Thursday, 30 March 2017

உனது மனம்

*ஓஷோ ஜோக்ஸ்*

வாழ்க்கை ஒரு சோகக்கதையல்ல. அது நகைச்சுவை நாடகம். வாழ்வது என்பதன் பொருள் நகைச்சுவை உணர்வோடு வாழ்வதுதான். - ஓஷோ

ஐமீ கோல்ட்பர்க் தனது நண்பனிடம் –

எனது மனைவி எப்பொழுதும் பணம், பணம், பணம் என்று நச்சரித்துக் கொண்டேயிருக்கிறாள் – என்று சடைந்து கொண்டான்.

சென்ற வாரம் இருநூறு டாலர் வேண்டுமென்றாள்.

நேற்று முன்தினம் அவள் நூற்றைம்பது டாலர் கேட்டாள்.

இன்றைக்குக் காலையில் மறுபடியும் நூறு டாலர் வேண்டுமென்கிறாள்.

என்றான்.

அதற்கு நண்பன் – இது ரொம்பவும்

பித்துப்பிடித்த தனமாக அல்லவா இருக்கிறது.

அத்தனை பணத்தையும் அவள் அப்படி என்னதான் செய்கிறாள் – என்று கேட்டான்.

ஐமீ – எனக்கு என்ன தெரியும், நான் இதுவரை அவளுக்கு பணமே கொடுத்ததில்லையே – என்றான்.

ஓஷோ கூறுகிறார்

உனது மனம் தொடந்து கேட்டுக்கொண்டேதான் இருக்கும். இதைச்செய், இப்படிச்செய், இது வேண்டும்……………..

அதன் பேச்சைக் கேட்காதே. தனது மனத்தின் நச்சரிப்பை கேட்பதை நிறுத்தும் கணத்திலேயே,

*ஒருவன் பிரபஞ்சத்தின் குரலை உணர்ந்து கொள்கிறான்*

இசை

🌺🍃🌺 இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை  🌺🍃🌺

🎼📀🎹 இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம்.

பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்  என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.

நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும்,

அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும்,

இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் –
பூபாளம்

* பாடல்  :      சலங்கயிட்டால் ஒரு மாது
   படம்     :      மைதிலி என்னைக் காதலி

* பாடல்  :      செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
    படம்      :      முள்ளும் மலரும்

அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் –
மலையமாருதம், சக்கரவாகம்

* பாடல்  :     கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்
    படம்    :     தென்றலே என்னைத் தொடு

* பாடல்  :     நீ பாதி நான் பாதி கண்ணே – சக்கரவாகம்
   படம்    :     கேளடி கண்மணி

* பாடல்  :     பூப்பூக்கும் மாசம் தை மாசம் – மலையமாருதம்
    படம்    :     வருசம் 16

* பாடல்  :     உள்ளத்தில் நல்ல உள்ளம – சக்கரவாகம்
    படம்    :     கர்ணன்

* பாடல்  :     ஓராறு முகமும் ஈராறு கரமும்
   படம்    :     டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்

* பாடல்  :     நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
    படம்    :     தியாகம்

சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்-
அமிர்தவர்ஷினி

*பாடல்:  தூங்காத விழிகள் ரெண்டு.
படம் :   அக்னி நட்சத்திரம்

கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய –
அரிகாம் போதி

*பாடல்:   கண்ணுக்கு மை அழகு
  படம் :    புதிய முகம்

*பாடல்:   உன்னை ஒன்று கேட்பேன்
  படம்  :   புதிய பறவை

*பாடல்:   ஒரே பாடல் உன்னை அழைக்கும்
  படம்  :   எங்கிருந்தோ வந்தாள்.

*பாடல்:   பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
  படம்  :   வருசம் பதினாறு.

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி

*பாடல்:     நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி
படம்  :     கோபுர வாசலிலே

*பாடல்:     வசந்த காலங்கள் இசைந்து – ஸ்ரீ ரஞ்சனி
படம் :     ரயில் பயணங்களில்

*பாடல்:    மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி
  படம்  :    டூயட்

*பாடல்:    கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் – ஆனந்த பைரவி
  படம்  :    டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.

*பாடல்:    வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி – நீலாம்பரி
  படம்  :    சிப்பிக்குள் முத்து.

*பாடல்:  பூவே இளைய பூவே – நீலாம்பரி
  படம்  :  கோழி கூவுது

*பாடல்:  சித்திரம் பேசுதடி என் சிந்தை – கமாஸ்
  படம்  :  சபாஷ் மீனா

மனம் சார்ந்த பிரச்சனை தீர –
அம்சத்வனி, பீம்பிளாஸ்

*பாடல் :  காலம் மாறலாம் நம் காதல்  – அம்சத்வனி
  படம்  :   வாழ்க்கை

*பாடல்:   சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் – பீம்பிளாஸ்
  படம்  :   நல்லதொரு குடும்பம்

*பாடல்:   தொகை இளமயில் ஆடி வருகுது – அம்சத்வனி
  படம்  :   பயணங்கள் முடிவதில்லை

*பாடல்:   வா…வா…வா… கண்ணா வா – அம்சத்வனி
   படம்  :   வேலைக்காரன்

*பாடல்:    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை – பீம்பிளாஸ்
  படம்  :    திருவிளையாடல்

*பாடல்:    பன்னிரு விழிகளிலே பணிவுடன்
  படம்  :    சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்

*பாடல்:   அழகென்ற சொல்லுக்கு முருகா
  படம்  :   டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்

*பாடல்:   வாராய் நீ வாராய்
  படம்  :  மந்திரி குமாரி

இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் –
சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் –
பகாடி,ஜகன் மோகினி

பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-
அடான

*பாடல்:  யார் தருவார் இந்த அரியாசனம் – அடான
படம்  :  சரஸ்வதி சபதம்

*பாடல்:  வருகிறார் உனைத் தேடி – அடான
படம் :  அம்பிகாபதி

மனதை வசீகரிக்க, மயக்க –
ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

*பாடல் :  தானா வந்த சந்தனமே – கரகரப்பிரியா
படம்   : ஊருவிட்டு ஊரு வந்து

*பாடல் : கம்பன் எங்கே போனான் – கரகரப்பிரியா
படம்  :  ஜாதிமல்லி

*பாடல்:  மெட்டுப்போடு மெட்டுப்போடு –ஆனந்த பைரவி
படம்  :  டூயட்

*பாடல்:  சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா – கரகரப்பிரியா
படம்  :  அழகன்

*பாடல்:  மாதவிப் பொன் மயிலாள் – கரகரப்பிரியா
படம் :  இருமலர்கள்

சோகத்தை சுகமாக்க –
முகாரி , நாதநாமக்கிரியா

*பாடல்:  கனவு கண்டேன் நான் – முகாரி
படம்  :  பூம்புகார்

*பாடல்:  சொல்லடி அபிராமி
படம்  :  ஆதிபராசக்தி
 
பாடல்:  எந்தன் பொன் வண்ணமே அன்பு
படம்  :  நான் வாழவைப்பேன்

பாம்புகளை அடக்குவதற்கு –
அசாவேரி ராகம்

வாயுத்தொல்லை தீர –
ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர –
நாஜீவதாரா

எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?
திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு வரையறை கூறுகிறார்.

நேரம்- ராகம்
5-6 மணி (காலை நேரம்)
பூபாளம்

6-7  மணிக்கு
பிலஹரி

7-8 மணிக்கு
தன்யாசி

8-10 மணிக்கு
ஆரபி, சாவேரி

10-11 மணிக்கு
மத்யமாவதி

11-12 மணிக்கு
மனிரங்கு

12-1  மணி (மதிய நேரம்)
ஸ்ரீராகம்

1-2 மணிக்கு
மாண்டு

2-3 மணிக்கு
பைரவி, கரகரப்பிரியா

3-4 மணிக்கு
கல்யாணி, யமுனா கல்யாணி

4-5 மணிக்கு (மாலை நேரம்)
காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம் 🎼📀🎹

🌺 இறைவனின் நினைவே ஆனந்தம் 🌺

🥀 பகிர்வு 🥀

Wednesday, 29 March 2017

இல்லற வாழ்க்கை இனித்திட-

இல்லற வாழ்க்கை இனித்திட- குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்.

1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

8. செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

9. இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.

- சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்- அனுசரித்துப் போகுதல்- மற்றவர்களை மதித்து நடத்தல்.

10வது அறிவுரை.

விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், ‘டைவர்ஸ்’ கேட்டு வரும் ஜோடிகள் ‘டைவர்ட்’ ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்

Sunday, 26 March 2017

சத்துள்ள பழங்கள்

புரோட்டீன் சத்துள்ள பழங்கள்
மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம் (நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.
கால்சியம் சத்துள்ள பழங்கள்
எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.
இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள்
ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன .
பொட்டாசியம் சத்துள்ள பழங்கள்
ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.
பாஸ்பரஸ் சத்துள்ள பழங்கள்
மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன. மூளைக்கு அதிகளவில் வேலைக்கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும்.
பாஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும். தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும் மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.

Tuesday, 21 March 2017

மண்பானை

*மண்பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.*❗

💧மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

💧எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும். எனவே தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும்.
மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.

💧குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு பின்பே குடிக்க வேண்டும்.
ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையானது. அந்த தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம்.

💧பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. மேலும் வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்.
உடலுக்கு மிகவும் நல்லது.

💧மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

Friday, 17 March 2017

குங்குமம் பொட்டு

உதிர  வேங்கை மரத்தின் துண்டுகள் நீர் விட்டு சுன்ட  காய்ச்சி எடுக்க உயிர் உள்ள குங்கும பொட்டு கிடைக்கும்... இது நெற்றியில் இட்டு செல்ல பொட்டுக் உண்டான அனைத்து செயலையும் செய்யும்... இந்த மரம் சதுரகிரி, கொல்லிமலை, செஞ்சி மலை களில் எளிதாக கிடைக்கும்

ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு

”ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு”

யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். தேவர்களில் உயாந்தவர் ஹரி. யானைகளில் உயர்ந்தது ஐராவதம். குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி. பசுக்களில் உயர்ந்தது காமதேனு. மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம். பெண்களில் உயர்ந்தவர் சீதை. அது போல யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு. விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. முருகன் இருக்கிமிடம் ஸ்கந்தலோகம். ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம். நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம்; இந்திரன் இருக்குமிடம் தேவலோகம். சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம். அது போல அன்னை ஜகன்மாதா அம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீ புரம் எனக்கூறப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு பீடம் என்னுமிடமாகும். அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும.

அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ சக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு. ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர். ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது.

முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்ய மோகனசசக்கரம் எனறு பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான 8 தேவியர் காவல்புரிகின்றனர்.

தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட பரிபூரக சக்ரம் என்னும் கோட்டை. இதை குப்தயோகினி முதலான 16 தேவியர் காவல் புரிகின்றனர்

3 தாமரை இதழ் போன்ற அமைப்பபைக் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கோட்டை இதற்கு ஸர்வரரேக ஸம்சேஷோபனா சக்ரம் என்ற பெயர். இதனை குப்ததரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.

14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஸொபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரக்ஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகின்றனர்.

முக்கோணங்களைக் கொண்ட சர்வரோகஹர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர்.

ஒரே முக்கோணம் சர்வஸித்தப் பிரதாயக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர்.

பிந்து ஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீ லலிதா மகாத்ரிபு சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். லலிதா மஹாத்ரிபுர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள்.

இந்த அமைப்பைக்கொண்ட ஸ்ரீ சக்ரம் உலகம் உய்யும் பொருட்டு, ஆதிசங்கரரால் பாரத தேசத்தில் காஞ்சி. திருவானைக்கா, மற்றம் திருஓற்றியூர்; போன்ற தலங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மக்களின் துயரைப் போக்கி அன்னையின் அருளை அளிக்கும். ஒரு சிறந்த மார்க்கம் இந்த மஹாமேரு வழிபாடாகும். அன்னையிடம் நாம் செய்யும் அபசாரத்தினால் உண்டாகும் கோபம் தணிய தேவிக்கு இந்த சக்ரஸ்தாபனம் செய்து வழிபட்டால் எல்லா நன்மையும் பெறுவது திண்ணம்.

பிராணாயாமத்துக்கான பயிற்சிகள்

பிராணாயாமத்துக்கான  பயிற்சிகள்

நாடி சுத்தீ

நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு, சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது.

பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும். 

செய்முறைகள்:

1 முதலில் கால்களைக் குறுக்காகப் போட்டுப் பத்மாசனத்தில் அமரவும். கண்களை மூடி, புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும். வலது கையின் பெருவிரலையும், கடை மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்டு மூக்கைப் பிடியுங்கள். வலது பெருவிரலால் மூக்கின் வலதுபக்கத் துளையை அடைத்துக்கொள்ளவும்.  இடது மூக்குத் துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே சீராக ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள, சீராகத் தொடர்ந்து வெளியே விடுங்கள். மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச் செய்யவும். இது ஒரு சுற்று.

பிறகு, வலது மூக்கைத் திறந்து மற்ற மூன்று விரல்களால் இடது மூக்கை அடையுங்கள். பெருவிரலை எடுத்து மூக்கின் வலது பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்கு மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள். இதையும் 12 முறை செய்தால் ஒரு சுற்று. மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும் 'ஓம்’ அல்லது ஏதாவது மந்திரத்தை ஜபிக்கலாம்.

முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும் சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில் இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில் மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு சுற்றுச் செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.

இந்தப் பயிற்சியில் உள்ளே மூச்சை நிறுத்தும் கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப அதிகச் சுற்றுகளைப் பழகலாம்.

பலன்கள்: இது மூச்சை ஒழுங்குப்படுத்தும். இதனால் மூச்சளவு ஒரே சீராகி, நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். உடலில் பலமும் கூடும். 

2 இரு மூக்குத் துளைகளின் மூலமும் முடிந்த அளவுக்கு மூச்சை ஓசையின்றி ஒரே சீராக மெள்ள இழுத்து, நுரையீரல்களில் நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல இரண்டு மூக்குத் துளைகள் மூலமும் மூச்சை வெளியே விடவும். இதை 12 முறைகள் செய்ய ஒரு சுற்றாகும். நேரம், திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள் செய்யலாம். இதிலும் கும்பகம் இல்லை.

3 உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ அதுபோல் அமருங்கள். மூக்கின் வலதுபக்கத் துளையை வலப் பெருவிரலால் மூடி, மூக்கின் இடதுபக்கத் துளையில் சுவாசத்தை இழுங்கள். இடது துளையை மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள இழுத்த காற்றை வெளியே விடுங்கள். வலமூக்கு வழியே முடிந்த அளவு காற்றை உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன் மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12 முறை இதைச் செய்யலாம்.  இது, ஒரு சுற்றுக் கணக்கு. இதில் மூக்கு மாற்றிச் செய்வதே சிறப்பு.

4 நாற்காலி, சோபாவில் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள். இரு மூக்குத் துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள். முடிந்தவரை உள்ளே நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி வெளியே விடுங்கள். இது எளிய கும்பகமாகும். உள்ளிழுத்தல், நிறுத்தல், வெளியேவிடலில் குறிப்பிட்ட விகிதம் எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு இழுப்பது, முழுவதும் வெளிவிடுவதும், சுகமாக இருக்கும் வரை மட்டுமே அடக்குதலும் உண்டு.

பலன்கள்: ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு, ஒருங்கிணைப்பு உண்டாகும்.  மனம் ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும். படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி தங்கும். மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப் பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத் தூண்டும் பயிற்சி இது.