Thursday 2 February 2017

ஞானம்

ஞானத்தின் முதல் நிலை உணர்வு நிலை
அது கடல் போன்ற பரந்த உணர்வை அடைதல்

இரண்டாம் நிலை எண்ண நிலை

எண்ணத்தை கை விட்டு உள்ளுணர்வு நிலைக்கு சென்று விடுதல்

அங்கு நான் என்ற தன் முனைப்பு இல்லை
இருப்பவர் தான் இருக்கிறார்

மூன்றாம் நிலை பற்றற்ற தன்மை

எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக பார்வையாளனாக இருக்கும் நிலை

நான்காம் நிலை அத்வைத நிலை

பிரம்மம் ஒன்றே என்ற உண்மை நிலை

கடவுள் எங்கும் குறிப்பிட்டு இல்லை

கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்
குறை ஒன்றும் இல்லாமல் அவர் கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றார்

பிரார்த்தனை என்பது கடவுளுக்கானது அல்ல

பிரார்த்தனை என்பது உங்கள் மாற்றத்திற்கான வழி

உங்கள் உடலைக் கவனியுங்கள் உணருங்கள்

உடலுடன் தொடர்பு கொள்ளுங்கள்

உங்கள் உடல் இயற்கையானது மனம் சொல்வதை விட உடல் சொல்வதுதான் சரியாக இருக்கும்

நீங்கள் இயற்கையின் ஒரு பகுதி இயற்கையை பின் பற்றுங்கள்

மன உறுதியை விடுங்கள் பிரபஞ்ச சக்தியாக மாறி விடுங்கள்

இந்த பிரபஞ்சம் என்னுள் சுவாசிக்கிறது என்னுள் வாழ்கிறது

நீங்கள் யாரிடம் இருந்தும் உண்மையை பெற்றுக் கொள்ள முடியாது

நீங்கள்தான் உண்மையாக மாற வேண்டும்

இரண்டு என்பது இல்லை ஒன்றுதான் இருக்கிறது

அறிபவன் இல்லை
அறியப் படுவதும் இல்லை

அறிதல் மட்டுமே இருக்கிறது

இதைத்தான்
மகா வீரர் கைவல்ய ஞானம் என்கிறார்

ஓஷோ
கைவல்ய ஞானம்
அறிதல் மட்டுமே
இருக்கிறது

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.