Saturday, 17 February 2018

பரிகாரத் தலங்கள்

பரிகாரத் தலங்கள்

ஆயுள் பலம் வேண்டுதல்..

1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
5.அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அ/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,

ஆரோக்கியத்துடன் வாழ..

1.அ/மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அ/மிகு. பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.
3.அ/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அ/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

எதிரி பயம் நீங்க..

1.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
2.அ/மிகு. அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.
3.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.அ/மிகு. காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.அ/மிகு. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.
7.அ/மிகு. தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.அ/மிகு. பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.அ/மிகு. மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
10.அ/மிகு. முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.அ/மிகு. ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.அ/மிகு. வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி

கடன் பிரச்சனைகள் தீர..

1.அ/மிகு. அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.அ/மிகு. கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.அ/மிகு. சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.அ/மிகு. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.அ/மிகு. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

கல்வி வளம் பெருக...

1.அ/மிகு. கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.அ/மிகு. தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.அ/மிகு. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

குழந்தைப்பேறு அடைய...

1.அ/மிகு. ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.அ/மிகு. சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.அ/மிகு. சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.அ/மிகு. பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.அ/மிகு. மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.அ/மிகு. முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.அ/மிகு. நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.அ/மிகு. விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க...

1.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
2.அ/மிகு. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.அ/மிகு. கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.அ/மிகு. சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.அ/மிகு. நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.அ/மிகு. பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
8.அ/மிகு. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.அ/மிகு. மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.அ/மிகு. லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.அ/மிகு. வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.அ/மிகு. ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

செல்வ வளம் சேர...

1.அ/மிகு. அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.அ/மிகு. அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
3.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.அ/மிகு. பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.அ/மிகு. மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

திருமணத்தடைகள் நீங்க...

1.அ/மிகு. உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
2.அ/மிகு. கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.அ/மிகு. கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
4.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.அ/மிகு. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.அ/மிகு. பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.அ/மிகு. நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

தீவினைகள் அகன்றிட..

1.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.அ/மிகு. குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.அ/மிகு. சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.அ/மிகு. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர...

1.அ/மிகு. அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.அ/மிகு. தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.அ/மிகு. பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.அ/மிகு. வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.

நோய், நொடிகள் தீர...

1.அ/மிகு. இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
2.அ/மிகு. தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
3.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண...

1.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2.அ/மிகு. பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.அ/மிகு. மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.

முன்னோர் வழிபாட்டிற்கு..

1.அ/மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
2.அ/மிகு. மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.அ/மிகு. வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அ/மிகு. ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
7.அ/மிகு. திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8 காசி காசி விஸ்வநாதர்
9 பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10 அ/மிகு . சொறிமுத்து அய்யனார் கோயில்
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்                    

ரத்ன மாலிகா

ஆதி சங்கரரின் *பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா* என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :

*1. எது இதமானது ?*
தர்மம்.

*2. நஞ்சு எது ?*
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

*3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?*
பற்றுதல்.

*4. கள்வர்கள் யார் ?*
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

*5. எதிரி யார் ?*
சோம்பல்.

*6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?*
இறப்புக்கு.

*7. குருடனை விட குருடன் யார் ?*
ஆசைகள் அதிகம் உள்ளவன்.

*8. சூரன் யார் ?*
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

*9.மதிப்புக்கு மூலம் எது ?*
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

*10. எது துக்கம் ?*
மன நிறைவு இல்லாமல் இருப்பது.

*11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?*
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

*12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?*
இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.

*13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?*
நல்லவர்கள்.

*14. எது சுகமானது ?*
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

*15. எது இன்பம் தரும் ?*
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

*16. எது மரணத்துக்கு இணையானது ?*
அசட்டுத்தனம்.

*17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?*
காலமறிந்து செய்யும் உதவி.

*18. இறக்கும் வரை உறுத்துவது எது ?*
ரகசியமாகச் செய்த பாவம்.

*19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?*
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !

*20. சாது என்பவர் யார் ?*
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

*21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?*
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

*22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?*
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

*23. செவிடன் யார் ?*
நல்லதைக்
கேட்காதவன்.

*24. ஊமை யார் ?*
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

*25. நண்பன் யார் ?*
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

*26. யாரை விபத்துகள் அணுகாது ?*
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.

Thursday, 15 February 2018

தொப்புளை சுற்றி

சித்தர்களின் பரிசு படித்ததில்!!!
தொப்புளில் எண்ணை போடுங்கள்!
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.
நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .
ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

Tuesday, 13 February 2018

முயற்சிக்கு பிறகு

பல பிறவிகளாக நான் கடுமையாக முயற்சி செய்திருக்கிறேன் முடிந்தவரையில் போராடியிருக்கிற
ேன்!
ஒன்றுமே ஏன் நிகழவில்லை என்பது இப்போது புரிகிறது!
நான் செய்த முயற்சி யே தடை !
தேடமல் அடைந்து விடமுடியும் என்பதல்ல!!
தேடல் தேவை !!!
ஓருகட்டத்தில் தேடலைகைவிடவேண்ட
ியது வரும் !!!
ஆற்றைகடக்க படகு தேவை ஒரு கட்டத்தில் படதைவிட்டு இறங்க வேண்டும்!!!
அதைமுற்றிலும்மறந்துவிட்டு மேலே செல்லவேண்டும்
1953 மார்ச்சு இருபத்தி ஒன்று !
நான் ஞானமடைந்த நாள்!
அதற்கு முன்பாக ஏழுநாள்கள்,
நான்சகலமுயற்றிக
ளையும்,கைவிட்டேன்
கடுமையான முயற்சிக்கு பிறகு தான்! முயற்சியால் எந்த பயனும்இல்லைஎனபுரியும் !!!
புதிய சக்தி என்னுள் எழுந்தது!
அது எங்கிருந்தும் வரவில்லை!!!
அல்லது எல்லா இடத்திலிருந்து வந்தது!!!
மரங்கள்,பாறைகள் வானம்,என அதுஎங்கும்இருந்தது!!!
அதுவெகு தொலைவில் நினைத்து கடுமையாக தேடியிருக்கிறேன்!!!
மிக மிக அருகில் இருந்ததை
காண தவறிவிட்டேன்!!!
முயற்சி யை கைவிட்ட அன்று!!
நானும் இல்லாமல்போனேன்!!!!
ஓஷோ

Friday, 9 February 2018

அழகான வரிகள் பத்து

*இரவு சிந்தன🙏🙏

அழகான வரிகள் பத்து*.

1} அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும்
*சாதாரண மனிதர்கள்* 🏹

2} பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்* 🏹

3} நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..
நாம் *அற்புதமானவர்கள்* 🏹

4} நேசிப்போரின் பார்வையில்..
நாம் *தனிச் சிறப்பானவர்கள்* 🏹

5} காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..
நாம் *கெட்டவர்கள்* 🏹

7} சுயநலவாதிகளின் பார்வையில் நாம்...
*ஒழிக்கப்பட வேண்டியவர்கள்* 🏹

8} சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் *ஏமாளிகள்* 🏹

9} எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் *குழப்பவாதிகள்* 🏹

10} கோழைகளின் பார்வையில் நாம் *அவசரக்குடுக்கைகள்* 🏹

✅ *நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்*
*ஒரு தனியான பார்வை உண்டு.*

🕊 ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்* 🏹

🥁 மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்......
*நீங்கள் நீங்களாகவே இருங்கள்*

🥁 *மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...*

🥁 இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*

*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!*

*எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் சொத்தாக இருக்கட்டும்* 👍

🎻 *வாழ்வோம்.. பிறரையும் வாழ வைப்போம்.

வாழ்க வளமுடன்...!!!

Wednesday, 7 February 2018

சூடான தண்ணீர்

இதை குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியமானது மற்றும் சிலர் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.

ஒரு ஜப்பானிய  மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
 
1 மைக்கிரேன்
 
2 உயர் இரத்த அழுத்தம்
 
3 குறைந்த இரத்த அழுத்தம்
 
4 மூட்டு வலி
 
5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்
 
6 கால்-கை வலிப்பு
 
7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்
 
8 .இருமல்
 
9 .உடல் அசௌகரியம்
 
10. கொலு வலி
 
11 ஆஸ்துமா
 
12 ஹூப்பிங் இருமல்
 
13 .நரம்புகள் தடுப்பு
 
14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
 நோய்கள்
 
15.வயிற்று பிரச்சினைகள்
 
16 .குறைந்த பசியின்மை
 
17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

* சுடு நீர் பயன்படுத்துவது எப்படி? *
 
காலையில் எழுந்திருந்து, வயிற்று வயிற்றுக்குள் சுமார் 2 தம்ளர் சூடான நீரில் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.

*குறிப்பு:*
* தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம்.

சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: -

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

✔ மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

✔ 4 மாதங்களில் கொழுப்பு

✔ கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்

4 மாதங்களில் ஆஸ்துமா

* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

* குளிர் நீர் 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்.

* இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீரில் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

* குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

-டாக்டர் டி. மென்சா-அசரே

Friday, 2 February 2018

கரிசலாங்கண்ணி

தீராத நோய் தீர்க்கும் ஞான மூலிகை - கரிசலாங்கண்ணி

சித்தர்களின் செல்ல பிள்ளையான இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார். மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

இந்த கரிசாலை என்னுடைய வாழ்நாளில் எந்த அளவு ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது என்று நான் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

இந்த கரிசாலை மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் இரத்த புற்றுநோய் (AML -  Acute Myeloid Leukemia)
போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் என்று சித்தர் பாடல்களில் மிகவும் தெளிவாக குறிப்புகள் உள்ளது.

இந்த கரிசாலை எனது மருத்துவ ஆய்வில் மிக பெரிய வெற்றி கொடுத்துள்ளதை கீழே விளக்கம் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை,  கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள்.  பல சித்தர்கள் கரிசாலையான அபூர்வ மருந்தை கற்ப மருந்தாக உண்டு பல யுகங்கள் தனது உடம்பினை கற்பமாக மாற்றி வாழ்ந்தார்கள்.

"கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்" என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

திருவுண்டாம் ஞானத்தெளிவுண்டாம் மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக் கையாந்தகரைத்
தன்னாகத் தின்றாகத் தான்.

விளக்கம் :
இம்மஞ்சள் கரிசாலையை உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் பேற்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசாலையை பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்தது காணப்படும்

வெள்ளை கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை
யுறர் பாண்டு பன்னோ யொழிய நிரர் சொன்ன
மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக்
கையாந்தகரை யொத்தக்கால்
                                                   (தேரன் வெண்பா)

விளக்கம் :
இவ் வெள்ளை கரிசாலையை எடுப்பதால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. அத்துடன் இரத்த சோகை அல்லது உடலின் உறுப்புகளின் வீக்கம் இருக்காது. முக்கியமாக 18 வகையான காமாலை நோய் தீரும். மேலும் குரலுறுப்பு நோய் மற்றும் பாண்டு பூரணமாக குணமடையும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். இவ் வெள்ளை கரிசாலை  சிறிது கார சுவை உடையது. பொதுவாக இதை மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள்.

WHO என்று சொல்லப்படும் உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுப்பில் குணமாகாது என்று குறிப்பிட்ட பல நோய்களில் ITP (Idiopathic Thrombocytopenic Purpura) என்பது வெள்ளை அனுக்களே
சிகப்பு தட்டணுக்களை அளிக்கக்கூடிய ஒரு வகையான Autoimmune Disease ஆகும்.

அப்பேற்ப்பட்ட வியாதியை நமது வள்ளல்பெருமனார்  சொன்ன இந்த ஞான மூலிகை உடன் தூதுவளை கலந்து கொடுக்கையில் 25 நாட்களில் குணமடைந்தது.

17 வருடமாக இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மருந்தை கொடுக்கையில் 25 நாளில் முழுவதுமாக குணமடைந்து. இதை வைத்தே கரிசாலை மற்றும் தூதுவளை காயகல்ப மருந்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உணரலாம்.

அதுமட்டுமன்றி சமீபத்திய ஆய்வில் இந்த கரிசாலையில் Gold nanoparticles என்று சொல்லப்படும் தங்க நானோ துகள்கள் உள்ளது. அதேபோன்று தூதுவளையில் Silver nanoparticles என்று சொல்லப்படும் வெள்ளி நானோ துகள்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதை நிருபிக்கும் ரூபமாக சில மாதத்திற்கு   தமிழகத்திற்கே சவாலாக விளங்கிய டெங்கு காய்ச்சல் என்பது உயிர்க்கொல்லி நோய் என்பதை அனைவரும் அறிந்ததே. டெங்கு காய்ச்சல் பல உயிர்களை கொன்று குவித்தது. உயிர் பிறிய முக்கிய காரணமாக பங்கு வகித்த Platelets என்று சொல்லப்படும் இரத்த தட்டணுக்கள் குறைந்தது தான். இரத்த தட்டணுக்களை அதிகப்படுத்த Allopathy என்ற ஆங்கில மருத்துவத்தில் எந்த மருந்தும் இல்லை. ஆனால் இரத்த தட்டணுக்களை அதிகப்படுத்தினால் காப்பாற்ற முடியும். இதை ஆய்வு செய்து பார்க்கையில் கரிசலையின் உதவிக்கொண்டு ஒரே நாளில் சரிசெய்ய முடியும் என தெரியவந்துள்ளது.
ஒரு நாளுக்கு இரண்டு முறை இளநீரில் கரிசாலை சாறு கலந்து கொடுக்கையில் ஒரே நாளில் 50,000 எண்ணிக்கையில் உள்ள தட்டணுக்கள் 1,50,000-மாக உயர்ந்து தட்டணுக்கள் அதிகமானது தெரியவந்துள்ளது. இக்கரிசாலைக்கொண்டு  காய்ச்சலை குணப்படுத்த முடிந்தது. குணமடைய இக்கரிசாலை பெரும் பங்கு வகித்ததை வார்த்தைகளால் சொல்ல இயலாது.
இந்த கரிசாலை இளநீரை வைத்தே டெங்குவால் பாதிக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றிள்ளேன். இவை அனைத்திற்கும் மூலக்காரணம் வள்ளல்பெருமானே... அவர் கூறிய இந்த ஞான மூலிகையை வைத்து மருந்து செய்கையில்
புற்றுநோய் அல்லாமல்
Liver Cirrhosis என்று சொல்லக்கூடிய கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களை முழுக்க குணமாக்க கூடிய ஆற்றல் இவ் கரிசாலைக்கு உண்டு.

சித்தர்கள் மற்றும் சத்த வைத்தியர்கள் தங்களது மருந்துகளில் குரு மருந்து என்று சொல்லக்கூடிய மருந்திற்க்கு எல்லாம் குருவாக விளங்கக்கூடிய மருந்தை கலந்து தான் மருத்து தயாரிப்பாளர்கள். இக்குரு மருந்தின் ஆற்றல் மருந்தின் வீரீயத்தை 1000 மடங்கு  அதிகமாக்கும். ஒவ்வொரு சித்தர்களும் தங்களுக்கென்று உரிய பானியில் சில குரு மருந்தை  சூரணத்தில் கலந்து அம்மருந்தின் வீரீயத்தை அதிகப்படுத்துவார்கள். அதுபோன்று எந்த நோயாக இருந்தாலும் அதில் அவர் அவர்களுக்கு என்று இருக்கும் குரு மருந்தை கலப்பார்கள்.
என் வாழ்நாளில் குரு மருந்து என்று ஒன்று கேட்டால் நிச்சயமாக கரிசாலை தான் முதலிடம் பெற்றுள்ளது. பஷ்பங்கள் மற்றும் செந்தூரங்களைவிட, வள்ளலார் சொன்ன ஞான மூலிகையான கரிசாலை என்ற கரிசலாங்கண்ணி தான் சிறந்ததாக இடம்பெற்றுள்ளது. பொதுவாக கல்லீரல் 300க்கு மேற்பட்ட வேலையை செய்கின்றது. இரத்தத்தை சுத்தம் செய்வதில் இருந்து பித்தநீரை வெளியேறும் வரை பல வேலைகளை செய்கிறது.

இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் தேவையைவிட குறைந்தால் உயிர் பிரிய நேரும். ஆனால் கரிசாலைக்கொண்டு இப்பிரச்சனையை தீர்க்க முடியும்.

உடலின்சக்தி (ATP)
சேமித்து வைக்கும் ஓர் உறுப்பு கல்லீரலே... அப்பேற்ப்பட்ட கல்லீரல் பாதிப்படைந்தால் ராஜ உறுப்புகளான சிறுநீரகம், இதயம், மண்ணீரல், கணையம் இன்னும் பல உறுப்புகள் பலவீனமாக வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆகவே நான் எந்தவித மருந்து தயாரித்தாலும் அதில் எனது ஒரு குரு மருந்தான கரிசாலை நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். இதனால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு மூலக்காரணமாக உள்ள உறுப்பை தூண்டி நன்கு வேலை செய்ய வைக்கும்.
காச நோய், சக்கரை நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் கரிசாலை முக்கிய பங்களிப்பு தந்துள்ளது என்பது எனது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரிசாலை கல்லீரல் சம்மந்தப்பட்ட அனைத்து நோயையும் குணமாக்கும். முக்கியமாக மஞ்சள் கரிசாலையை ஆட்டுப்பாலில் கலந்து காலை மாலை கொடுக்கையில் மகோதரம் என்று சொல்லக்கூடிய கல்லீரல் பாதிப்படைந்து வயிறு வீக்கம், கல்லீரல் வீக்கம் மற்றும் சித்தர்கள் சொன்ன 18 வகையான காமாலைகளுக்கும் இக்கரிசாலை சிறந்த மருந்து. இதேபோன்று கரிசாலையில் புடம் போடப்பட்ட அன்னபேதி செந்தூரமும் கூட தீராத மஞ்சள் காமாலை நோய்களுக்கும் கொடுத்து குணமாக்க முடியும். இன்னமும் சில சித்த வைத்தியர்கள் இம்முறையை பின்பற்றி மிக சிறந்த முறையில் மக்களை பிணியில் இருந்து காத்துவருக்கின்றனர்.
வெள்ளை கரிசலாங்கண்ணியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை கரிசாலையை உணவாகவும் எடுத்துக்கொண்டால் நல்லது. தலை முடி நன்கு வளர கருமையாக இருக்க இவ் வெள்ளை கரிசாலை உதவுகின்றன. இவை ஓர்  இயற்கை கூந்தல் தைலமாக இருக்கிறது.
கரிசாலை, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவுரிஇலை என அனைத்தும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யில் தைலம் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் உடம்பில் பித்தத்தை சரி செய்து தலை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் மற்றும் இளநரையையும்  சரி செய்யலாம். இக்கரிசாலையை பொற்றகாக கொடுப்பதால் சித்தர்கள் இதனை பொற்றலை என்று அழைக்கின்றனர்.

இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. கரிசாலையின் பயன்களை பற்றியும் மருத்துவ குணப்பற்றியும் எடுத்துச்சொல்ல வார்த்தைகளுள் அடக்கிவிட முடியாது. இருந்தாலும் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வள்ளல்பெருமான் சொன்ன குரு மருந்தை வைத்து எனக்கு தெரிந்த மருந்துகளை  எனது அனுபவ முறையில் கையாண்டு மக்களின் பிணியினை நீக்கினேன்.
அதுமட்டுமன்றி கரிசாலையை உண்டு மக்கள் தங்களின் ஞான நிலையை அடைய ஓர் ஊன்றுகோலாக இருக்க விரும்பிய வள்ளல்பெருமான் இதனை கற்ப மூலிகை என்று கூறியுள்ளார். அதனால் அனைவரும் தங்களுடைய உடல் பிணியையும் உள்ளம் பிணியையும் நீக்குவதற்கு இக்கரிசாலையை வள்ளல்பெருமான் சொன்னதுபோல் எவ்வித தந்திரத்தால் உட்க்கொண்டு
மனிதர்களுக்கு வரக்கூடிய பிணியினை நீக்கி, மேல் நிலை அடைந்து அனைவரும் சமரச சுத்த சன்மார்க்கியாக ஆக
வேண்டும் என்ற எனது விருப்பத்தை கூறி வேண்டுகிறேன்.

இத்தகவல்களை தங்களிடம் பகிர்ந்தமைக்கு எண்ணி பெருமை அடைகிறேன்.