Tuesday 29 September 2015

நல்லவர் நட்பு


நல்லவர்களின் நட்பையே ..
........................................................

ஒரு கிளி வியாபாரி கிளி விற்றுக் கொண்டு சென்றார்.அவ்வூரில் இருந்த கசாப்புக் கடை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு கிளியை வாங்கினார்

அதை தன் கடையின் முன் கட்டித் தொங்க விட்டார்.அந்தக் கிளியும் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

சிலநாட்கள் கழித்து கிளி வியாபாரி இன்னொரு கிளியை ஒரு ஆசிரமம் வைத்து நடத்தும் ஒரு முனிவரிடம் விற்றார்.

அந்த ஆசிரமவாசியும் அந்தக் கிளியை ஆசிரமத்தின் முன் பகுதியில் தொங்கவிட்டார். அந்தக் கிளியும் வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருந்தது.

சில நாட்கள் கழித்து கிளி வியாபாரி தான் விற்ற கிளிகளைப் பற்றி அறிந்து கொள்ள நினைத்தார்
.
முதலில் கசாப்புக் கடைக்குச் சென்றார்..அங்கே இருந்த கிளியிடம் சென்று" எப்படி இருக்கிறாய் கிளியே?"என்று அன்புடன் கேட்டார்

அதற்கு அந்தக் கிளி ,

"டேய்..இங்கே வாடா.., இவன் காலை ஓடி...கழுத்தை வெட்டு என்று மிகவும் கடுமையாகப் பேசியது..

அதே சமயம் கடை முதலாளியும் தன் வேலையாட்களிடம் எப்படி ஆட்டை வெட்டுவது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அதைக் கேட்ட கிளி வியாபாரி வருத்தத்துடன் வெளியேறினார்.

பின்னர் நேராக முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார்..

உள்ளே நுழைந்தவுடன் ..,

"வாருங்கள். நலமா? அமருங்கள். ஏதேனும் பழங்கள் உண்ணுங்கள்" என்ற அன்பான சொற்களைக் கேட்டு மகிழ்ந்தான் வியாபாரி..

அப்போது உள்ளே நுழைந்த முனிவர்,அன்பாக உபசரித்து பழங்கள் உண்ணக் கொடுத்தார்.இப்போது வியாபாரி புரிந்து கொண்டார்.

கசாப்புக் கடையில் பேசும் சொற்களை அங்கிருக்கும் கிளி கற்றுக் கொண்டது. முனிவரின் அன்புச் சொற்களை இங்கிருக்கும் கிளி கற்றுக் கொண்டது.

இந்தக் கதையின் நீதி யாதெனில்.,

''எங்கே நல்லன பேசப்படுகிறதோ, அங்கே நாம் இருந்தால் நமக்கும் அதே சொற்கள் தான் பேச வரும்..

எனவே நல்லதையே நாடவேண்டும் ..,

ஆம்..,நண்பர்களே.,

நல்லவர்களின் நட்பையே வேண்டுவோம்;

நல்லவைகள் நம்மைத்தேடி வரும்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.