*பஞ்சபூத இயல்பு*
1. நீர் - இதன் இயல்பு மேலிருந்து கீழாகப் பாய்வது,
சுவைகளில் இது - உப்பு.
2. நெருப்பு - இதன் இயல்பு மேலே நோக்குவது,
சுவைகளில் இது - கசப்பு.
3. ஆகாயம் - எதை வளைக்கவும் நிமிர்த்தவும் முடியுமோ, எங்கும் நிரப்பவும் முடியுமோ அதுவே ஆகாயம்,
சுவைகளில் இது - புளிப்பு.
4. காற்று - எதை வடிவமைக்க முடியுமோ, உருவாக்க முடியுமோ அதுவே அசையும் தன்மை கொண்ட காற்று,
சுவைகளில் இது - காரம்.
5. பூமி - எது விதைப்பிற்கும், வளர்ச்சிக்கும், அறுவடைக்கும் அனுமதிக்கின்றதோ அதுவோ பூமி,
சுவைகளில் இது - இனிப்பு.
இந்திய பாரம்பரிய தத்துவவியலில் மிக பழமையானதாகவும், எல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும் விளங்குவது இந்த பூதாவாதம்(பஞ்சபூத தத்துவம்)., மார்க்ஸ்ய தத்துவங்கள் இந்த பூதாவத தத்துவத்தை ஒன்றிற்கும் உதாவாதவை என்று குறை கூறினாலும்., உண்மையில் பூதாவாதம் மனித உடல் அமைப்பு, மனம் மற்றும் குணாதிசயம் போன்றவற்றை எளிமையாக புரிந்து கொள்ள உதவுகிறது., இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியலின் அடிப்படையில், உடல் மட்டும் அல்ல இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது., பூதாவாதத்தை புரிந்து கொள்வதன் மூலம் உடலின் இயக்கத்தை பற்றியும் மனதின் தன்மையை பற்றியும் புரிந்து கொள்ள முடியும்.,
i) நிலம்:
மண்ணின் அம்சத்தை பெற்றவர்கள் திடகாத்திரமான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும் இவர்கள் அனைவரையும் தன்னை நோக்கி ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாகவும், பொறுமை சாதுர்யம் ஆகிய குணங்களை உடையவர்களாகவும் இருப்பார்கள்., இவர்களின் வாயில் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் இரகசியம் வெளியே வராது., மண்ணின் அம்சம் குறைய குறைய கவலையின் அளவு அதிகரிக்கும், உணவில் புளிப்பு சுவையை சேர்த்து கொள்வது உடலில் மண்ணின் அம்சத்தை அதிகரிக்கும்.,(மிகையினும், குறையினும் நோய் செய்யும்)மண்ணின் அம்சத்திலான மரணமானது, மண்ணீரல் பாதிக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு பின் மரணம் ஏற்படும்.,
ii) நீர்:
நீரின் அம்சத்தை பெற்றவர்கள், அழகான, வசீகரமான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும், உடலாலும் மனதாலும் மிகவும் நெகிழ்வு(இளகிய) தன்மை கொண்டவர்களாகவும், அனைத்து சூழ்நிலைகளையும் அனுசரித்து செல்லக் கூடியவர்களாகவும், அச்சமற்வர்களாகவும் இருப்பார்கள்.,நீரின் அம்சத்தில் குறைபாடு ஏற்படும் போது, அதிக பய உணர்வும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும்., உணவில் இனிப்பு சுவையை சேர்த்து கொள்வது நீரின் அம்சத்தை அதிகப்படுத்தும்.,நீரின் அம்சத்திலான மரணமானது, சிறுநீரகம் செயலிழந்து அதனால் சருமம் சுருங்கி பின் மரணம் ஏற்படும்.,
iii) நெருப்பு:
நெருப்பின் அம்சத்தை பெற்றவர்கள், வலிமையான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும் ஆற்றல் மிக்க மனிதர்களாகவும், எளிதில் அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்களாகவும், அனைவராலும் அன்பு செலுத்தப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்., இவர்கள் எந்த ஒன்றையும் எளிதில் உள்வாங்கும் திறனையும், புரிந்து கொள்ளும் தன்மையையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.,எப்போதும் தனது குறிக்கோளையும், இலக்கையும் மட்டுமே முன்னோக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்., எந்த ஒரு சூழலையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.,கட்டுபாடற்ற நெருப்பின் அம்சத்தை பெற்றவர்கள் தலைகணம், கர்வம் உடையவர்களாக இருப்பார்கள்., காரம் நெருப்பின் அம்சத்தை உடலுக்கு பெற்றுத்தரும்.,நெருப்பின் அம்சத்திலான மரணமானது, இருதயம் செயலிழப்பதால் திடீரென நிகழும்.,
iv) காற்று:
காற்றின் அம்சத்தை பெற்றவர்கள், பலம் பொருந்திய ஆஜானுபாகுவான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும் வேகமாக செயல்படக் கூடியவர்களாகவும், யாராலும் கட்டுபடுத்த முடியாதவர்களாகவும், ஆகாயத்தின் அம்சத்தை பெற்றவர்களுக்கு மட்டுமே கட்டுபட்டவர்களாகவும் இருப்பார்கள்., இவர்கள் தோள் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள்.,இயல்பான ஆரோக்கிய நிலையிலும் அதிக உணவு உண்ணக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.,காற்றின் அம்சத்தில் குறை ஏற்படும் பொழுது, இரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகளும், செயல்பாடுகளில் வேகக் குறைபாடுகளும் ஏற்படும்., உணவில் துவர்ப்பு சுவையை சேர்த்து கொள்வது காற்றின் அம்சத்தை அதிகரிக்க உதவும்.,காற்றின் அம்சத்திலான மரணமானது,நுரையிரல் செயலிழப்பதால் உடலானது வலிமை இழந்து, கைகளை கூட தூக்க முடியாத நிலை ஏற்பட்டு பின் மரணம் ஏற்படும்.,
V) ஆகாயம்:
ஆகாயத்தின் அம்சத்தை பெற்றவர்கள், எல்லா வகையிலும் ஆரோக்கியமான உடலையும், மனதையும் பெற்றிருப்பார்கள்., மேலும் அனைத்தையும் கட்டுபடுத்தி ஆளுமை செய்யும் தகுதி உடையவர்களாய் இருப்பர்.,எப்போதும் எதையும் தீர்கமாய் சிந்தித்து பின் செயலாற்றுபவர்களாகவும், நேரான வழியில் நடப்பவர்களாகவும், வழி நடத்துபவர்களாகவும் இருப்பார்கள்., சுயநலமற்றவர்களாகவும், அடுத்தவரின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் தரக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.,ஆகாயம் நிலைத் தன்மை கொண்டது என்பதால், இதன் அம்சத்தை பெற்றவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்., உணவில் (உயிர்) கசப்பு சுவையை சேர்பது ஆகாய அம்சத்தை பெறுவதற்கு உதவும் (மிகையினும், குறையினும் நோய் செய்யும்)ஆகாய அம்சத்திலான மரணம், உயிர் ஆகாயத்தின் அம்சம் என்பதால், உடல் ஆகாயத்தின் அம்சத்தை பெற்றிருக்கும் போது மரணம் என்பது சாத்தியமில்லை.,
மரணம்:
இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் மரணம் என்பது, ஆகாயம்(உயிர்) உடலை விட்டு பிரிவதாகும், ஆகாயம் இல்லாத நிலையில் காற்றுக்கு கட்டுபாடு இல்லை எனவே அதுவும் உடலை விட்டு பிரிகிறது., எரிவதற்கு தேவையான காற்று(பிராணம்) இல்லாததால் நெருப்பு அணைகிறது., எனவே உயிரோடு இருந்த வரை உடலில் இருந்த வெப்பம் இப்போது இல்லாமல் ஆகிறது., நீரை அதனுடைய இடத்தில் பிடித்து வைத்திருந்த காற்று இல்லாததால் விந்து/நாதம், கபம் ஆகியவை உடலை விட்டு பிரிகிறது., எஞ்சி இருக்கும் உடல் மக்கி மண்ணாகிறது.,