Saturday, 26 November 2016

ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?

ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?
பஸ்களில் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செல்வது போல், ரயிலில் செய்ய முடியாதது ஏன்...??

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற சீட் ஒருமுறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்புவதை கூட காதுப்பட கேட்டிருப்போம்.

ஆனால், இது ஏன், எதனால் பஸ்களில் விருப்பமான சீட் புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?
உண்மையில் இதற்கு பின்னாடி இருப்பது இயற்பியல் காரணம்...

நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் புக் செய்யலாம். ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம்.
ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பதின் பேரில் இருக்கை புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.
 
கோச்!
பொதுவாக ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.
 
டிக்கெட் புக் ஆகும் முறை!
நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.
பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.
 
புவியீர்ப்பு மையம்!
ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.
 
கடைசி நேரத்தில்...
கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம்.
 
சற்று யோசியுங்கள்!
நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு.
இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது....

#படித்ததில்_பிடித்தது

Monday, 21 November 2016

பாசம்

தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.

அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,

சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் –  என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம்.

அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட  விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு  உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன்   – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை  என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்

பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்..
✳✳✳✳✳✳
🙏🙏🙏🙏🙏🙏

Tuesday, 15 November 2016

அபூர்வ பஞ்சநத நடராஜ பெருமான

அபூர்வ பஞ்சநத நடராஜ பெருமான் திருமேனி கொண்ட
வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்கவேண்டிய தலம்.
ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி.இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன.இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது.
சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.
பாறைகளின் சிறப்பு:- ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது) என்ற தலத்தில் உள்ள அபூர்வ நடராஜ பெருமான் திருமேனி.

Saturday, 12 November 2016

நல்ல மதிப்பெண்கள் பெற,

Page - 48 -

*ஸ்ரீ அகத்தியர் வாக்கு*

பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் *மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற, பரிகாரம் சொல்லுங்கள்:*

தேர்வைக்கண்டு ஒரு மாணவன் பயப்படுகிறான் என்றாலே,

அவன் அங்கேயே தோற்றுவிட்டான் என்றுதான் பொருள்.

அல்லது பயப்படும்படியான ஒரு தேர்வு முறையை மனிதன் ஏற்படுத்தி இருக்கிறான் என்றால் அந்த மனித சமுதாயமே தோற்று விட்டதாகப் பொருள்.

*கல்வியை கற்றுக்கொள்ள பயம் எதற்கு?*

புதிதான ஒரு விஷயத்தை மனிதன் *அனுதினமும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறான்.*

குழந்தை எப்படி கற்றுக் கொள்கிறது?

*ஊமையாகப் பிறக்கின்ற ஒரு குழந்தை எவ்வாறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்கிறது?*

யாராவது ஆசான் வந்து போதிக்கிறானா?
ஏன்?

*கூர்ந்த கவனம்.*

*வேறு புற சிந்தனைகள் ஏதுமில்லை.*

*பரிபூரண கவனம், தன் செவியில் என்ன விழுகிறது?* என்பதை சரியாக கிரகித்துக் கொள்கிறது குழந்தை.

*குழந்தையாக இருக்கின்ற பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறுதான்.*

அப்படியிருக்கும் பட்சத்தில் புதிதாக ஒரு செய்தியை தெரிந்து கொள்ள,

தெரிந்துகொண்டு *அந்த வழியில் கடமை ஆற்றத்தான் பள்ளிக்கு செல்கிறோம் என்ற உணர்வு பலருக்கும் இருப்பதில்லை.*

மாணவர்கள் தொடர்பான குறைகள் ஒரு புறமிருக்கட்டும்.
யாரும் சொல்லித் தராமலேயே ஒரு கலைக்காட்சியை மாணவன் சென்று பார்க்கிறான்.

*யாரும் உபதேசம் செய்யாமலேயே அதன் விளக்கங்களைப் புரிந்து கொள்கிறான்.*

ஆனால் பாடத் திட்டம் என்று வரும்பொழுது மட்டும் பலரால் அதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

*இங்கே சிந்திக்க வேண்டும்.*

*புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறுவது ஆசிரியரின் கடமை.*

என்னதான் எடுத்துக் கூறினாலும், புரிந்து கொள்ளாமல் இருப்பது என்பது ஒரு மாணவனின் மதி நிலை.

*இதற்கு பக்தி வழியாக ஹயக்ரீவர் வழிபாட்டையும், அன்னை கலைவாணி வழிபாட்டையும் நாங்கள் கூறினாலும்,*

*எந்த ஒரு விஷயமும் ஆர்வத்தைத் தூணடும் விதமாக இருக்க வேண்டும்.*

நன்றாக கவனிக்க வேண்டும்.

சிறுவர்கள் அயர்வு காலத்திலே வாகனத்தை கண்டால் ஆர்வமாகப் பார்ப்பார்கள்.

தந்தைக்குத் தெரியாமல் வாகனத்தை எடுத்து ஒட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
*யாரும் சொல்லித் தராமலேயே இதை ஏன் செய்கிறார்கள்?*

அதன் மீது உள்ள ஒரு ஈர்ப்பு.

*அப்படி கல்வியின் மீது ஒரு மனிதனுக்கு ஈர்ப்பு வர வேண்டும்.*

ஒரு மாணவனுக்கு ஈர்ப்பு வர வேண்டும்.

*அப்படி வரும் வண்ணம் கல்வி முறையை போதித்தால் எல்லா மாணவர்களுமே அறிவில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள்*

நாளை தொடரும்.....

......49

🌹 *நல்லதே நடக்கிறது*🌺

Tuesday, 8 November 2016

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!



 ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கற்கள், அதிர்ஷ்ட தெய்வங்கள் இருக்கும். அதுபோலவே நட்சத்திரத்திற்கும் அதிர்ஷ்ட தெய்வங்கள், கற்கள், கோயில்கள் என அனைத்தும் இருக்கும்.

 தெய்வதிற்கும் நிகரானது எதுவுமில்லை. எத்தனை சோதனைகள் வந்தபோதிலும் இறைவனை வணங்குவதே ஒரே வழியாகும். ஈசனை வணங்கினால் எந்த துன்பமும் நேராது. சிவ சிவ என்று சொன்னால் சிக்கல்கள் தீரும். ஓம் நமசிவாய, என்ற சொல்லுக்குரிய சிவனை எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ரூபங்களில் பார்ப்பது சிறந்தது என்று பார்ப்போம்.

🌀 அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்.

🌟 பரணி - சக்தியுடன் கூடிய சிவன்.

🌀 கிருத்திகை - சிவன் தனியாக.

🌟 ரோகிணி - பிறை சுடியப் பெருமான்.

🌀 மிருகசீரிஷம் - முருகனுடைய சிவன்.

🌟 திருவாதிரை - நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்.

🌀 புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்.

🌟 பூசம் - நஞ்சுண்டும் சிவன்.

🌀 ஆயில்யம் - விஷ்னுவுடன் உள்ள சிவன்.

🌟 மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்.

🌀 பூரம் - அர்த்தநாரீஸ்வரர்.

🌟 உத்திரம் - நடராஜ பெருமான் - தில்லையம்பதி.

🌀 அஸ்தம் - தியாண கோல சிவன்.

🌟 சித்திரை - பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்.

🌀 சுவாதி - சகஸ்ரலிங்கம்.

🌟 விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்.

🌀 அனுஷம் - இராமர் வழிபட்ட சிவன்.

🌟 கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்.

🌀 மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்.

🌟 பூராடம் - சிவ சக்தி கணபதி.

🌀 உத்திராடம் - ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்.

🌟 திருவோணம் - சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்.

🌀 அவிட்டம் - மணக்கோலத்துடன் உள்ள சிவன்.

🌟 சதயம் - ரிஷபம் மீது சத்தியுடன் உள்ள சிவன்.

🌀 புராட்டாதி - விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்,

💥உத்திராட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்,

🌟ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்,

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள சிவரூபங்களை வழிபட்டு வந்தால் எப்போதும் துன்பம் இல்லை, 

ஈசனே போற்றி ,

என் குல தெய்யவமே போற்றி,

மயனே போற்றி,

மனிதனின் ஆத்ம சக்தியே போற்றி....

Monday, 7 November 2016

உயிரின் எடை

🖥*உயிரின் எடை எவ்வளவு தெரியுமா?*

1900களில் வாழ்ந்த *Duncan MacDougall* என்ற மருத்துவருக்கு ஒரு சந்தேகம், மனித உடலில் இருந்து உயிர் பிரிகிறது என்கிறார்களே.

*உயிர் என்றால் என்ன?* *அது எப்படி இருக்கும்?*
*அது என்ன எடை இருக்கும்?*

என்ற கேள்விகளுக்கு பதில் தேட அது சம்பந்தமான ஆய்வுகளில் ஈடுபட்டார். இறக்கும் தருவாயில் இருப்பவர்களை அருகிலிருந்து அவதானித்தார்.

அவர்களை *எடைமேடையில்* வைத்து உயிர் பிரிவதற்கு சற்றுமுன் என்ன எடை என்பதை குறித்துக்கொண்டார். உயிர் பிரிந்த உடனே என்ன எடை என்பதை குறித்துக்கொண்டார்.

இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது என்ன ஒரு ஆச்சர்யம் ஒருவர் இறக்கும் போது சிறிய அளவில் எடை குறைகிறது. அப்படியென்றால் அது பிரியும் உயிரின் எடையாகத்தான் இருக்கவேண்டும்.

இப்படி பலரிடம் ஆய்வு செய்து இறுதியாக Duncan MacDougall தன் ஆய்வரிக்கையை வெளியிட்டார் “உயிரின் சராசரி எடை 21 கிராம்”.

இப்ப விசயத்துக்கு வருவோம்.

உயிர் என்றால் என்ன?
அறிவியல் உலகிற்கு இன்றுவரை சவாலாக இருக்கக்கூடிய ஒன்று, இன்னும் கண்டறிந்தபாடில்லை. ஆன்மீகத்தை பொருத்தவரை அது ஆத்மா, அதற்கு அழிவில்லை, இறக்கும் போது உடலயை விட்டுபிரிந்த ஆத்மா தான் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் புதிய உடலைச் அடையும், மறுபிறவி எடுக்கும். என்பது நம்பிக்கை.
இப்ப ஒரு கற்பனை உலகிற்கு வருவோம்.

நான் கூறப்போவதை அப்படியே காணொளியாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் படுத்திருக்கிறான், அவன் அருகே சொந்த பந்தங்கள் அழுதுகொண்டிருக்கின்றன. அவன் உயிர் மெல்ல மெல்ல அவன் உடலை விட்டு பிரிகிறது.

இப்ப அந்த உயிருக்கு ஒரு உருவத்தை கொடுப்போம். அந்த உயிரை “Memory Card” ஆக கற்பனை செய்து கொள்வோம். அதன் எடை 21 கிராம் என எடுத்துக்கொள்வோம் அதில் எவ்வளவு கொள்ளளவு இருக்கும்?

ஒரு கிராம் DNAவில் கிட்டத்தட்ட 720.896 TB தகவல்களை சேமிக்கலாம் அப்படியானால் 21 கிராமில் 15138.816 TB தகவலை சேமிக்கலாம். அந்த வகையில் பிரிந்து செல்லும் “Memory Card” அதாங்க உயிர் அதன் கொள்ளளவு 15138.816 TB என்று எடுத்துக்கொள்வோம் அதில் அப்படி என்னதான் இருக்கு என்று திறந்து பார்த்தால், அடடா அந்த மனிதரை பற்றிய அத்தனை தகவல்களும் தனி தனி folder ஆக அதில் இருக்கின்றன.

ஒரு folderல் அவர் பிறந்து கண் விழித்த நிமிடத்தில் தொடங்கி கடைசியா கண்மூடிய நிமிடம் வரை அவர் கண்ணால் கண்ட காட்சிகள் ஒலியோடு அத்தனையும் படமாக அப்படியே இருக்கிறது.

இன்னொரு folderல் அவர் சிந்தித்த விசயங்கள் அத்தனையும் Document ஆக இருக்கிறது. இப்படி அவர் வாழ்கையில் செய்த அத்தனை செயல்களும் பதிவாகியிருக்கின்றன.

சரி இந்த “Memory Card” என்னதான் ஆகுதுன்னு பார்ப்போம். அது அப்படியே கரைந்து wifi தொழில்நுட்பத்தில் நிலவுக்கு செல்கிறது. நிலவென்றால் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய மேற்ப்பரப்பிற்கு அல்ல.

நிலவிற்கு உள்ளே, அங்கு ஒரு பெரிய விண்கலம் அதில் பரபரப்பாக இயங்கும் தொழிற்ச்சாலை, ஒரு பக்கம் “Memory Card” கள் குப்பைபோல குவிந்து கிடக்கின்றன. ஒருபக்கம் அதிலிருக்கும் தகவல்கள் கணிணியில் பதிவிறக்கம்....🖥 செய்யப்படுகிறது. அப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட தகவல் ஒரு Softwareல் upload செய்யப்படுகிறது, Software வேலை செய்ய தொடங்கிறது.

மென்பொருளுக்கு அளிக்கப்பட்ட கோடிங் படி அதில் இருக்கும் தகவல்களை ஆராய்ந்து இவ்வளவு % உருப்படியான தகவல்கள் என்ற முடிவை சொல்கிறது.

அந்த முடிவு ஒவ்வொரு Memory Card க்கென்று இருக்கும் தனித்தனி அடையாள எண்ணால் குறிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

அதன் பின் அந்த Memory Card யை Format செய்கிறார்கள் மேலும் சில பராமரிப்பு பணிகளுக்கு பின் அந்த Memory Cardயை மீண்டும் Wifi தொழில்நுட்பமாக மாற்றி பூமிக்கு அனுப்பப்படுகிறது.

அந்த நேரத்தில் பெண்ணின் வயிற்றில் இருக்கும் உடல் வளர்ச்சியடைந்து கருவிற்குள் அந்த Memory Card நுழைக்கப்படுகிறது. அதன் செயல்பாடு மறுபடியும் தொடங்கிகிறது. இதே போல் ஒரு Memory Cardக்கு 7 வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.

7 முறையும் அதிக சதவிகிதம் உருப்படியான தகவல்களை கொண்டுவரும் Memory Cardகளை தனியாக பிரித்து மெருகேற்றி பூமியை விட அற்புதமான வேறு உலகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதே போல் 7 முறையும் மிகக்குறைந்த சதவிகிதம் உருப்படியான தகவல்களை கொண்டுவரும் Memory Cardகளை தனியாக பிரித்து சுத்தமாக அழிப்படுகிறது.
.
இதுவே நிஜ உலகில் நடக்க வாய்ப்பிருக்கா?
இந்த கதையையே வேறு வடிவில் நீங்கள் கேள்விபட்டதுண்டா?🖥

நாம் எங்கே செல்கிறோம்

🖥*~நாம் எங்கே செல்கிறோம்~*

*_சற்றே யோசிக்கலாமே_*

சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில்,  *'அம்மா’*  என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,
*_ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!_*  என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும்  ~எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை~.

*_'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’_*  என்று சொன்ன  *பாட்டி*  ~வானிலை அறிவியல் படித்தது இல்லை~.

*_ஆடிப் பட்டம் தேடி விதை_*  என இன்றைக்கும் சொல்லும்  *வரப்புக் குடியானவன்* ~விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை~.

*_மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்_*  எனப் பாடிய *தேரன் சித்தர்*  ~மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை~.

*_செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்_*  எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் *சடையனுக்கு*  60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த ~வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை~.

_அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?_

_அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?_
_இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?_

*ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு*.

*வள்ளுவன்*
   சொல்லும்
*_மெய்ப்பொருள் காணும் அறிவும்_*

*பாரதி*
   சொன்ன
*_விட்டு விடுதலையாயிருந்த மனமும்_*
   சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

*_மம்மி_*
   எனக்கு
_வொயிட் சட்னிதான்_
   வேணும்,
~க்ரீன் சட்னி~
வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
_'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’_ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், *_'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’_*
எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

   _ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை_.

இந்த _மௌனங்களும், அவசரங்களும்_ ~தொலைத்தவை தான்~ அந்த *அனுபவப் பாடம்!*

   *தொலைக்காட்சி விளம்பரங்கள்* சொல்லிக் கொடுத்து
*_புரோட்டின், கலோரி, விட்டமின்_*  பற்றிய *ஞானம்*  பெருகிய அளவுக்கு,
~'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு~;
_எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி_.
*பலாப் பழம் மாந்தம்*.
~பச்சைப் பழம் கபம்~·
*~புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்~*
என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

   ~'அதென்ன சூடு, குளிர்ச்சி?~
அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !
இந்த *தெர்மாமீட்டர்ல*  உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என _இடைக்கால அறிவியலிடம்_ ~தோற்றுவிட்ட~  அந்தக் கால *அறிவியலின் அடையாளங்களை,*  _வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது._

*_~விளைவு?~_*

   *'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’*  எனும் ~அம்மா~,
   *'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’*  என்று அக்கறை காட்டும் ~அப்பா.~

   *~'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’~*  என எரிந்துவிழும் *எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்* படித்த ~அண்ணன்~  போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.

   *_'வயிறு உப்புசமா இருக்கா?_*
   மாந்தமாயிருக்கும் கொஞ்சம் *ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’*  என்ற _அனுபவத்துக்குள்_ ~அறிவியல் ஒளிந்திருக்கிறது.~

   *ஏழு மாதக் குழந்தைக்கு ~மாந்தக் கழிச்சல்~ வந்தபோது,*  *_வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த ~தாய்க்கு இன்று திட்டு~ விழுகிறது_*.

   *~'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?~*
_குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’_ என்று ~கரித்துக் கொட்டுகிறார்கள்.~

   *வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள ~அசரோன்~ என்ற  பொருள் _நச்சுத்தன்மைக் கொண்டது_  என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த ~அசரோன்காணாமல் போய்விடும்~ என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.*

_பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும்_ மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?
*'பிள்ளை-வளர்ப்பான்’!*

   *'சளி பிடிச்சிருக்கா?* _கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க_.
_மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;_

   *மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?*
_ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;_

   *_சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;_*

   *வாய்ப் புண்ணுக்கு* _மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;_

   *பித்தக் கிறுகிறுப்புக்கு*
_முருங்கைக்காய் சூப்,_

   *மூட்டு வலிக்கு*
_முடக்கத் தான் அடை,_

   *மாதவிடாய் வலிக்கு*
_உளுத்தங்களி,_

   *குழந்தை கால்வலிக்கு*
_ராகிப் புட்டு,_

   *வயசுப் பெண் சோகைக்கு*
_கம்பஞ்சோறு,_

*வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு*
_வாழைத்தண்டுப் பச்சடி’_
     என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்
சில நேரம்...🖥 ~மருந்துகள்;~
பல நேரம் _மருத்துவ உணவுகள்._

     *_காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி._*

      *சுழியத்தைக்* _(ஜீரோவை)_
கண்டுபிடித்து *_இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது_*.

   *'பை’*  என்றால் _22/7_ என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

   *'ஆறறிவதுவே அதனொடு மனமே’*
என மனதின் முதல் சூத்திரத்தை _சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு_ 30 தலைமுறைகள் முன்பே சொன்ன
*_தொல் காப்பியம்_*
எழுதிய ஊர் இது.

   *~இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?~*