மனித உறவுகள் சீராக இருக்க..... A to Z !!!
A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
B - Behaviour
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதிர்கள்; நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவி
ல்லையே என்று சோர்வடையாதீர்கள்.
E - Ego
மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.
F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
G - Genuineness
எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விடயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம் அது கொண்டவனையே அழிக்கும்.
K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலு
ம் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
N - Neutral
எப்போதும் எந்த விடயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.
O - Over Expectation
அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
P - Patience
சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாததைப் பேசுவது தான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திரமால் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். பின்பு, அதற்கு பதில் கொடுங்கள்.
W - Wound
எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
X - Xero
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோ
மோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
Z - Zero
இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்.
Many Of Our Problemz Will Be Solved IF WE TALK TO EACH OTHER....
rather than TALKING ABOUT EACH OTHER.
Thursday, 25 May 2017
மனித உறவுகள் சீராக இருக்க
Saturday, 13 May 2017
பெண்கள் பாதுகாப்பாக எப்படி வெளியூருக்கு பயணம் செய்யலாம்.*
*பெண்கள் பாதுகாப்பாக எப்படி வெளியூருக்கு பயணம் செய்யலாம்.*
தற்போது தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ஆனால் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்கள். இதற்கு சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன.
இன்றைக்கு இருக்கும் நிலையில் காய்கறி வாங்க வெளியே போகும் பெண்களே அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில் 500, 600 கிலோமீட்டர் பயணம் செய்யும் பெண்கள் சில ஆண்களிடம், புதியவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
பெண்கள் எல்லா இடங்களுக்கும் எப்படி தனியாக பயணம் செய்வது என்பதற்கு சில டிப்ஸ்...
பெண்களை வெளியூர்களுக்கு சென்று தங்க நினைக்கும் போது குறைந்த விலை ஹோட்டல்கள் என்பதை விட பாதுகாப்பான ஹோட்டலா என்றுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
இதை மட்டும் உறுதிபடுத்தி கொண்டால் மற்ற விஷயங்கள் எல்லாம் ஆண்களை போல பெண்களும் எளிமையான முறையில் கையாள முடியும்.
பெண்கள் பயணத்தின் போது பேருந்து, ரயில், விமானம் என்று மக்கள் கூட்டம் உள்ள போக்குவரத்தையே பயன்படுத்துவது நல்லது.
உதாரணமாக நீங்கள் பயணம் செய்யும் ரயிலிலோ, பேருந்திலோ உங்களருகில் இருக்கும் பெண்களுடனோ, குடும்பத்துடனோ பேசி நட்பு வைத்துக்கொள்வது ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.
தேவை இல்லாமால் எந்த புதிய மனிதரிடமும் எதுவும் பேச வேண்டாம். அப்படியே பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் இடமும், நேரமும் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கவனம் தேவை.
அதோடு யாரிடம் எது கேட்பதாக இருந்தாலும் தயக்கமின்றி தைரியமாக கேளுங்கள். யாரும் உங்களை எளிதில் அணுக முடியாதபடி கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருங்கள் தப்பில்லை.
நீங்கள் பயணம் செய்யும்போது உங்களின் சகபயணிகளோடு நட்போடு இருப்பதில் தவறில்லை. ஆனால் யாரையும் முழுமையாக நம்பிவிடாமல், எல்லோர் மேலும் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்.
அதுமட்டுமல்லாமல் மிளகு தெளிப்பான் (பெப்பர் ஸ்ப்ரே), விசில், பிளாஸ்டிக் கத்தி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச்செல்வது நல்லது.
இவைதவிர எங்கு செல்கிறீர்களோ அந்த இடத்தின் வரைபடத்தை (மேப்) வைத்துக்கொள்வது இடம் தெரியாமல் திண்டாடுவது உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
Tuesday, 9 May 2017
பன்றிக்காய்ச்சல் flu ( H1N1 ) குணமாகியவரின் சிறப்பு பேட்டி !
Thursday, 4 May 2017
சாமி, மந்திரம், ஜோதிடம்
சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?
தெரிஞ்சிக்கிறது ரொம்ப சிம்பிள்! இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள் உண்மைதானா என்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம் நீக்கமற நிறைத்திருக்கும்.
இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழியுள்ளதாமே.. எப்படி தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.
மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..
இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..
விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க.. பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன்.
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.
சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.
இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.