Monday, 4 June 2018

கவனி

உன்னை கவனி...
பிறரை விட்டுவிடு.
ஓஷோ

🍁இந்தக் கேள்வியை
மாதேவ் ஆனந்தோ கேட்கிறார்...

"நான் சில பேர்களை கவனிக்கும் பொழுது...

அவர்கள் அதே பழைய செயல்களையே செய்வதுபோல் எனக்குத் தோன்றுகிறது...

அவர்களிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை...

அப்பொழுது என் கண்களும்,
என் இதயமும் மிகவும் சோர்வடைந்து...

மிகவும் கீழான நிலைக்குச்
சென்றுவிடுகிறது...என்று சொல்லுகிறார்.

🌸இந்தக் கேள்வி அநேகமாக,
இங்கே அமர்ந்திருக்கும் அனைவரின்
உள்ளத்திலும் கிளம்பியிருக்கலாம்...

இந்தக் கேள்வியை முதலில் ஆழமாகப்
புரிந்து கொள்ளுங்கள்...

"ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருக்கும்
அனைவரும்...

இந்தக் கேள்வியைத் தாண்டித்தான் செல்லவேண்டும்...

🌸முதலில் நீங்கள் ஒன்றை நன்றாக
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்...

அதாவது, பிறரை தீவிரமாகக் கவனிப்பதைத் தவிருங்கள்...

அது உங்கள் வேலையில்லை..
தேவையும் இல்லை...

🌸அடுத்தவர்கள் அப்படி அதே செயல்களைச்
செய்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தால்...

அதைத் தடுப்பதற்கு நீங்கள் யார்?

🌸அந்தத் தீர்ப்புக் கூறுவதற்கு உங்களுக்கு
யார் அதிகாரம் கொடுத்தது?

இப்படி அடுத்தவர்களைப் பற்றி
எப்பொழுதும் எடைபோடுவதை...

முதலில் நிறுத்துங்கள்.

🌸இதனால் அடுத்தவர்களுக்கு,
எந்த பிரயோஜனமும் இல்லை...

அதற்குமாறாக...
உங்களுக்கு, நீங்களே தீமையைத்
தேடிக் கொள்கிறீர்கள்...

நன்றாக ஞாபகம் இருக்கட்டும்.

🌸நீங்கள் ஏன் அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்?

அவர்களுக்கும், உங்களுக்கும்
என்ன சம்மந்தம்?

ஒருவன் தன் இஷ்டப்படி வாழ
சகல சுதந்திரமும் உண்டு...

🌸ஒருவனுடைய செயல்...
'உங்களுக்குத்' தவறாகத் தெரியலாம்...

அதைப் பற்றி அவனுக்கு என்ன கவலை?
"அவன் இயல்பில்,
அவன் சந்தோஷமாகவே இருக்கிறான்...

அது நல்லதுதான்.

🌻ஆனால், நாம், ஒருவனை...
அவன் எண்ணப்படி வாழ
அனுமதிப்பதே இல்லை...

"மற்றவர்களைப் பொருத்தவரையில்...

நாம் எப்பொழுதும் ஒரு நீதிபதியாகவே
இருக்க விரும்புகிறோம்..."

🌻சில சமயம், அவர்களை பாவிகள் என்றும்,
பல சமயம்
'அவன் நரகத்துக்குத்தான் செல்வான்' என்றும்...

மற்றும் அவன் இப்படி, இவன் இப்படி என்று விமர்ச்சித்துக் கொண்டே இருக்கிறோம்...

🌻இப்படி செய்து...
இந்தப் பழைய அற்ப விளையாட்டில்,
நீங்கள் களைப்படைகிறீர்கள்...

இது தேவைதானா?

அதற்குப் பதில், அவர்கள் அல்லவா
களைப்படைய வேண்டும் !
சலிப்படைய வேண்டும் !

🌻ஆகவே, தயவு செய்து
பிறரைக் கவனித்தலை நிறுத்தவும்.

🌸உங்களுடைய சகல சக்திகளையும்,
நீங்கள் உங்களைக் கவனிப்பதிலேயே
செலவழிக்க வேண்டும்...

🌸"ஒருவன், எவைகளையெல்லாம்
தன்னுள்ளே பார்க்க விரும்பவில்லையோ...

அதையெல்லாம் பிறர்மேல்
பார்க்கவே விரும்புகிறான்..."

🌸நாம் காலம் காலமாக...
ஏன், பல பிறவிகளாக...
இதைச் செய்து வருகிறோம்...

ஒரு கட்டத்தில் களைப்பும் அடைகிறோம்...

"அடுத்தவர்களை ஒப்பிடும்போது,
நாம் எவ்வளவோ பரவாயில்லை"

என்ற பொய்யான உணர்வு
உங்களிடம் ஏற்படுகிறது...

🌸நீங்கள் காலையில் எழுந்ததும்,
பத்திரிக்கையைப் படிப்பதன்
காரணம் தெரியுமா?

அவைகள் அந்த உணர்வை உங்களிடம் ஏற்படுத்துகிறது...

🌸காலையில் டீயோ, காபியோ அருந்துவதற்கு முன், அதைப் படிக்கவே ஆசைப்படுகிறீர்கள்...

ஆனால், அவைகளில்
எந்தப் புதுமையும் இல்லை...

🌸பத்திரிக்கைளைக் கூர்ந்து கவனித்தால்...

பழைய செயல்கள்தான்...
இடம் மாறி, ஆள் மாறி
வந்து கொண்டிருப்பதை அறிவீர்கள்!

ஆனால், அது உங்களுக்கு
ஒருவித திருப்தியைக் கொடுக்கிறது.

🌸படித்த விஷயங்களையே...
மீண்டும், மீண்டும் காலையில் எழுந்ததும் தினந்தோறும் படிக்கிறீர்கள்...

ஆகவே, அடுத்தவர்களை கவனிப்பதை
ஒரு கட்டத்தில் விட்டு விடுங்கள்,
அது தேவையற்றது....

🌿ஓஷோ🌿
☘தந்த்ரா அனுபவம்.