏற்றம் உண்டாகும். எதிர்பாராமல் உதவியும், நன்மையும் உண்டாகும். வருவாய் பெருகும் பதவி உயரும். 

85 அடி: 

அரசு பதவி கிடைக்கும். அரசாங்க ஆளும் கட்சி உறவும் நன்மை தரும். சொந்த தொழில் மேன்மை தரும். 

86 அடி: 

ஆபத்து உண்டாகும். துன்பங்கள் தொடர்கதை ஆகும். பிறர் இகழ்வாக பேச நேரிடும். தொல்லை, துயரங்கள், அல்லல்கல் மிகும். 

87 அடி: 

பிரயாணங்கள் அடிக்கடி நேரும். பிரயாணங்கள் பெருமை தரும். எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். கால்நடை நலம் தரும். 

88 அடி: 

எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். இறை அருள் கிடைக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். 

89 அடி: 

விருந்து அடிக்கடி கிடைக்கும். நல்வாய்ப்புகள் தேடி வரும் முன்னேற்றத்திற்க்கு  அடிக்கல் நாட்டலாம். 

90 அடி: 

செல்வம் செழிப்பாக சேரும். சிறப்பான தன்மைகள் வந்து சேரும். அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும். 

91 அடி: 

கல்வியில் சிறப்பான நல்ல பலன்கள் உண்டாகும். நல்லவர்களின் நேசமும் ஆதரவும் உண்டாகும். தெய்வ அருள் கிட்டும், காரியங்கள் ஜெயமாகும். 

92 அடி: 

பரிசு, பட்டயம் கிடைக்கும். அரசாங்க மற்றும் ஆளும் கட்சியால் நன்மை உண்டாகும். 

93 அடி: 

அரசாங்க தொந்தரவு, தண்டனை ஏற்படும். அரசாங்க ஆணைகளுக்கு அடி பணிய நேரிடும். 

94 அடி: 

வறுமை தாண்டவமாடும். செல்வ செழிப்பு காணாமல் போகும். நிம்மதி நிலை குலைந்து போகும். 

95 அடி: 

பொருள் சேரும். விருத்தி அடையும். புகழ் சேரும். பெரிய மனிதர்கள், செல்வம் படைத்தவர்கள் தொடர்பு நன்மை உண்டாகும். 

96 அடி: 

கைப்பணம் காலியாகும். சேமிப்பு செலவழியும். ஆபரணங்கள், பொன் சேதம் ஆகும். திருடர்களால் தீமை ஏற்படும். 

97 அடி: 

நீரினால் நன்மை உண்டாகும். வியாபாரம் செழித்து பொருள் விருத்தி அடையும். 

98 அடி: 

சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும். எல்லோரிடமும் நல்ல உறவு உண்டாகும். நன்மைகள் புரிய நேரிடும். 

99 அடி: 

கல்விமான்கள், செல்வந்தவர்கள் நட்பு, தொடர்பு, உதவி கிடைக்கும். அரசாங்க ஆளும் கட்சியினால் நன்மை உண்டாகும். 

100 அடி: 

தெய்வ கடாட்சம் பூரணமாக கிடைக்கும். பொன், பொருள் விருத்தி அடையும். எல்லா நலன்களும் விளையும். 

101 அடி: 

வருவாய் விருத்தி ஆகும். சேமிக்க முடியும். புகழ் கிடைக்கும். மன மகிழ்ச்சி, பூரிப்பு உண்டாகும். 

102 அடி: 

பரந்த நோக்கம் வளரும். நன்மைகள் தேடி வரும். பிறறை கவரும் வசீகர சக்தி உண்டாகும். 

103 அடி: 

தீய நன்பர்களின் உறவு ஏற்பட்டு துன்பங்கள் மிகும். திருடர் பயம் ஏற்படும். நேர்மை குணம் மறையும். 

104 அடி: 

வருவாய் விருத்தி அடையும். துணை கிடைக்கும். இலாபம் தரும். உறவினர்களால் செலவு ஏற்படும். மன அமைதி குறையும். 

105 அடி: 

இல்லறம் நல்லறம் ஆகாது. மனைவியால் துன்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும். 

106 அடி: 

பொருள் வரவு உண்டாகும். ஆற்றல் பெருகும். அறிவு வளரும். அன்புள்ளம் கொண்டவர் நட்பு ஏற்படும். 

107 அடி: 

சம்பாதித்த பொருளை இழக்க வேண்டி வரும். ஈன குணமுள்ள மனிதர்களின் தொடர்பு ஏற்படும். வறுமை தாண்டவமாடும். 

108 அடி: 

ஆன்மிக வாதிகளின் அன்பும், தொடர்பும் ஏற்படும். மன அமைதி உண்டாகும். எதிபாராத நன்மைகள் வந்து சேரும். 

109 அடி:

அடி அளவு பலன்கள் நன்மை: 

7 தரித்திரம்.
8 மிகுந்த பாக்கியம் உண்டாகும்.
9 பீடை.
10 ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு.
11 புத்திர சம்பத்து நிச்சயம் உண்டு.
12 செல்வம் அழியும். 

13 பகைமை கூடும், பொருள் இழப்பு ஏற்படும்.
14 நஷ்டம்,விரயம் சபலம்.
15 மனக்கிலேசம்.
16 மிகுந்த செல்வம் உண்டு.
17 அரசன் போல் வாழ்வு.
18 அனைத்தையும் இழப்பர்.
19 உயிர் நஷ்டம்.
20 இராஜ யோகம் ,இன்பம்.
21 வளர்ச்சி, பால் பாக்கியம், பசுவிருநத்தி.
22 எதிரி அஞ்சுவான்.
23 நோய், கலக்கம்.
24 பரவாயில்லை ,நன்மை, தீமை எதுவும் இல்லை.
25 தெய்வம் உதவாது.
26 செல்வம் உண்டு,அமைதி இருக்காது.
27 மிகுந்த செல்வம் உண்டு.
28 தெய்வ அருள் நிச்சயம் உண்டு.
29 பால் பாக்கியம் ,செல்வம்.
30 இலட்சுமி கடாட்சம்.
31 நன்மை நிச்சயம் உண்டு. 

49 மூதேவி வாசம்.
50 பால் பாக்கியம்.
51 வியாஜ்யம்.
52 தான்யம் பெருகும்.
53 விரயம், செலவு.
54 லாபம்.
55 உறவினர் விரோதம்.
56 புத்திரகளால் பலன்.
57 மகப் பேறு இல்லை.
58 விரோதம்.
59 மத்திம பலன்கள்.
60 பொருள் விருத்தி.
61 பகை.
62 வறுமை.
63 குடி பெயரும்.
64 சகல சம்பத்தும் உண்டு.
65 பெண்கள் நாசம்.
66 பத்திர பாக்கியம்.
67 பயம். 

68 பொருள் லாபம்.
69 நெருப்பினால் நாசம்.
70 பிறருக்குப் பலன்.
71 யோகம்.
72 பாக்கியம்.
73 குதிரை கட்டி வாழ்வான்.
74 அபிவிருத்தி.
75 சுகம்.
76 புத்திரர் குறைவு.
77 யானை கட்டி வாழ்வான்.
78 பித்திரர் குறைவு.
79 கன்று காளை விருத்தி.
80 இலட்சுமி வாசம் செய்வாள்.
81 இடி விழும்.
82 தோஷம்.
83 மரண பயம்.
84 செளக்கியம்.
85 சீமானாக வாழ்வர்.
86 இம்சை உண்டு. 

87 தண்டிகை உண்டு.
88 செளக்கியம்.
89 பலவீடு கட்டுவான்.
90 யோகம் உண்டு.
91 விஸ்வாசம் உண்டு.
92 ஐஸ்வரியம் சேரும்.
93 பல தேசங்கள் சென்று வாழ்வான்.
94 அந்நிய தேசத்தில் இருப்பான்.
95 தனவந்தன்.
96 பரதேசி.
97 கப்பல் வியாபாரம் செய்வான்.
98 பிரதேசங்கள் செல்லும் வாய்ப்பு.
99 இராஜ்யம் ஆள்வான்.
100 சேமத்துடன் வாழ்வான். 

மேற்குறிப்பிட்டுள்ள வாஸ்து பலன்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் எழுதிய பழமையான பாடல்களின் மூலம் எழுதப்பட்ட மனையடி சாஸ்திரத்தில் இருந்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதை நீங்கள் பயன்படுத்த நினைத்தால் அருகிலுள்ள வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விட்டு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

நன்றி ... மணி மந்திர ஒளஷதாலயம். ஆசான்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.