Saturday 12 November 2016

நல்ல மதிப்பெண்கள் பெற,

Page - 48 -

*ஸ்ரீ அகத்தியர் வாக்கு*

பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் *மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற, பரிகாரம் சொல்லுங்கள்:*

தேர்வைக்கண்டு ஒரு மாணவன் பயப்படுகிறான் என்றாலே,

அவன் அங்கேயே தோற்றுவிட்டான் என்றுதான் பொருள்.

அல்லது பயப்படும்படியான ஒரு தேர்வு முறையை மனிதன் ஏற்படுத்தி இருக்கிறான் என்றால் அந்த மனித சமுதாயமே தோற்று விட்டதாகப் பொருள்.

*கல்வியை கற்றுக்கொள்ள பயம் எதற்கு?*

புதிதான ஒரு விஷயத்தை மனிதன் *அனுதினமும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறான்.*

குழந்தை எப்படி கற்றுக் கொள்கிறது?

*ஊமையாகப் பிறக்கின்ற ஒரு குழந்தை எவ்வாறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்கிறது?*

யாராவது ஆசான் வந்து போதிக்கிறானா?
ஏன்?

*கூர்ந்த கவனம்.*

*வேறு புற சிந்தனைகள் ஏதுமில்லை.*

*பரிபூரண கவனம், தன் செவியில் என்ன விழுகிறது?* என்பதை சரியாக கிரகித்துக் கொள்கிறது குழந்தை.

*குழந்தையாக இருக்கின்ற பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறுதான்.*

அப்படியிருக்கும் பட்சத்தில் புதிதாக ஒரு செய்தியை தெரிந்து கொள்ள,

தெரிந்துகொண்டு *அந்த வழியில் கடமை ஆற்றத்தான் பள்ளிக்கு செல்கிறோம் என்ற உணர்வு பலருக்கும் இருப்பதில்லை.*

மாணவர்கள் தொடர்பான குறைகள் ஒரு புறமிருக்கட்டும்.
யாரும் சொல்லித் தராமலேயே ஒரு கலைக்காட்சியை மாணவன் சென்று பார்க்கிறான்.

*யாரும் உபதேசம் செய்யாமலேயே அதன் விளக்கங்களைப் புரிந்து கொள்கிறான்.*

ஆனால் பாடத் திட்டம் என்று வரும்பொழுது மட்டும் பலரால் அதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

*இங்கே சிந்திக்க வேண்டும்.*

*புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறுவது ஆசிரியரின் கடமை.*

என்னதான் எடுத்துக் கூறினாலும், புரிந்து கொள்ளாமல் இருப்பது என்பது ஒரு மாணவனின் மதி நிலை.

*இதற்கு பக்தி வழியாக ஹயக்ரீவர் வழிபாட்டையும், அன்னை கலைவாணி வழிபாட்டையும் நாங்கள் கூறினாலும்,*

*எந்த ஒரு விஷயமும் ஆர்வத்தைத் தூணடும் விதமாக இருக்க வேண்டும்.*

நன்றாக கவனிக்க வேண்டும்.

சிறுவர்கள் அயர்வு காலத்திலே வாகனத்தை கண்டால் ஆர்வமாகப் பார்ப்பார்கள்.

தந்தைக்குத் தெரியாமல் வாகனத்தை எடுத்து ஒட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
*யாரும் சொல்லித் தராமலேயே இதை ஏன் செய்கிறார்கள்?*

அதன் மீது உள்ள ஒரு ஈர்ப்பு.

*அப்படி கல்வியின் மீது ஒரு மனிதனுக்கு ஈர்ப்பு வர வேண்டும்.*

ஒரு மாணவனுக்கு ஈர்ப்பு வர வேண்டும்.

*அப்படி வரும் வண்ணம் கல்வி முறையை போதித்தால் எல்லா மாணவர்களுமே அறிவில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள்*

நாளை தொடரும்.....

......49

🌹 *நல்லதே நடக்கிறது*🌺

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.