Sunday, 9 September 2018

உடல் மருந்து பாடல்

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. கொஞ்சம் பொறுமையா படித்து பாருங்கள்.

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                          
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

Thursday, 6 September 2018

உடல்

♥படுகையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

♥பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

♥விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்

♥காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .

♥கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .

♥கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .

♥நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .

♥உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .

♥இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்

♥அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

♥மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..

♥துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

♥அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .

♥பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

♥குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

♥கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .

♥அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

♥இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .

♥கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .

♥அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .

♥நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .

♥அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..

♥என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...

♥காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

♥பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது

♥சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .

♥குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .

♥ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

♥சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .

♥அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .

♥எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .

♥சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

♥கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,

♥உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.

♥கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

♥தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

♥பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .

♥இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .

♥மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .

♥நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..

♥மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....

♥கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....

♥நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .

♥இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .

♥(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.

♥தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.

♥சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .

♥உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

Tuesday, 28 August 2018

Vasthu

1, வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.

2, வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.

3, மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும்.

4, ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.

5, வீட்டிக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.

6, வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது.

7, மனையில் வீடு கட்டும்போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில்
கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

8, வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கினறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

9, வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.

10,வீடு கட்ட கடைக்கால் தோண்டும்போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும்.

11, வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து   ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

12, தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும்.

13, வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு,வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

14, பஞ்சபூதஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்கவேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும்.

15, வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும்.

16, வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.

17, கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும்.

18, தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத்தொட்டி அமைய வேண்டும்,

19, கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும்.

20, செப்டிக்டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.

21, அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.

22, வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்ககூடாது.

23, மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமையவேண்டும்.

24, வீட்டிற்கு தெற்க்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும்.

25, வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும்.

26, ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்பது நல்லது.
உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது.

27, ஆட்டுக்கல், அம்மி, தெற்கு, மேற்கு, தென்மேற்கு,தென்கிழக்கு பகுதிகளில் அமைக்கலாம். வடகிழக்கு பகுதிகளில் அமைக்க கூடாது.

28, .பிரிட்ஜ் கிரைண்டர் போன்ற மின்சாதனப் பொருள்கள் அறையின் தென்கிழக்கில் அமைக்கலாம்.

29, ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.

30, அக்னி மூலையில் படுக்கை அறை கூடாது.

31, தெற்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு வழி கோலும்.

32, உண்ணல் படித்தல் கிழக்கு நோக்கி இருப்பதுதான் நல்லது.

33, வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.

34, ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது.

35, வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக வளரும் நிழல் தரும் மரங்கள் வள்ர்க்ககூடாது.

36, வீட்டின் தெற்கு அல்லது மேற்கே உள்ள உயரமான மரங்களை வெட்டக் கூடாது.

37, ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது.

38, வீட்டின் வடகிழக்கில் நீர்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது.

39, வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு மூலையில் கழிவறை மற்றும் செப்டிக் டேங்க் அமைக்க கூடாது.

40, வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும் கிழக்கேயும் உயரமாக அமைக்க
கூடாது.

41, வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின்மேல் பூந்தொட்டி வைக்கக்கூடாது.

42, வீட்டின் தென்மேற்கு மூலையில் மெயின்கேட், போர்டிகோ தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும் சோதனைகளுமே வரும்.

43, வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.

44, வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலி மனை நிலங்களை
வாங்கலாம்.

45, வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை
இனமாகக்கூட வாங்கி சேர்க்ககூடாது.

46, ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.

47, ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும் பிறகுதான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.

48, ஒரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்கவேண்டும்.

49, ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து அல்லது வீதிசூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும் கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.

50, தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியபாரத்திற்கு ஏற்றது.

Tuesday, 21 August 2018

கோவில்

#கோவில்கள்

இன்றைய மக்களுக்குக் கோயிலின் மதிப்புத் தெரியவில்லை.பள்ளி கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மொழியும் தர்க்கமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதனால் அறிவு வளர்கிறதே தவிர இதயம் மூடித்தான் கிடக்கிறது. உயிர்த்துடிப்புள்ள கோயிலின் மகிமை இன்றைய மனிதருக்குத் தெரியவில்லை.அதன் அர்த்தமும் புரியவில்லை. இதனால் நமது கோயில்கள் மெல்ல மெல்ல தம் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன.

இந்தியாவின் இரசவாதம் முழுவதும் கோயில்களில்தான் இருக்கின்றன.இந்தியா எல்லாவற்றையும் கோயில்களிருந்தே பெற்றது. ஒரு காலத்தில் மனிதனுடைய வாழ்வில் நிகழ்வன எல்லாமே கோயிலோடு தொடர்புகொண்டதாக அமைந்திருந்தது.

அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கோயிலுக்குத்தான் போவான். மனதில் கவலை ஏற்பட்டால் கோயிலுக்குச் செல்வான்.மகிழ்ச்சி ஏற்பட்டாலும் நன்றி தெரிவிக்க கோயிலுக்குத்தான் ஓடுவான்.

குடும்பத்தில் ஏதாவது நல்ல காரியம் என்றால் மலர்களும் பழங்களும் ஏந்தி அவன் கோயிலுக்குத்தான் செல்வான். வாழ்வில் சிக்கல் ஏற்பட்டாலும் கோயில்தான் புகலிடம். இந்தியனுக்கு கோயில்தான் எல்லாம். அவனது எல்லா ஆசா பாசங்களும் கோயிலைச்சுற்றியே செயல்பட்டன. அவன் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் தனது கோயிலை தங்கமும் வெள்ளியும் நகைகளும் கொண்டு அலங்கரித்தான்.

-- ஓஷோ --
நூல் : மறைந்திருக்கும் உண்மைகள்.

Sunday, 12 August 2018

நாகரிகம்

*அனைவரும் பின்பற்ற வேண்டிய*
*நாகரிகங்கள் இவை:*

*பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.* 

*நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள்.*

*(இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.*

*கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு  ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள். ஓயாமல் அதைப்பற்றி பேசி அவர்கள் மனதை புண்படுத்தி குளிர்காயாதீர்கள்.கடன் பட்டவர்கள் ஏற்கனவே கலங்கித்தான் போய் இருப்பார்கள்.*

*ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.*

*ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ  , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார்.* *பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள்.*
*அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்.*

*பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள்.*

*நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின்  personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.*

*சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others !*

*ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.*

*ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்*.

*நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்கு என்று இருக்கும் உரிமையை மீறி அந்த குடும்ப விசயங்களில் தலையிடாதீர்கள்.*

*முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.*

*நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான் இப்படி,என் ஸ்டேட்டஸ் எப்படி தெரியுமா,என் தகுதி இப்படி etc)*

*யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.*

*வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.*

*உங்களை விட வயதில் சிறியவர்களிடம்  உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.*

*வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.*

*புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.*

*உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள்.*
*allow them freedom !* 

*ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ்செய்து கொடுத்தால்  . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .*

*பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி  உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.*

*ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.*

*உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.*

*ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.*

*பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.*

*ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!.*

*Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.*

*மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!*

*ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.*

*என் வாழ்க்கை எனக்கு தான், என் விருப்பம்தான் எனக்கு, மற்றவர்களுக்காக வாழமுடியாது என அடிக்கடி பேசாதீர்கள் இது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அப்படி நீங்க வாழனும் என நினைச்சால் நீங்க மட்டும் தனியா இருக்கனும். மற்றவர்களுக்காக கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள் அது தான் உண்மையான இன்பம்.*

*படித்ததில் பிடித்தது.*