Saturday, 24 December 2016

மூச்சு

சர கலை ரகசியங்கள் பாகம்_5
**************************************

மூச்சுக் கலை - "சரம்
பார்த்தல்"
****************************************
சர கலை சாஸ்திரம் பாகம்_6
**************************************

சித்தர்களின் சாகாக்கலை (மரணமில்லாப் பெருவாழ்வு)

இந்த சித்தர்களின் சாகாக்கலைக்கு முக்கியமான ஒன்றான சர நூல் சாஸ்திரத்தை இங்கே சற்றே விளக்கப் போகிறேன்.

இந்த சித்தர் சரநூல் சாஸ்திரம் என்பது  சிவன் பார்வதிக்குச் சொல்லி ,  பார்வதி நந்திதேவருக்குச் சொல்லி, நந்திதேவர் அகஸ்தியருக்குச் சொல்லி, அகஸ்தியர்  பதிணென் சித்தர்களுக்கு சொல்லி, சித்தர் பரம்பரை வரும் அனைவருக்கும்  இரகசியமாக  உபதேசிக்கப்பட்டு வருவது.

சரம் என்றால் மூச்சுள்ளது.  அசரம்  என்றால்  மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக  சராசரம்  என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை  அடிப்படையாக  வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின்   வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும்,  அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600மூச்சும்    ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள்  216 என்பது இந்த 21,600மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120ஆண்டுகளாகும்.

          ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18மூச்சும், ஒடும்போது    25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும்,  கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1நிமிடத்தில் ஓடுகின்றன.  இந்த மூச்சினுடைய  அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ  அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.
          நாம் செய்யும் காரியங்களில்  வெற்றி பெறவும், காரியத்தடை நேராமல் தடுத்துக் கொள்ளவும்,  பலன்களைச் சொல்வதற்கும், கேள்வி கேட்கும் நபருக்கு காரியசித்தியாக்குதலையும், இன்னும் பல காரியங்களுக்கும்   இந்த சரநூல் சாஸ்திரம் பயன்படுகிறது.  சரம் பார்க்கத் தெரிந்தவனே  “பார்ப்பான்” என்று அழைக்கப்படுகிறான். சரம் பார்க்கத் தெரிந்தவனிடம்  எந்த மோதலையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே “சரம் பார்ப்பவனிடம்  பரம் போகாதே”  என்று வழக்குச் சொல்லில் கூறுவர். சரமே இறைவன்,   எனவே அகத்தியர்  தனது சரநுநூல்   சாஸ்திரத்தில்,  சரத்தை இறைவனுக்கு சமமாகவும் பஞ்சபூதங்களின்   ஒடுக்க ஸ்தானமாகவும்  கூறுகிறார். இந்த சரநூல் சாஸ்திரத்தின் விரிவைப்  பார்ப்போம்.

சூரிய கலை, சந்திர கலை  அவற்றின் வேகம் மற்றும் எண்ணிக்கையைப் பற்றி பார்த்தோம். ஒரு நாளில்  ஓடக்கூடிய  மூச்சுக்களின்  எண்ணிக்கை21,600 என்று பார்த்தோம் சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும்.   21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன.  அவை ஒரு நாளில்  ஓடக்கூடிய  மூச்சின் எண்ணிக்கையை குறிக்கும். 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.

இதையே விதியை  மதியால் வெல்லலாம் என்பார்கள்.  இங்கு மதி என்று கூறப்படுவது  புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய  சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள்  விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

நந்தனார் கீர்த்தனையில் எட்டும்    இரண்டறியாத மூடன் என்கிறார்.  8என்பது    'அ' காரமாக   தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக  தமிழ்  எழுத்துக்களில்  குறிக்கப்படுகிறது.  இதையே அகார   உகாரம் என்று கூறுகின்றார்கள்.   8*2=16  அங்குலம் ஓடும் சந்திரகலையை   குறிக்கிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'

அகார(8), உகாரம்(2),யகாரம்(10).

தமிழ் எழுத்துக்களில் எண்ணாகவும் எழுத்தாகவும் திகழ்கின்றனவோ அவையே அகாரம் மதி,உகாரம் ரவி,சுடர் மகாரம்,இந்த மூன்றும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம்.

ரவி, மதி,சுடர்,மூன்றிலும் இருப்பது சிகாரம் என்றழைக்கப்படும் நெருப்பு.

'நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும்'

    “குழவியும்  ஆணாம் வலத்தது  ஆகில்
     குழவியும்  பெண்ணாம் இடத்தது ஆகில்
    குழவியும் இரண்டாம்  அபானன் எதிர்க்கில்
    குழவி   அலியாகும்  கொண்ட கால்  ஒக்கிலே”

                                                                திருமந்திரம் 482
          உடலுறவில்  இணைகின்ற  ஆணுக்கு  வலது நாசியில் சுவாசம்  நடந்தால்  ஆண்குழந்தை  தோன்றும். சுவாசம் இடது நாசியில்  நடந்தால் பெண் குழந்தை தோன்றும். சுவாசம் சுழுமுனையில் நடந்தால் தோன்றும் குழந்தை  அலியாகும். வலது அல்லது இடது  நாசியில்   சுவாசம் நடந்து அப்போது  அபானன்   என்ற வாயு  எதிர்க்குமானால் இரட்டைக் குழந்தை தோன்றும்.
           பிறவியிலேயே  கூன், குருடு,  ஊமை போன்ற பல  குறைகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, காரணங்களை   சித்தர்கள்   சரநூலில்  பல இடங்களில்  கூறுகின்றனர். இதையே திருமந்திரத்தில

“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாத உதரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதரம்   இரண்டொக்கில் கண்ணில்லை.
மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே'
                                                               திருமந்திரம் 481

உடலுறவின்   போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு   மூளை வேகமாக செயல்படாது  மந்தமாக இருக்கும். பெண்ணின் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருந்தால்  பிறக்கும் குழந்தை ஊமையாகும். மலம்,  சிறுநீர் இரண்டும் அதிகமாக  இருந்தால் பிறக்கும்  குழந்தைக்கு  கண் குருடாகும்  என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.

“பாய்கின்ற   வாயு  குறையிற்  குறளாகும்
பாய்கின்ற   வாயு இளைக்கின் முடமாகும்.
பாய்கின்ற   வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற   வாயு மாத்ர்க்கில்லை பார்க்கிலே”
                                                               திருமந்திரம் 480
ஆணின் உடலிலிருந்து உயிரணுக்கள்  வெளியேறும் நேரம் இருவரின் சுவாசமும் சரியான  அளவில் இருந்தால் எந்தக் குறைபாடும் இராது. ஆனால்  ஆணின் சுவாசம் தேவையான  அளவை விட குறைந்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும்.  சுவாசம் திடமின்றி  வெளிப்படுமானால்  பிறக்கும் குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும்  வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு  கூன் விழும்.

'பாய்ந்த  பின்  அஞ்சோடிய ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடி  பாரினில்  எண்பதாம்'
                                                                       திருமந்திரம் 479

          உயிரணுக்கள் வெளியேறும் நேரம் ஆணின் சுவாசம் ஐந்து மாத்திரை நேரம்  பாய்ந்தால் பிறக்கும் குழந்தை  நூறு வயது வரை வாழும். நான்கு மாத்திரை நேரம்    ஓடினால் எண்பது  வயதுவரை உயிர்வாழும். சுவாசம் வெளிப்படும் மாத்திரை குறைய குறைய ஆயுளும் குறையும்

'கொண்ட வாயு இருவருக்கும்   ஒத்தொழில்              
கொண்ட குழவியும்  கோமளமாயிரும்
கொண்ட  நல்வாயு இருவருக்கும்   குழறிடில்
கொண்டதும்  இல்லை  கோல்வினையாட்கே.'    
                                                                      திருமந்திரம் 483

உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கும் சுவாசம்  சீராக ஒரே அளவாக ஓடினால் தோன்றும் குழந்தை மிக அழகாக பிறக்கும் . சுவாசம் தாறுமாறா

சந்திர கலை  சூரியகலை சூரி

யன் உதிக்கும் போது ஓட வேண்டிய திதிகள்  குறிப்பிட்டிருந்தோம்.சூரியன் உதிக்கும்போது சூரியகலையில்  அதாவது  வலது நாசியில் ஓட வேண்டிய திதிகளில்  காலை 6 மணிக்கு ஓட ஆரம்பித்து  ஒரு மணிநேரம் கழித்து சந்திர கலை ஓட ஆரம்பிக்கும். மீண்டும் ஒரு  மணிநேரம் கழித்து சூரிய கலை ஓட ஆரம்பிக்கும். இதே போல்சூரியன் உதிக்கும்  போது சந்திர கலையில்   ஓட வேண்டிய  திதிகளில் சூரிய உதயத்தில்  சந்திர கலையில் ஒரு மணிநேரம்  மூச்சு  ஓடி, பின் சூரிய கலையில் ஒரு மணி நேரம் மூச்சு ஓடி இப்படியே  மாறி  மாறி   மூச்சு   ஓடிக்கொண்டிருக்கும்.

“நாத விந்து கலாதி நமோ நம
          வேத மந்திர சொரூபா நமோ நம”
                                   -அருணகிரிநாதர் திருப்புகழ்-

நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள  ஜீவசக்தி)    விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தைத் தெரிவித்த அருணகிரிநாதர் பின்னரே  வேத மந்திர  சொரூபனான  இறைவனுக்கே  வணக்கம் தெரிவிக்கிறார்.இதையேதிருப்புகழில்

  “அருகுநுனி பனியனைய  சிறிய துளி
பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்”

          என்று கூறுகிறார். ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள்  ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழ வைக்கக்கூடிய உயிர்ச் சக்தியைப்  பெற்றிருக்கின்றன.   எனவே “விந்து விட்டவன் நொந்து  கெட்டான்” என்று சித்தர்கள் கூறுகின்றனர்.  நாம் அணியும்   திருநீறு வெள்ளை நிறமாக  இருந்து இந்த விந்தையே குறிக்கிறது.  குங்குமம்  சிவந்த நிறமான  பெண்களின் நாதத்தைக் குறிக்கிறது.

இதையே உலக இயக்கம் என்பதால் குங்குமமும். திருநீறும்  நெற்றியில்அணிகிறோம். எல்லோருமே நாத விந்து சொரூபர்களே.

ஆண், பெண்களின் சேர்க்கையே   லிங்க சொரூபம். இடப் பாகம் சக்தியென்பதால்  லிங்கத்தின்   இடது பாகம் நீர்த்தாரை வைக்கப்பட்டுள்ளது.  சிவலிங்கத்தின் அந்த இடப்பாகத்தையே  நோக்குவது போல இடதுபுறம் நந்தி சாய்த்துப் பார்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.சக்தியான சந்திரகலையை முதலில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே,    இது கோயிலில் அமைப்பாக  காட்டப்பட்டுள்ளது.

(சீனத்து அக்கு பஞ்சர் முறை நமது போக முனிச் சித்தரால் கண்டுபிடிக்கப்பட்டு சீனத்தில் கையாளப்பட்டு வருகிறது அதில்'யின்'(yin)என்றால் இடப்பக்கம் என்றும் பெண் தன்மை என்றும் ,யாங்(yang)என்றால் வலப்பக்கம் என்றும் ஆண் தன்மை  என்றும் கூறப்பட்டுள்ளது.) 

“மூலமான  மூச்சதில் மூச்சறிந்து  விட்டபின்
நாலு  நாலு முன்னிலொரு  நாட்டமாகி  நாட்டில்
பாலனாகி   நீடலாம் பரப்பிரம்மம்  ஆகலாம்.
ஆலமுண்ட கண்டராணை  அம்மையாணை உண்மையே”
“இருக்கலாம் இருக்கலாம்  அவனியிலே இருக்கலாம்
அரிக்குமால் பிரம்மனும் அகண்ட  மேழ் அகற்றலாம்
கருக்கொளாத   குழியிலே   காலிடாத கண்ணிலே
நெருப்பறை  திறந்த பின்பு நீயும்  நானும் ”
                              “சிவ வாக்கியர்”

மேற்கண்ட  பாடல்களில் மூலமான  மூச்சை  சரியான படி  அறிந்து அளவிட்டு   4 அங்குலமட்டில் ஓட  விட்டால் பாலன் போன்ற   தோற்றமும்,பரப்பிரம்மான   இறைவனுக்குச்    சமமாகவும்  ஆகலாம்  என்று சிவவாக்கியர் இறைவன்,  இறைவி   மீது  ஆணையிட்டுக் கூறுகிறார்.

          இந்த  அவனியான பூமி இருக்கும்  வரை, அரி, மால் பிரம்மன்.,அண்டங்கள்  இவற்றைக் கூட படைக்கலாம், அழிக்கலாம் காலிடாத கண்ணிலே  என்ற மூச்சுவிடாத (கால் என்றால் காற்று)   நிலை அடைந்தால் நெற்றிக்கண்ணில் நெருப்பறை திறக்கும். “நெருப்பறை திறக்குமானால் ,  நீ நான்  அனைவரும் ஈசனே.                    
     உண்ணும் போது உயிரெழுத்தைஉயரேவாங்கு
     உறங்குகின்ற   போதெல்லா மதுவேயாகும்.
     பெண்ணின்   பாலிந்திரியம்  விடும்போ தெல்லாம்
     பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு
     தின்னுங்  காயிலை மருந்தும் அதுவேயாகும்.
     தினந்தோறும் அப்படியே  செலுத்த வல்லார்
     மண்ணு}ழி  காலமட்டும் வாழ்வார் பாரு.
     மரலிகையில்  அகப்படவு மாட்டார்  தாமே.

அகத்தியர்தம்  ஞானப்பாடலில் இவ்வாறு கூறுகிறார்.
எனக்கு சொந்த அனுபவத்தில் சில மருத்துவ   கலைகளின் அறிவு உண்டு.   ஆனால் சித்த மருத்துவக்   கலையில்  எனது முன்னோர்கள் பரம்பரையாகச் செய்து வந்திருக்கின்றனர்.   இவற்றில் முக்கியமான விஷயம்,  என்னை பிரமிக்க வைத்த விஷயம்  ஒன்று உண்டு.  எல்லா வைத்திய  முறைகளும் உடலில் ஏற்படுகின்றன  பிணிகளைப்  போக்கிக் கொள்ளும்   முறைகளைப் பற்றிமட்டுமே கூறுகின்றன. அதிலும்  சில நோய்கள்   மனித குலத்திற்கும்,   விஞ்ஞானத்திற்கும்  சவாலாகவேஅமைந்திருக்கின்றன.

ஆனால்சித்தர்களோஉடலில் ஏற்படுகின்ற வியாதிகளின் எண்ணிக்கை 4448  வியாதிகள்   என்று குறிப்பிட்டுச் சொல்வதுடன்  அவற்றைப் போக்கும் முறைகளையும் தெளிவுபட விளக்கியுள்ளனர்.

          இதற்கு மேலும் ஒருபடி சென்று மரணம் என்பதும் ஒரு பிணி  என்று கூறுவதுடன் மரணம்  மாற்றம் முறைகளையும,  மரணமிலாப் பெருவாழ்வு   என்பதனையும் விளக்கிச் சொன்னதுடன்  கடைபிடித்து வெற்றியும்  கண்டுள்ளனர்.

குரு குல கல்வி   முறையில் இவையெல்லாம் ஒரு காலத்தில் கற்பிக்கப்பட்டு வந்தன.இந்த மேம்பாடான் கல்விமுறை அழிந்து  தற்கால சந்ததியினருக்கு  கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே. தற்கால சந்ததியினர் மெக்காலே கல்வி முறை ஆங்கிலேயர் காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டது.

அந்தக் கல்வி முறை மூலம் உருவாகும் இவர்கள்,சுயம் என்பது போய் தன் காலில் நிற்கத்தெரியாதவர்களாகவும்,அரசாங்க வேலையைஎதிர்பார்த்து ,அதற்கு கையூட்டு கொடுப்பவர்களாகவும். கொடுத்த கையூட்டை, மறுபடி மக்களிடம் அதே கையூட்டின் மூலம் வசூலிக்கும் அக்கிரமக்காரர்களகவும் மாறி கடைசியில் நிம்மதி தொலைத்து,முறையற்ற வழியில் பணம் தேடும்பிசாசுகளாய்வாழ்ந்து,முடிவில் இறந்தே போகுபவர்களாவே உள்ளனர்.

இந்த சரநூல் சாஸ்திரத்தைக் கொண்டு  நோய்களை போக்கிக் கொள்ளவும்,  நமக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொள்ளவும் சித்தர்களின் அருளாசியால்  மச்சமுனிவரின் எட்டாவது பேரனாகிய  என் மூலம்  கற்றுக் கொள்ள இங்கு இறைவன் கருணை புரிந்து இருக்கின்றார்.

“machamuni.blogspot.com”

சித்தர் சரநூல் கற்போம் சராசரம் வெல்வோம் ;! ”

சர கலை ரகசியங்கள் தொடரும்.....

_சித்தர்களின் குரல் shiva shangar
ஒரு சமையல் குறிப்பினை
வாசிப்பதற்கும், அதனை
ருசியோடு
சமைத்தெடுப்பதற்குமான
இடைவெளியில் அனுபவம்
என்கிற ஒன்று தேவைப்
படுகிறது. அந்த வகையில்
இங்கே பகிரப் படும் தகவல்
பகிர்வுகள் யாவும் ஒரு
சமையல் குறிப்பின்
தரத்திலானவையே,
அதனை செயல்படுத்தி
பலனடைய
விரும்புகிறவர்கள்
முறையான
வழிகாட்டுதலோடு
மேற்கொள்ளுமாறு
வேண்டுகிறேன்.

முந்தைய குண்டலினி
பதிவில் "இடகலை",
"பிங்கலை",
"சுழுமுனை" என
மூன்று முக்கியமான
நாடிகளை பார்த்தோம்.
இவை மூன்றும் சுவாச
ஓட்டத்தின் பெயர்களே!
மூக்கின் இடது
நாசிதுவாரத்தின் வழியே
நடைபெறும் சுவாசம்
இடகலை எனப்படுகிறது.

இதற்கு "சந்திரகலை"
என்றொரு பெயரும்
உண்டு. மூக்கின் வலது
நாசியில் நடைபெறும்
சுவாசம் பிங்கலை
எனப்படுகிறது. இதற்கு
சூரிய கலை என்றொரு
பெயரும் உண்டு.

இரண்டு நாடிகளிலும்
ஒருசேர நடக்கும்
சுவாசத்திற்கு
சுழுமுனை என்று பெயர்.
இதையே சர ஓட்டம் என்பர்.
இரண்டு ஆட்காட்டி
விரல்களையும் மூக்கின்
நடுத் தண்டில் பக்கத்திற்கு
ஒன்றாக வைத்து இயல்பாய்
மூச்சை விட எந்த
நாசியில் மூச்சு
ஓடுகிறது என்பதை
எளிதாய் கண்டறியலாம்.

இந்த சுவாச நடை தொடர்
இடைவெளிகளில் மாறும்
தன்மை உடையது என
சித்தர் பெருமக்கள்
கூறுகின்றனர். அதாவது
ஞாயிறு, செவ்வாய்
மற்றும் சனிக் கிழமைகளில்
சூரியகலை அல்லது
பிங்கலை அல்லது வலது
நாசியில் சுவாசம்
நடைபெற வேண்டுமாம்.

அதைப் போலவே திங்கள்,
புதன், வெள்ளி
கிழமைகளில் சந்திரகலை
அல்லது இடகலை அல்லது
இடது நாசியில் சுவாசம்
நடை வேண்டுமாம்.

வளர் பிறையில் வரும்
வியாழக் கிழமைகளில்
இடகலையும், தேய்
பிறையில் வரும் வியாழக்
கிழமைகளில் பிங்கலை
சுவாசமும் நடக்க
வேண்டும் என்கின்றனர்.

இதன்படி சுவாசம்
நடைபெற்று வந்தால் உடல்
ஆரோக்கியமாய்
இருக்குமாம். இதில்
ஏதேனும் மாறுதல் வரும்
போது உடல்நலம்
கெடுகிறது என்கின்றனர்
சித்தர் பெருமக்கள்.

திங்கள், புதன், வெள்ளிக்
கிழமையில் ஓடவேண்டிய
இடகலை சுவாசத்திற்கு
பதிலாக பிங் கலை
சுவாசம் ஓடினால்
முறையே ஜலதோஷம்,
தலைவலி, கண், காது
நோய்கள் உண்டாகுமாம்.

ஞாயிறு, செவ்வாய்
மற்றும் சனிக் கிழமைகளில்
ஓட வேண்டிய பிங்கலை
சுவாசத்திற்கு பதில்
இடகலை சுவாசம் ஓடினால்
முறையே இருமல்,
காய்ச்சல் மற்றும் உடல்
சோர்வு, வயிற்றுப்
போக்கு உண்டாகுமாம்.

இதன் அடிப்படையில்தான்
வைத்தியர்கள் மருந்தினை
தீர்மானிக்கும் முறை கூட
இருந்தது. மருத்துவம்
என்றில்லாமல் வாழ்வின்
பிற செயல்களும் இந்த சர
ஓட்டத்தினை வைத்தே
தீர்மானிக்கப் பட்டது.

இதனையே சரம் பார்த்தல் என
கூறுவர். சரம் பார்த்தல்
என்பது முற்காலத்தில் ஒரு
வாழ்வியல் கூறாகவே
இருந்திருக்கிறது.

காலவோட்டத்தில் நாம்
மறந்தே விட்டோம் என்பது
வருத்தமான ஒன்று.

நமது வள்ளலாரும் இந்த
மூச்சுப்பயிற்சி பற்றி சில
இடங்களில் தமது
திருவருட்பாவில்
கூறியுள்ளார். எனவே
திருஅருட்பா,
திருமந்திரம் மற்றும் சித்தர்
கருத்துகள் போன்றவை
கூறும் சர பயிற்சியினை
பற்றிக் காண்போம்.

அதற்கு முன்னர்
பொதுவாக
மூச்சுக்காறு பற்றின
உண்மையினை காணலாம்.
நமது நாசியின் வழியே
உள்ளே போவதும்
வெளியே வருவதுமாக
இருக்கும் காற்றுதான்
மூச்சுக்காற்று என்று
அனைவருக்கும்
தெரியும். ஆனால் நாம்
ஒரு நாளைக்கு எத்தனை
முறை
மூச்சுவிடுகிறோம்? ஏன்
நமக்கு ஒரு
நாசித்துளைக்கு
பதிலாக இரு
நாசித்துளைகள் உள்ளன?

ஏன் நமக்கு ஒரு
கண்ணுக்கு பதிலாக இரு
கண்கள் உள்ளன? ஏன் நமக்கு
ஒரு காதுக்கு பதிலாக
இரண்டுக் காதுகள்
உள்ளன? என்று
சிந்தித்தோமா?

இரண்டு கண்கள், காதுகள்
இருந்தாலும் பார்க்கும்
பார்வையும், கேட்கும்
சத்தமும் ஒன்றாகவே
உள்ளன! பிறகு ஏன்
இரண்டு? ஒன்று
பழுதானால்
இன்னொன்றை
பயன்படுத்திக்கொள்ள
இறைவன் நமது உடலில்
அமைத்த கூடுதல்
பாதுகாப்பு (Step-in)
அவையங்கள் என்று
கூறலாம். ஆனால்
மூக்கிற்கு ஏன் இரண்டு
துவாரங்கள்? இரண்டு
துவாரங்களுமே ஒரே
செய்கையினை
செய்கிறதா? என்று
ஆராய்ந்தால், இரண்டு
துவாரங்களும்
வெவ்வேறு இரண்டுவித
செய்கையினை செய்வதை
அறியலாம். மேலும்
மூன்றாவதாக ஒரு
செயலையும் செய்வதைக்
காணலாம்! எப்படி?
நமது முன்னோர்கள், நமது
இடதுபுறம் உள்ள
நாசித்துவாரத்தை
'இடகலை' / 'சந்திரகலை'
என்றும் வலது புறம் உள்ள
நாசித்துவாரத்தை
'பிங்கலை' / சூரியக் கலை
என்றும் கூறுவர்.

1. மூக்கின் இடது
நாசிதுவாரத்தின் வழியே
நடைபெறும் சுவாசம்
இடகலை எனப்படுகிறது.
இதற்கு "சந்திரகலை"
என்றொரு பெயரும்
உண்டு.

2. மூக்கின் வலது
நாசியில் நடைபெறும்
சுவாசம் பிங்கலை
எனப்படுகிறது. இதற்கு
சூரிய கலை என்றொரு
பெயரும் உண்டு.

3. இரண்டு நாடிகளிலும்
ஒருசேர நடக்கும்
சுவாசத்திற்கு
சுழுமுனை என்று பெயர்.
ஆக இம்மூன்றுச்
செயல்களையும் நமது
நாசி செய்துவருகிறது.
இதனை 'சரவோட்டம்'
என்பார்கள். இரண்டு
ஆட்காட்டி விரல்களையும்
மூக்கின் நடுத் தண்டில்
பக்கத்திற்கு ஒன்றாக
வைத்து இயல்பாய் மூச்சை
விட எந்த நாசியில் மூச்சு
ஓடுகிறது என்பதை
எளிதாய் கண்டறியலாம்.

இந்த சர ஓட்டம்
இயற்கையாகவே சுமார்
ஒன்றறை
மணித்துளிகளுக்கு
ஒருமுறை மாறி மாறி
இயங்கும். இம்மாற்றத்தை
நமது விருப்பத்திற்கு
இனங்க மாற்றுவதுதான்
'கலை' என்கிறோம்.

சரம் தெரிந்தவனிடம்
சரசமாடாதே
சரம் பார்ப்பான் பரம்
பார்ப்பான்
இவை முன்னோர் வாக்கு.
சரம் தெரிந்தவனிடம்
சரசமாடாதே என்பதன்
பொருள் சர கலையை
இயக்கத்தெரிந்தவனிடம்
சரசம் என்று
விளையாட்டுத் தனமாக
நடந்துக்கொண்டால் சரம்
கற்றவன் சீறி சினந்து
வாக்கு விட்டால் அது
அப்படியே பலித்துவிடும்.

ஏனென்றால் பஞ்சபூத
சக்திகள் அனைத்தும்
சரகலையில் தேர்ச்சி
பெற்றவனின் உடல், மனம்,
வாக்கு மூன்றிலும்
ஒருங்கிணைந்து ஆட்சி
செய்யும்.

நீண்டநாள் வாழ நாம்
என்ன செய்ய வேண்டும்?

நாம் ஒரு நாளைக்கு 21600
முறை சுவாசம்
செய்யவேண்டும்.

எனவேதான் வடலூர்
ஞானசபையில் இதனை
உணர்த்தும் வகையில்
நம்பெருமான்,
ஞானசபையினை சுற்றி
21600 வளையங்கள் கொண்ட
இரும்புச் சங்கிலியினைப்
பொருத்தியுள்ளார்கள்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும்,
1 மணி நேரத்திற்கு 900
மூச்சும்; 1 நாளிற்கு 21,600
மூச்சும் ஓடுகின்றது.

உயிர்மெய்யெழுத்துக்கள்
216 என்பது இந்த 21,600
மூச்சுக்களையே
குறிக்கும் ஒரு மனிதன்
தன் வாழ்நாளில் தினமும்
21,600 மூச்சுக்கு மிகாமல்
உபயோகம் செய்தால்
அவனுடைய ஆயுள் 120
ஆண்டுகளாகும்.

விளங்கிடு முந்நூற்று
முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு
நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம்
வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ
நின்றே. (திருமந்திரம்)
விளக்கமிக்க முந்நூறும்,
முப்பதைப் பத்தினால்
பெருக்கிக் கிடைத்த
முந்நூறும் சேர்ந்து
அறுநூறு ஆகும்.

இரட்டியதாறு என்பது
ஆறும் ஆறும் பெருக்க
முப்பத்தாறு ஆகும்.
இம்முப்பத்தாறை
அறுநூறோடு பெருக்க
21,600 ஆகும். இதுவே
ஒருநாள் நாம்
சுவாசிக்கும் சுவாசங்கள்
என்று திருமந்திரம்
கூறுகிறது.

ஆனால் உட்கார்ந்திருக்கும்
போது 12மூச்சும், நடக்கும்
போது 18 மூச்சும்,
ஒடும்போது 25 மூச்சும்,
தூங்கும் போது 32
மூச்சும,; உடலுறவின்
போதும், கோபம் முதலான
உணர்ச்சிகளில் சிக்கும்
போது 64 மூச்சும் 1
நிமிடத்தில் ஓடுகின்றன.

இந்த மூச்சினுடைய
அளவு எவ்வளவு
மிகுதியாகிறதோ
அதற்கு தகுந்தாற்போல்
ஆயுள் குறைகிறது.

அதனால்தான்
வள்ளற்பெருமான், நாம்
உடற்பயிற்சி செய்ய
வேண்டுமெனில்
'மெல்லென நடைபயில
வேண்டும்' என்று
கூறுவார். அதாவது
நமது மூச்சுக்காற்று
வெளியில் அதிக அளவில்
செல்ல அவர்
அனுமதிக்கவில்லை.

மேலும் நம்பெருமானார்,
'ஒருவன் ஒரு நாளைக்கு
ஒரு மணிநேரம் உறங்க
பழக்கப்படுத்திக்கொண்டால்
, அவன் 1000 வருடங்கள்
வாழலாம்' என்றும்
கூறுவார். நாம் சும்மா
உட்கார்ந்திருந்தால் 12
மூச்சுதான் செலவாகும்,
அதுவே உறங்கினால் 32
மூச்சு செலவாகிறது.

அதாவது, நாம்
தூங்கும்போது 20 மூச்சு
ஒரு நிமிடத்திற்கு நட்டம்
அடைகிறது. எனவே,
'தூங்காதே தம்பி
தூங்காதே'! அதுபோல்
ஒருவன் கோபப்பட்டால் 52
மூச்சு ஒரு நிமிடத்திற்கு
நட்டமாகிறது (64-12=52).

எனவே, 'உனது கோபம் உன்
எதிரிக்கு இலாபம்'
என்பதை அறியவேண்டும்.
கோபம் என்பது
'சேர்ந்தாரைக் கொல்லி'
என்பார் வள்ளுவரும்.

அதுபோல் உடலுறுவு
செய்யும்போதும் நமக்கு
52 மூச்சு ஒரு
நிமிடத்திற்கு
நட்டமாகிறது. எனவே
வள்ளலார், இதில் மாதம்
இருமுறை மட்டுமே
இல்லறத்தான்
ஈடுபடவேண்டும்
என்கிறார். 'விந்து
விட்டான் நொந்து
கெட்டான்' என்பார்களே
அது இதற்காகத் தான்.

ஒரு மனிதன் ஒரு
நிமிடத்திற்கு 15 முறை
சுவாசித்தால் அவனுக்கு
விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு
நாளுக்கு 1440
நிமிடங்களாகும்
(60x24=1440)}
மேற்கண்டவாறு
கணக்கிட்டால் ஒரு மனிதன்,
100 ஆண்டுகள் வாழ்ந்தால்,
அவன் ஒரு நிமிடத்திற்கு 15
மூச்சுகள் விட்டுள்ளான்,
93 ஆண்டுகள் வாழ்ந்தால்,
அவன் ஒரு நிமிடத்திற்கு 16
மூச்சுகள் விட்டுள்ளான்,
87 ஆண்டுகள் வாழ்ந்தால்,
அவன் ஒரு நிமிடத்திற்கு 17
மூச்சுகள் விட்டுள்ளான்,
80 ஆண்டுகள் வாழ்ந்தால்,
அவன் ஒரு நிமிடத்திற்கு 18
மூச்சுகள் விட்டுள்ளான்,
73 ஆண்டுகள் வாழ்ந்தால்,
அவன் ஒரு நிமிடத்திற்கு 19
மூச்சுகள் விட்டுள்ளான்,
66 ஆண்டுகள் வாழ்ந்தால்,
அவன் ஒரு நிமிடத்திற்கு 20
மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு
ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம்
ஆயுளில் 7 வருடங்களை
இழக்கிறோம் என்பதனை
கவனத்தில்
கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால்
அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால்
அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால்
முடிவேயில்லை (இது
சித்தர்களால் மட்டுமே
முடியும்)
ஒரு மனிதன் ஓம்காரம்
சொன்னால் அவனுடய
சுவாசத்தின் நீளம்
குறைந்து சுவாசம் மிச்சப்
படுகிறதாம். ஆகையால்
பிரணவ மந்திர (ஓம்) ரகசியம்
அறிந்தவர்களும் நீண்ட நாள்
வாழலாம்.

'மூன்றெழுத்தில் என்
மூச்சிருக்கும்'! (அ+உ
+ம=ஓம்).

ஏற்றி இறக்கி இருகாலும்
பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும்
கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங்
கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங்
குறியதுவாம்
(திருமந்திரம்)

இரு நாசிகள் வழியே
ஏறியும் இறங்கியும்
இயங்கும் காற்றினைக்
கணக்காக ஆளும் திறமை
கொண்டோர், எமனை
அருகில் வராமல் விலக்கி
வைக்கலாம் என்கிறார்
திருமூலர்.

ஊமைக் கிணற்றகத்துள்ளே
உறைவதோர்
ஆமையின் உள்ளே
யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே
வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ
ராயிரத் தாண்டே.
(திருமந்திரம்)

இவ்வுலகில் மிக அதிக
காலம் உயிர் வாழும்
உயிரினம் ஆமை. அது ஒரு
நிமிடத்திற்கு மூன்று
முறை தான்
சுவாசிக்கும். இதன்
ஆயுள் சராசரியாக 200
வருடங்களுக்கும் மேல். 1000
வருடங்கள் வயதுள்ள ஓர்
கடலாமை சமீபத்தில்
இறந்துவிட்டதாக
தொலைக்காட்சியில்
பார்த்த ஞாபகம் வருதே!

ஆமையை விட ஆயிரம்
ஆண்டு கூடுதலாக வாழ
வேண்டுமானால் - என்ன
செய்ய வேண்டும் என்று
திருமூலர் கூறுகிறார்.

வாயில்லாக் கிணற்றுள்
உறையும் பிரணவ
வழிபாட்டாளரிடம்
உறைப்புடன் தங்கும்
நின்மல சாக்கிரம் முதலிய
5 நிலைகள் உண்டு.

அந்நிலையில் ஆன்ம
ஒளியில் நழுவா அறிவு
ஒடுங்குமேல் அவர் பிரணவ
உடலுடன் மேலும் ஒரு
ஆயிரம் ஆண்டு உயிர்
வாழலாம்.

இதிலுள்ள தத்துவ
விஷயங்களை மறந்து
விட்டு ஆமையை விட
ஆயிரம் ஆண்டு உயிர்
வாழ்வது எப்படி என்ற
வரிகளை மட்டும்
கவனிக்கவும். ஆமை தான்
உலகில் நீண்ட காலம்
வாழும் பிராணி
என்பதைத் தமிழர்கள் 8000
வருடங்களுக்கு முன்னரே
அறிந்திருந்தனர். இதைக்
கண்டுபிடித்து எழுதி
வைக்கக் கூட ஒருவர் பல
தலைமுறைகளுக்கு
வாழ்ந்திருக்க வேண்டும்.

அல்லது சரியான தகவலைப்
பரப்பும் உத்தி
இருந்திருக்க வேண்டும்.
ஆமைதான் உலகில் நீண்ட
நாள் உயிர்வாழும்
பிராணி என்று
அறிவியலார்கள்
தற்காலங்களில்தான்
கண்டுபிடித்தார்கள
வெற்றிக்கு வழிவகுக்கும்
சுவாசம்:

விதியை மாற்றும் அறிவை
அடைந்தவர்கள் சித்தர்கள்
என்றோம். நாளும்
நடைபெறும் நடப்புகளை
தங்கள் சுவாசம்
மூலமாகவே தங்கள்
விருப்பப்படி
நிறைவேற்றிக்கொள்ள
எளிய முறைகளைக் கண்டு
கூறியிருக்கிறார்கள் நம்
சித்தர்கள். இதற்குச் ‘சரம்
பார்த்தல்’ என்று பெயர்.

‘ஞானசர நூல்’ எனச் சரம்
பார்த்தல் பற்றியும் நமது
வாழ்வில் நாம் விரும்பும்
வெற்றியை விரும்பிய
விதமே பெறும் ஆற்றலைப்
பெறும் வழிகளையும்
நமக்காக விட்டுச்
சென்றிருக்கிறார்கள்.

ஆனால் நாமோ, “தொடத்
தொட தங்கமாகும்
வித்தையை” கையில்
வைத்துக்கொண்டே
வறுமையில் நம் வாழ்வை
ஒட்டி வருகிறோம்.

கேட்கில் இடம்: தூது ஆடை,
அணி பொன்பூணல்
கிளர்மனம், அடிமைகொளல்,
கீழ்நீர் கிண்டல்
வாழ்க்கை மனை எடுத்தல்,
குடிபுகுதல், விற்றல்
மன்னவரைக் காணல்,
உண்மை வறுவல், சாந்தி
வேட்கை, தெய்வப் பதிட்டை,
சுரம் வெறுப்புத் தீர்த்தல்,
விந்தைப் பெறுதல், தனம்
புதைத்தல் மிகவும் ஈதல்,
நாடகமல மலர் முகத்தாய்
நரகம் தீர்த்தல்
நன்றேயாம் இவ்வை எல்லாம்
நயந்து பாரே!
சந்திர கலை அதாவது
இடது நாசியில் மூச்சு
ஓடும் போது செய்யத்தக்க
காரியங்களின் பட்டியல்
இது. செய்தால் இவற்றில்
வெற்றி நிச்சயம் என ஞான சர
நூல் 8 கூறுகிறது.

பார்க்கில் வலம்: உபதேசம்,
வித்தை, சேனை,
படையோட்டல், பயிர்செட்டுக்
களவு, சூது,
பேர்க்கவொணா வழக்குக்
கரிபரி, தேரூர்தல்
பிறங்கும் எழுந்திடுதல்,
சங்கீதம், பாடல்
வார்த்தை, பகைப் பக்கம்
கோள், பசாசு தீர்த்தல்,
மந்திரஞ் சாதித்தல்,
மருந்துண்ணல், உறங்கல்,
கோத்த புன்னாடல்,
கொல்விடங்கள் தீர்த்தல்
கொடும்பிணி, தம்மென்பன
யோகங் குறிக்கும் தானே
- ஞான சர நூல் 9

இவை சூரிய கலை
எனப்படும் வலது நாசியில்
சுவாசம் ஓடும் போது
செய்யத்தக்கவையாகும்.

இந்தச் சர ஞானமும் சரிவர
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு,
முறைபடுத்தப்படுமானால்
தமிழர் சமுதாயம் உலகின்
வளமான சமுதாயமாக
ஆகிவிடும். நமது
பாரம்பரிய அறிவு நமக்கு
பயன்படாமல் இன்னும்
இருக்கலாமா?

சர கலை ரகசியங்கள் தொடரும்.....

_சித்தர்களின் குரல் shiva shangar