Monday, 21 June 2021

ஒத்து போகுதல்

*'இணங்குவதால் பிழையில்லை  ''*            
      
      
         
       
       
    
         
நம்மில் பெரும்பாலானோர் சூழ்நிலைக்கு ஏற்ப இணக்கமாகச் செல்கிறோம். ஆனால் எப்போது இணக்கமாகச் செல்ல வேண்டும். எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்...

மற்றவர்களுடன் இணங்கிப் போவது என்பது ஒருவரின் பண்பினையும், பணிவையும் குறிக்கும்...

பணிவு என்பது சிலரின் கணிப்பில் இயலாமை என்று பிழையான எண்ணங்களை கருத்தில் கொள்ளாதீர்கள்...

இணங்கிப் போகிறவர்கள் கோழைகளும் அல்ல. அஞ்சி நடப்பவர்களும் அல்ல...

அவர்கள் அறிவுடன் கூடிய திறமையாளர்கள். இத்தகைய திறமையாளர்கள் எனப் பெயர் வரக் காரணம் இணங்கிப் போகும் அறிவும், புலமைக் கூர்மையும், திறமையும் தான் என்பதை யாரும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை...

இருந்தாலும் அனைவருக்கும் பிடித்தாற்போல் இணங்கி வாழ்ந்து வந்தால் சில வேளைகளில் நாம் நம் சுயம் இழப்பது உறுதி...

ஓர் உயிருள்ள கிணற்றுத் தவளை , வீட்டின் சமையலறையில், அடுப்பில் பற்ற வைத்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து விட்டது. 

தண்ணீரின் வெப்பம் கூடக் கூட தவளை தன் உடம்பின் வெப்பநிலையை சூழ்நிலை வெப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வந்தது... 

அதன் தன்மை அத்தகையது. தண்ணீர் அதன் கொதிநிலையை (100℃) அடையும் போது வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முற்பட்டது…

ஆனால் முடியவில்லை. காரணம் உடலின் வெப்ப நிலையை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வந்ததால் அது வலுவிழந்துப் போய் விட்டது…

அதுமட்டுமல்ல , பாவம் சிறிது நேரத்தில் அந்தத் தவளையும் இறந்தே போய் விட்டது…

தவளையைக் கொன்றது எது...? எளிதில் கூறி விடலாம் …கொதிநீர் தான் தவளையைக் கொன்று விட்டது என்று...

ஆனால் உண்மை அதுவல்ல. எப்போது குதித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத தவளையின் அந்த இயலாமை தான் அதைக் கொன்று விட்டது...

இணங்கிப் போகும் ஒருவருக்கு, மற்றவர்களும் இணங்கிப் போவார்கள்.

நீங்கள் பிறருக்கு ''இணங்கிப் போவது'' என்கிற பாடத்தை, கற்பிப்பதில் முன்னோடியாகத் திகழுங்கள்...

Sunday, 20 June 2021

எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி*

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*

ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*

வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*

ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி*

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்*

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி*

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி*

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி*

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி*

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி*

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாழை பொடி*

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

நன்றி வணக்கம்.

Saturday, 12 June 2021

பானை

#தமிழர்_வாழ்வியலில் பயன்பாட்டில் இருந்த 
#மண்பானை வகைகளும் அதன் #பயன்களும்.. 

1. #அஃகப்பானை – (தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை)  

2. அஃகுப்பானை – வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.

3. #அகட்டுப்பானை – நடுவிடம் பருத்த பானை

4. அடிசிற்பானை – சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.

5. #அடுக்குப்பானை – நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.

6. அரசாணிப்பானை – திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.

7. #உசும்பியபானை – உயரம் மிகுந்த பானை.

8. உறிப்பானை – உறியில் வைத்தற்கு ஏற்ற பானை

9. #எஃகுப்பானை – இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை

10. எழுத்துப்பானை – எழுத்துகள் வரையப் பெற்ற பானை

11. #எழுப்புப்பானை – உயரம் வாய்ந்த பானை

12. ஒறுவாயப்பானை – விளிம்பு சிதைந்த பானை

13. #ஓதப்பானை – ஈரப் பானை

14. ஓர்மப்பானை – திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை

15. #ஓரிப்பானை – தனிப் பானை, ஒல்லியான பானை

16. ஓவியப்பானை – ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை

17. #கஞ்சிப்பானை – கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை

18. கட்டப்பானை – அடிப்பகுதி வனையப்படாத பானை

19. #கட்டுப்பானை – மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )

20. கதிர்ப்பானை – புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை

21. #கரகப்பானை – கரவப்பானை – நீர்க்கரகம்

22. கரிப்பானை – கரி பிடித்த பானை

23. #கருப்புப்பானை – முழுவதுமாகக் 
கருநிளம் வாய்ந்த பானை

24. கருப்பு – சிவப்புபானை – உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை

25. #கலசப்பானை – கலயம், கலசம், கலம், நீர்க்கலம்

26. கழுநீர்ப்பானை – அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)

27. #காடிப்பானை – கழுநீர்ப் பானை

28. காதுப்பானை – விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை

29. #குண்டுப்பானை – உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை

30. குறைப் பானை – அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)

31. #கூடைப்பானை – கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை

32. கூர்முனை பானை – அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை

33. கூர்ப் பானை – கூர் முனைப் பானை

34. #கூழ்ப்பானை – கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை

35. கோளப் பானை – உருண்டு திரண்ட பானை

36. சருவப் பானை – மேற்புறம் அகற்சியாகவும் – கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.

37. #சவப்பானை – சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி

38. சவலைப் பானை – நன்கு வேகாத பானை, மெல்லிய பானை

39. சன்னப் பானை – மெல்லிய பானை, கனமில்லாத பானை

40. சாம்பல் பானை – கையால் செய்யப் பெற்ற பானை

41. சொண்டுப் பானை – கனத்த விளிம்புடைய பானை

42. #சோற்றுப்பானை – சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை

43. சில்லுப் பானை – மிகச் சிறிய பானை

44. சின்ன பானை – சிறிய பானை

45. #தவலைப்பானை – சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)

46. திடமப் பானை – பெரிய பானை (திடுமுப் பானை)

47. திம்மப் பானை – பெரும்பானை (திம்மம் – பருமம்)

48. துந்திப் பானை – தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை

49. தொண்ணைப் பானை – குழிவார்ந்த பானை

50. தோரணப் பானை – கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை

51. #தோள்பானை – தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை

52. நாற்கால் பானை – நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை

53. பச்சைப் பானை – சுடப்பெறாத பானை

54. படரப்பானை – அகற்ற – பெரிய பானை

55. பிணப் பானை – சவப்பானை, ஈமத்தாழி

56. பொள்ளற் பானை – துளையுள்ள பானை (பொள்ளல் பானை)

57. பொங்கல் பானை – பொங்கல் விழாவிற்குரிய பானை

58. #மங்கலக்கூலப்பானை – திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை

59. மடைக்கலப் பானை – திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை

60. மிண்டப் பானை – பெரிய பானை

61. மிறைப் பானை – வளைந்து உயர்ந்த பானை

62. முகந்தெழு பானை – ஏற்றப் பா

63. முடலைப் பானை – உருண்டையுருவப் பானை

64. #முரகுப்பானை – பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)

65. மொங்கம் பானை – பெரும் பானை (மொங்கான் பானை)

66. மொட்டைப் பானை – கழுத்தில்லாத பானை

67. #வடிநீர்ப்பானை – நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்

68. வழைப் பானை – வழவழப்பான புதுப்பானை

69. #வெள்ளாவிப்பானை – துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை.

தொப்புள்

நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு...

62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது. இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டு விட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்.

*அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான்.* 

தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

*நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான்.*

அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம். காரணம் *ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.*

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். 

*தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.*

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. 

நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.
   
தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு,  முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
*கண்கள் வறட்சி நீங்க, குறைந்த பார்வை சரியாக.. பளபளப்பான தலைமுடி பெற... மெருகூட்டப்பட்ட  சருமம் பெற.*

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

*முழங்கால் வலி குணமடைய*

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

*நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட, சருமத்திலிருந்து நிவாரணம் பெற.*

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி  கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

*தொப்புளில் ஏன் எண்ணெய் விட வேண்டும்..?*

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். 

அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.

*சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும்.*

எண்ணெய்யும் அவ்வாறே வேலை செய்கிறது.